வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (02/01/2016)

கடைசி தொடர்பு:18:25 (02/01/2016)

ஆஃப் த ரெக்கார்டு!

கோட்டு நடிகர் ஒரு வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே கொடுப்பேன் என கோடு போட்டு வாழ்ந்து வந்தார். ஆனால் சென்ற வருடம் அவருக்கு இரண்டு படங்கள் வெளியாகி இரண்டும் வரவேற்புகளை அடைந்த நிலையில் இந்த வருடமும் ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் நடித்து இரண்டு, மூன்று மாத இடைவெளிகளில் படங்கள் கொடுக்கும் முடிவுக்கு வந்துள்ளாராம். அப்போ ரசிகர்களுக்கு டபுள் விருந்தா!

மிழ் சினிமாவைப் பொருத்தவரை உச்ச நடிகர், பன்ச் நடிகர், கோட் நடிகர் படங்களுக்கு மட்டுமே இணையவாசிகள் பெரும் வரவேற்புகள் கொடுப்பார்கள். இம்முறை கொஞ்சம் வித்யாசமாக விரல் நடிகரின் டிரெய்லருக்கு ஏகப்பட்ட லைக்குகளும், வியூஸ்களும் குவிந்துள்ளன, காரணம் பாடல் செஞ்ச வேலைதான். எல்லாம் நேரம்!

ல்லிபிச்சான் நடிகர் செம அப்செட்டில் இருக்கிறாராம். காரணம் இந்த வருடம் ஒரு படம் கூட நடிகருக்கு எதிர்பார்த்த வரவேற்புகளை தராத காரணமே. எதிர்பார்ப்பில் ஆழ்த்திய அந்த இந்திப் படமும் சொதப்பியதால் எப்படியேனும் ஒரு நல்ல படம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் யானை பட இயக்குநரின் படத்தைப் பார்த்து பார்த்து நடித்து வருகிறாராம். சில மாற்றக்களையும் செய்யச் சொல்லி குடைச்சல் வேறு கொடுக்க இப்போது இயக்கம் சற்றே அப்செட். என்னம்மா நீங்க இப்படிப் பண்றீங்களேம்மா!

பாடல் செய்த வினையால் விரல் நடிகர் மன்னிப்புக் கேட்கும் படி ஒரு கடிதம் ரெடி செய்து அதில் கையெழுத்திடும்படி சங்கத்து பொறுப்பாளர்கள் கூற அதற்கு மூத்த முன்னாள் பொறுப்பாளி நடிகை அதெல்லாம் வேண்டாம் எல்லாம் சட்டப்படி பார்த்துக்கொள்ளலாம் எனக் கூறிவிட்டாராம். இதனாலேயே விரலு மன்னிப்புக் கேட்காமல் இருப்பதாக கோலிவுட் குறும்பு வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போ இன்னும் உங்களுக்கு நேரம் சரியாகல!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்