ஆஃப் த ரெக்கார்டு!

லையாள சூப்பர் ஸ்டாரும், நம்பர் ஒன் நடிகையும் இணைந்து நடித்த குடும்பப் படமான ராஸ்கல் ரீமேக்கில் உச்ச நடிகர், நடிக்கும் ஆசையுடன் இருந்தார். பின்னர் இடையில் ஏற்பட்ட சில சங்கடங்களால் கைவிட்டார். இப்போது புதிதாக கோட் நடிகருக்கு குடும்பப் படங்கள் கொஞ்சம் கை குடுத்து வருவதால் இந்த ரீமேக் படம் மீது ஆசை வந்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக மலையாள உலக ரீமேக் குடும்பப் படங்கள் தமிழில் பட்டையைக் கிளப்பி வருவதே இதற்குக் காரணம் எனவும் கூறப்படுகிறது. ரூட்ட மாத்துறாருடோய் கோட்டு!

ச்ச நடிகர் நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளம், கார், ஹோட்டல் என ரசிகர்கள் சமூக வலைகளில் பதிவேற்றம் செய்துவரும் நிலையில் திடீரென உச்சமே இதற்குத் தடை போட்டுவிட்டாராம். மேலும் தான் தங்கி இருக்கும் இடத்தில் மட்டுமே மக்களை பார்க்கலாம் என முடிவு எடுத்துள்ளாராம்.ஏனேனில் படம் குறித்த ரகசியங்கள் யாவும் வெளியேறினால் படத்தின் மீது சுவாரஸ்யம் போய்விடும் என இயக்குநர் எச்சரிக்கை மணி அடித்து விட்டதுதான் இதற்குக் காரணம். இப்போதாவது புரிந்ததே!

கொஞ்சம் கிளாமராக நடித்தால் வாய்ப்புகள் கொட்டும் என நினைத்து சமீபத்திய அடல்ட் ஒன்லி படத்தில் நடித்தார் யாதவ நடிகை. ஆனால் அதுவே இப்போது நடிகைக்கு பிரச்னையாக மாறிவிட்டது. முன்னணி நாடிகர் ஒருவர் படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்க வந்த வாய்ப்பு கிளாமர் போர்வையால் கைநழுவியுள்ளது. இதனால் கொஞ்ச நாளைக்கு நோ கிளாமர் என இருக்கிறாராம். கிளாமரா நடிச்சாலும் தப்பு, நடிக்காட்டியும் தப்பு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!