ஆஃப் த ரெக்கார்டு!

வர் படத்துல போயி நடிக்கற’..இப்படி ஒரு கேள்விய கேட்டுட்டு தான் இப்போ வரைக்கும் நம்பர் ஒன் நடிகை கூட நடிக்கிற வாய்ப்புக் கிடைக்காம இருக்காரு அந்நிய நடிகரு. இப்போ புதுசா எடுக்கப்போற புதுப்படத்துல நம்பர் 1 நடிக்கலாம்னு பேச்சுவார்த்தைப் போக , நடக்குமா என்கிறது கோலிவுட் குறும்பு வட்டாரம். சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்குமா?

ரசியல் தலைவர் நடிகர் தன் மகனின் புதிய படத்தை சமீபத்தில் துவக்கியிருக்காரு. படத்துக்கு மியூசிக் எல்லார் கிட்டயும் கேட்டுப்பார்த்துட்டு கிடைக்காம கட்டக்கடைசியா அந்த தமிழன் இசையமைப்பாளர ஒப்பந்தம் பண்ணியிருக்காங்க. இசைக்கு ஒரு கோடி லம்பா குடுத்துருக்கறதா கோலிவுட் அரசல் புரசல் தகவல் கிடைச்சிருக்கு. கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு...அதான் பறக்க ஆரம்பிச்சிருக்கு!

கோட்டு நடிகர் படத்துல என்னதான் வாரிசு நடிகை நாயகின்னாலும் , பேரு என்னமோ மேனன் நடிகைக்குத் தான். இதனிடையில் ஒல்லிப்பிச்சான் நடிகரின் அடுத்தபடம், வெற்றி நடிகரின் படமென செம பிசியாக, கணிசமாக சம்பளத்தை ஏற்றிவிட்டுள்ளாராம். அதுசரி வாயுள்ள புள்ள பொளைச்சித்தான ஆகணும்!

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!