ஆஃப் த ரெக்கார்டு!

தெலுங்கு இளவரசருக்கும் நம்மூரு தமிழ்க்கடவுள் பேரு கொண்ட இயக்குநருக்கும் முட்டிக்க ஆரம்பிச்சுடுச்சு. ஆரம்பத்துல இருந்தே ரெண்டு பேருக்கும் ஒத்துப்போகலை. இப்போ படத்தோட தலைப்பா இயக்கம் ஒண்ணு சொல்ல அத நடிகர் மறுக்க கொஞ்சம் புகைய ஆரம்பிச்சுருக்கு. இந்திய இயக்கமாகணும்னா சும்மாவா?!

ன்னப்பா இப்படி ஒரு பாட்ட போட்டுட்டு விரல் நடிகர் எதையும் சந்திக்கத் தயார்னு சொல்லிகிட்டு சுத்தறாருன்னு கேட்டா, சும்மா யாராவது ஆடுவாங்களா. எல்லாம் அரசியல் பின்புலம் இருக்கு. ஏதோ ஒரு வாயை அடைக்க இன்னொரு வாயை திறந்துவிட்ருக்காங்க, அதுக்கு இவர பயன்படுத்திக்கிட்டாங்க என்கிறது கோலிவுட் குறும்பு வட்டாரம். ஒருவேளை இருக்குமோ?

மூத்த வாரிசு நடிகை மலையாள காதல் படத்துல பூ கேரக்டர்ல நடிக்கப் போறதா தகவல் வந்ததுக்கே ரசிகர்கள் நெட்டுல வெச்சு செஞ்சாங்க. இப்போ வாரிசு நடிகை கெட்டப் புகைப்படம் வேறு வெளியாக இணைய குறும்பர்கள் வழக்கம் போல தங்களோட கைவரிசையைக் காட்ட செம அப்செட்டாகியுள்ளாராம் வாரிசு. எப்படியேனும் ஒரிஜினல் கேரக்டரை முறியடிக்க வேண்டும் என விடாது ஹோம் வொர்க் செய்கிறாராம். மயிலு மயிலுதான்..குயிலு குயிலுதான்!. 

ந்த ஹாலிவுட் நடிகர வெச்சுத்தான் படம் பண்ணனும்னு ஒத்தக் கால்ல நின்னுக்கிட்டு இருந்த பிரம்மாண்ட இயக்குநரே மனச தேத்திகிட்டு பாலிவுட் நடிகர ஓகே பண்ணிட்டாரு. ஆனால் இப்போ புது பிரச்னை படத்தோட தயாரிப்பு நிறுவனம். எங்க அந்த பன்ச் நடிகர் படத்துக்கு பஞ்சாயத்து பண்ணின மாதிரி இந்தப் படத்துக்கு போராட்டம் பண்ணிடுவாங்களோன்னு கொஞ்சம் பயத்தோடதான் படக்குழு இருக்காங்களாம். சின்ன கல்லு பெத்த லாபம்னா சும்மா இல்லையே! 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!