ஹ்ருத்திக் ரோஷன் குடும்பச் சிக்கலுக்குக் காரணம் கங்கனாரணாவத்தா?

கிரிஷ் 3 படத்தின் உருவாக்கத்தின் போதுதான் ஹ்ருத்திக்கிற்கும் அவரது மனைவிக்கும் இடையில் பிரச்னை நடந்து இருவரும் பிரிந்தனர். அதற்குக் காரணம் கங்கனா ரணாவத் என தற்போது சர்ச்சை உருவாகியுள்ளது.

'மொஹஞ்ச தாரோ' படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் ஹ்ருத்திக்கிடம் நீங்கள் கங்கனா ரணாவத்துடன் டேட்டிங்கில் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே என்ற கேள்வி வைக்கப்பட, அதற்கு கண்டிப்பாக இல்லை என தலையசைத்த ஹ்ருத்திக் "எப்படி இப்படியெல்லாம் எந்த அடிப்படையும் இல்லாமல் ஒரு வதந்தி பரப்புகிறார்கள்" எனக் காட்டமாகக் கேட்டுள்ளார்.

கிரிஷ் 3 படத்தில் கங்கனாவும் இணைந்து நடித்த நிலையில் அப்போது இவர்களிடையே நட்பு இருந்ததாகவும், மேலும் கங்கனாவால் தான் ஹ்ருத்திக் குடும்பம் பிரிந்ததாகவும் செய்திகள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.

அப்போதிருந்தே இருவருக்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டு இப்போது வரை தொடர்வதாகச் சொல்லப்பட்டு வந்த நிலையில் தான், ஹ்ருத்திக் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!