ஆஃப் த ரெக்கார்டு!

மூனெழுத்து நம்பர் நடிகை அடுத்து தயாராகி வரும் பேய்ப் படத்தில் பிசியாக இருக்கிறார். அந்தப் படப்பிடிப்பில் நடிகைக்கு நெருக்கமான நண்பரும் நடிகருமான ஒருவர் வருகை தந்ததோடு நடிகையின் கல்யாண ஏற்பாடு ஏன் நின்றது என பல கேள்விகளைக் கேட்டு குடைந்தெடுத்துள்ளார். கடுப்பான நடிகை செம காட்டமாக திட்டிவிட்டாராம்.இதில் கெட்டவார்த்தையில் திட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எரியற நெருப்புலயே ஊத்துவாய்ங்க!

ன்னப்பா கான் நடிகர போட்டு வறுத்தெடுத்துட்டாங்க என்றால் எல்லாம் அரசியல் தந்திரம் தான் என்கிறது சினிமா வட்டாரம். இந்தப் பிரச்னைக்கு இடையில் மத்திய அரசு அந்த மொபைல் கம்பெனியுடன் பல கோடி ரூபாய் மதிப்பிலான எரிவாயுவை கை மாற்றியுள்ளார்கள் எனத் தகவல்கள் கசிந்துள்ளன. சும்மா எலி ஹெலிகாப்டர்ல போகுமா?

பூமி நாயகனுடன் முத்தக்காட்சிகளின் அலப்பறை கொடுத்த உ.பா நடிகைக்கு இதன் பிறகு பெரிய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்தால். எந்த வாய்ப்புகளும் வரவில்லையாம். மாறாக படத்தில் 4 காட்சிகள், அதுல ஹீரோவோட முத்தம் குடுக்கணும்னு சொல்லிக்கிட்டு தான் சில இயக்குநர்கள் வந்து போனாங்களாம். இதனால உ.பா நடிகை செம அப்செட். ஆட வந்தாச்சு சலங்கை கட்டிக்க மாட்டேன்னா எப்படி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!