வெளியிடப்பட்ட நேரம்: 15:36 (02/11/2015)

கடைசி தொடர்பு:13:03 (03/11/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

மைப்புல முதல் முறையாக பெருந்தலைகளுக்கு பரிசு குடுக்கப்போறாங்களாம். என்ன புதுசா இருக்கு என்றால் எல்லாம் அமைப்பு செயல் படுதுன்னு காட்றதுக்கான நடவடிக்கைதான்னு சொல்றாங்க நம்ம கோலிவுட் குறும்புகள். ஆமா உச்சம் ஊர்ல இல்லையே அவரோட பரிசு என்றால் அவர் சார்பா அவங்க வீட்டுல யாராவது வாங்கிக்குவாங்களாம். அதெல்லாம் இருக்கட்டும் முத்த உறுப்பினர்கள்னா அந்த தமிழ்நாட்டு மூத்த சாரும், மேடமும் முன்னாள் உறுப்பினர்களாச்சே. அப்போ அவங்களுக்கும் தருவாங்களா என்றால் ஷ்ஷ்ஷ்ஷ்...இப்படி எதாவது டகுல்பாஸ் வேலை காமிச்சாதான் பயக மெரலுவாய்ங்க...

ரே பாட்டு ஓஹோன்னு ரீச்சு... இப்படி ஆகி விட்டனர் நாயகிகள். ஒரு படத்துக்கு 40 முதல் 45 நாட்கள் கால்ஷீட்டுகள் கொடுத்து உயிரை விட்டு நடித்தாலும் ஒன்று இரண்டு கோடிகளை தாண்டுவதில்லை என்ற நிலையில் தற்போது நடிகைகள் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் ஆடுவதை மீண்டும் வரவேற்க ஆரம்பித்துவிட்டனர். இப்படித்தான் மொழி பாரபட்சம் பாராமல் நடனம் ஆடுகிறார் மூத்த வாரிசு நடிகை. ஆமாம் ஓரிரு நாட்களில் கிட்டத்தட்ட ஒரு படத்தின் சம்பளத்தில் முக்கால்வாசியை வாங்கிவிடலாமே. இப்போது அந்த லிஸ்டில் தில்லாலங்கடி நடிகையும் இணைந்துவிட்டார். அப்போ,எனி படி கேன் குத்து டான்ஸா...

ட்டுப்போட்டு சான்ஸ் வாங்கிட்டுப் போயிருக்காங்க கடைத்தெரு நடிகை. சமீபத்தில் நடந்த அமைப்புத் தேர்தல்ல ஓட்டுப்போட வந்த கடைத்தெரு தனக்கு நெருக்கமான இயக்குநர்கள் சிலரைப் பார்த்து பட வாய்ப்புக் கேட்டுள்ளார். மேலும் கொடுக்கும் சம்பளத்திற்கும் ஓகே சொல்லிவிட்டாராம். இவர் சந்தித்த இருவருமே நடிகையின் முன்னாள் இயக்குநர்கள். கிளாமர் நடிகை, கவர்ச்சி கேரக்டர் நாயகி என விழுந்த பெயரைத் தூக்கி நிறுத்தவே இந்த முடிவாம். முக்கியமாக கேரக்டருக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைதான் இப்போதைக்கு என கிளாமர் கேரக்டர்களுக்கு தேடி வந்த இயக்குநர்களை வாசலோடு திருப்பி அனுப்பிவைத்துவிட்டாராம். நெஜமாதான் சொல்றீங்களா! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்