கோபத்தில் இருக்கிறாரா பிரம்மாண்ட இயக்குநர்? #OffTheRecord

மீபத்தில் இந்திய விருதுகள் பட்டியலில் தனது படத்தில் உயிரைக் கொடுத்து நடித்த நடிகருக்கு விருது கிடைக்காமல் போக செம கோபத்தில் இருக்கிறாராம் பிரம்மாண்ட இயக்குநர்...ஆளாலுக்கு விருதுகளை வாங்கிக்கொண்டு அவருக்குக் கிடைக்கலங்கறது ரொம்ப வருத்தமா இருக்கு பாணியில் துக்கம் விசாரிக்க கடுங்கோபமாகியுள்ளார் மிஸ்டர் பிரம்மாண்டம்! ஊரு ரெண்டு பட்டா....

ம்பர் ஒன் நடிகை ஒரு பக்கம் கோடிகளில் சம்பளம் வாங்கிக் கொண்டு பெரிய நடிகர்கள் படம், இன்னொரு பக்கம் ஆமா இவர் ஹீரோவா? என்கிற ரேஞ்சில் இருக்கும் நடிகர்கள் என பாரபட்சமே பாராமல் ஜோடி போட ரெடி என்கிறார். என்னவென்றுக் கேட்டால் பெரிய ஹீரோவுடன் மட்டுமில்லாமல் சின்ன ஹீரோக்களுடனும் ஜோடி போட்டால் தான் யூத் நாயகி பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமாம்? விவரம் தான்!

சின்னபூ நடிகை சில நாட்களாகவே ஹீரோக்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் நடித்துவருகிறார். ஒன்றாம், இரண்டாம் , இப்போது மூன்றாம் ரக நடிகர்கள் வரை இறங்க , தேடி வரும் வாய்ப்புகள் கூட முன்னணி நடிகர்களாக யாரும் வருவதில்லையாம்? இப்படியே போனால் அடுத்தப் படத்தில் ஒல்லி காமெடியனுக்குக் கூட கேட்டுவிடுவார்கள் போல... அம்மாடி பாத்து! அந்த பவர்ஃபுல் நடிகர் கூட அடுத்தப் படத்துல முன்னணி நடிகையத்தான் தேடுறாராம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!