வெளியிடப்பட்ட நேரம்: 17:41 (18/03/2016)

கடைசி தொடர்பு:12:13 (19/03/2016)

பிகினியில் நடிக்க நயன்தாரா கேட்ட தொகை இவ்வளவா?

சிரஞ்சீவியின் 150வது படம் எப்போது எனக் காத்துக்கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அதிகரப்பூர்வ தகவல் வந்துவிட்டது. வி.வி.வினாயக் இயக்க உள்ள இப்படத்தை ராம் சரண் லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.

இப்படத்தின் நாயகி யார் என்ற கேள்வி அடுத்து பரவ, தமன்னா உட்பட பல ஹீரோயின்களின் பரிசீலனைக்குப் பிறகு நயன்தாரா தேர்வாகியுள்ளார். ஆனால் நயன்தாரா அப்படத்தில் நடிக்கக் கேட்ட தொகை 3 கோடியாம்.

தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகையாக மாறிவிட்டாரே என நாம் நினைக்கும் முன் படத்தின் பிகினி காட்சி ஒன்று உள்ளது எனப் படக்குழு கேட்க, அப்படியா அப்போ எக்ஸ்ட்ரா ஒரு கோடி கொடுத்துவிடுங்கள் எனக் கூலாக சொல்லியிருக்கிறார். அதற்கும் படக்குழு தலையாட்டி விட்டதாம். நல்லவேள அஜித் “பில்லா” படம் முன்னாடியே ரிலீஸ் ஆகிடுச்சு! 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்