ஆஃப் த ரெக்கார்டு! | Off The Record

வெளியிடப்பட்ட நேரம்: 15:37 (07/11/2015)

கடைசி தொடர்பு:15:55 (07/11/2015)

ஆஃப் த ரெக்கார்டு!

ந்த சின்னபுள்ளைக இயக்குநர் விரல் நடிகர வெச்சு எடுத்த படம் பெட்டிக்குள்ளயே கிடக்கு.எப்பதான் ரிலீஸாம்னு கேட்டா. விஷயம் தெரியாதா விரலு படத்த பொங்கலுக்கு ரிலீஸ் பண்ணப்போறாராம். காரணம் அதே நாள், தோரணை நடிகரோட அந்த கேரள தலைப்புப் படமும் அதே நாள்ல ரிலீஸாம். ஒரே நேர்கோட்ல சந்திச்சு நான் தான் பெஸ்ட்டுனு நிரூபிக்கப் போறாராம் விரலு. ஏது இவங்க சண்டைல இயக்குநர் காட்லதான் செம மழை. ஒரே நாள்ல ரெண்டு படம் எந்த டைரக்டருக்குக் கிடைக்கும். ஆனாலும் விரலு பழனிக்கே காவடி எடுத்தாலும் நம்பர் ஒன் நடிகைய டான்ஸ் ஆட வைக்க முடியலையே என்கிறது கோலிவுட் குறும்பு வட்டாரம். அப்போகட்டம் இன்னும் செமத்தியா வேலை பாக்குதோ!

கபோகத்துக்கு எடைய ஏத்தின உயர நடிகை இப்போ ஸ்பெஷல் ட்ரீட்மெண்டுக்கு வெளிநாடு போகப்போறாங்க. அதுவும் அந்த அரசகால படத்தோட இயக்குநர் கண்டிஷனா சொல்லிட்டாராம். திரும்பவும் பழைய மாதிரி வரணும். இல்லன்னா கண்டினியூட்டி இருக்காதுன்னு. இப்போ புலம்பிகிட்டு இருக்காங்கலாம் மிஸ் உயரம். உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதாவே நடக்கும் அம்மணி!

தொடர்ச்சியாக கோட் படத்தை இயக்கிய அந்த லிங்க இயக்குநரிடம் மீண்டும் ஒரு படம் பண்ணலாம்னு கோட் சொல்ல. எகிறிவிட்டாராம் இயக்கம். காரணம் இப்படியே இவரை வைத்தே படம் எடுத்தால் எங்கே நம் பெயர் நிற்காமலேயே போய் விடும் என அடுத்து அந்த காமெடி ஹீரோவின் படத்தில் ஒப்பந்தம் ஆகிவிட்டாராம். பொழைக்கத் தெரிஞ்ச புள்ள!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close