ஆஃப் த ரெக்கார்டு: இயக்குநரின் நெருக்கடி தீர்க்க முன்னணி நடிகர் உதவுவாரா? | will the actor help to solve the issue of Malayalam Director?

வெளியிடப்பட்ட நேரம்: 15:22 (03/11/2015)

கடைசி தொடர்பு:15:36 (03/11/2015)

ஆஃப் த ரெக்கார்டு: இயக்குநரின் நெருக்கடி தீர்க்க முன்னணி நடிகர் உதவுவாரா?

புத்த இயக்குநர் இப்போது விரல் நடிகரை வைத்து ஒரு படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறார். அந்தப்படம் விரைவில் நிறைவடைந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் தற்சமயம் இயக்குநர் பெரும் பொருள் நெருக்கடியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஏதாவதொரு பெரிய நடிகரை வைத்து படம் எடுத்தால் அதிலிருந்து மீளலாம் என்கிற நிலையாம். இந்நிலையில், அவருடைய முந்தைய இசையமைப்பாளரும் அவரும் அண்மையில் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார்களாம். அப்போது அடுத்து என்ன செய்வது என்பது பற்றி இயக்குநர் மிகவும் வருத்தப்பட்டுப் பேசினாராம்.

இதனால் இயக்குநருக்கு உதவும் விதமாக அஞ்சாத நடிகரிடம் தூதுபோகத் தயாராகியிருக்கிறாராம் இசையமைப்பாளர். அவர் போய்ப் பேசி நடிகரை ஒப்புக்கொள்ள வைத்துவிடுவார், நம்முடைய சிக்கல்கள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று இயக்குநர் நம்பிக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்