Published:Updated:

`` `ஜானு' பத்தி விஜய் சார் சொன்ன வார்த்தை; `கர்ணன்'ல தனுஷ் சாரோட அந்த சாட்!" - கௌரி கிஷன்

கௌரி
கௌரி

விஜய்யுடன் `மாஸ்டர்’, தனுஷுடன் `கர்ணன்’ என தமிழின் முக்கிய படங்களில் பிஸியாக இருக்கும் கெளரியுடன் ஒரு பேட்டி.

நேர்வகிடு எடுத்த முடி, ஊதா கலர் ரிப்பன் எனப் பல ராம்களின் பள்ளிப்பருவத்து ஜானுவைக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியவர் கௌரி. `96' படத்தைத் தொடர்ந்துபோது தெலுங்கிலும் `ஜானு'வாக நடிக்கிறார். அது பற்றியும், அவரது அடுத்தடுத்த படங்கள் பற்றியும் கேட்டோம்.

கௌரி
கௌரி
Twitter / Gourayy

``என்னோட வாழ்க்கையை மொத்தமா மாத்திப்போட்ட படம் `96'. கௌரின்னா யார்னு இந்தப் படம் மூலமாதான் தெரிய வந்தது. இந்தப் படத்துக்கும், அதுல நடிச்ச எல்லாருக்கும் ரசிகர்கள் இவ்வளவு அன்பு கொடுப்பாங்கனு நினைக்கவே இல்லை.

இந்தப் பட வாய்ப்பு வரும்போதே ரொம்ப சந்தோஷப்பட்டேன். அதே படம் தெலுங்கு வெர்ஷன் வாய்ப்பு வரும்போது எப்படி வேண்டாம்னு சொல்வேன்."

கெளரி
கெளரி
Twitter /Gourayy

``தமிழ் ரசிகர்களுக்கு எப்படி `96' ஜானுவைப் பிடிச்சதோ, அதே மாதிரி தெலுங்கு ஆடியன்ஸுக்கும் `ஜானு' மறக்க முடியாத அனுபவமா இருக்கும். இந்த வாய்ப்பை மறுபடியும் கொடுத்த பிரேம்குமார் சாருக்குத்தான் நான் சொல்லணும்."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

` '96' படத்தோட அதே கதைதான் தெலுங்கு `ஜானு'லேயும். ஸோ, நடிக்கிறது ரொம்பவே ஈஸியாகிடுச்சு. ஸ்கூல், காலேஜ்னு வர்றதால வெயிட்டைக் குறைச்சு மறுபடியும் ஏத்தினேன். `96'ல வொர்க் பண்ணி கிட்டத்தட்ட ரெண்டு வருஷங்களுக்கு அப்புறம்தான் `ஜானு' ஆரம்பிச்சாங்க. தெலுங்கு லாங்குவேஜ் பிரச்னை, வெயிட் குறைச்சுக் கூட்டுறதுனு சில சவால்கள் இருந்தது. `96'தான் எனக்கு முதல் படம்ங்கிறதால இந்தப் படம் கொடுத்த அனுபவம் எப்பவுமே ஸ்பெஷல்தான்.

கௌரி
கௌரி
Twitter /Gourayy

குறிப்பா குட்டிப் பசங்க நாங்க எல்லோரும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். எங்களோட ஃப்ரெண்ட்ஷிப் இப்போ மட்டுமல்ல, எப்பவுமே இப்படித்தான் இருக்கும். ஆஃப் ஸ்க்ரீன்ல எங்களுக்குள்ள இருந்த வேவ் லெங்த், ஆன் ஸ்க்ரீன்லேயும் நல்ல ரிசல்ட்டைக் கொடுத்தது."

'ஜானு’
'ஜானு’

``இந்த மேஜிக்கை `ஜானு' படத்துலேயும் கொண்டு வர வேண்டிய ப்ரெஷர் இருந்தது. நிறைய கஷ்டப்பட்டுதான் இந்தப் படத்துலேயும் வொர்க் பண்ணியிருக்கோம். அந்தக் கெமிஸ்ட்ரி படம் பார்க்கும்போது உங்களுக்கே புரியும் `ஜானு' டீமும் சூப்பரா செட் ஆகிட்டாங்க. சர்வானந்த் சார் எனக்கு ரெண்டு படத்துக்காகவும் வாழ்த்து சொன்னார். சீக்கிரமே என்னோட ஃபேவரைட்டான சமந்தா மேமையும் மீட் பண்ணணும்" என்று பூரித்தவரிடம், `கர்ணன்' படத்தில் கமிட்டானது பற்றி கேட்டோம்.

``தனுஷ் சாருக்கும், ரஜினி சாருக்கும் நான் பெரிய ஃபேன். அப்படி இருக்கும்போது தனுஷ் சாரோட `கர்ணன்' படத்துல கமிட்டானது இந்த வருஷம் எனக்குக் கிடைச்ச கிஃப்ட்னுதான் சொல்வேன். தனுஷ் சார், மாரி சார்னு பெரிய ஆட்கள்கூட வேலை பார்க்கிறதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணும். இப்போதைக்கு படத்தைப் பத்தியும், என்னோட கேரக்டர் பத்தியும் சொல்ல முடியாது."

இயக்குநர் மாரிசெல்வராஜுடன்
இயக்குநர் மாரிசெல்வராஜுடன்
’கர்ணன்’

`` 'தனுஷ் சார் படத்துல ஒரு கேரக்டர் பண்ணணும்'னு ஒரு நாள் ஆடிஷனுக்கு போன் வந்தது. அங்கபோய் நடிச்சப்புறம் ஓகே பண்ணிட்டாங்க. இப்படித்தான் `கர்ணன்' படத்துக்குள்ள வந்தேன். தனுஷ் சாரை முதல் நாள் ஷூட்ல பார்க்கும்போது ரொம்ப எக்ஸைட் ஆகிட்டேன். அவர் நடிச்ச`மரியான்' எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கிட்ட இதைச் சொன்னேன். அந்தப் படம் பத்தி கொஞ்ச நேரம் பேசிட்டிருந்தோம். என்னோட சினிமா கரியருக்காக நிறைய பாசிட்டிவான வார்த்தைகள் சொல்லி வாழ்த்துச் சொன்னார்" என்கிறார் புன்னகையுன்.

`மாஸ்டர்’ எனக் கேள்வியை ஆரம்பிக்கும்போதே குதூகலமாகிறார்... ``விஜய் சார் - விஜய் சேதுபதி சார் காம்போவை `மாஸ்டர்'ல பார்க்க, ரசிகர்கள் மாதிரியே நானும் ஆவலா காத்துட்டிருக்கேன். நான் ரொம்பவே லக்கி. விஜய் சார்கூட மட்டுமல்ல, நிறைய ஆர்டிஸ்ட்கள்கூட பழகுற வாய்ப்பு வந்தது. `மாஸ்டர்' சமயம் நான் இன்னும் விஜய் சேதுபதி சாரை மீட் பண்ணலை. `விஜய் சேதுபதி என்ன சொன்னார்'னுதான் நிறைய பேர் கேட்குறாங்க. `96' பட சமயத்துலதான் நான் அவரை மீட் பண்ணேன். `மாஸ்டர்'ல அவரும் இருக்கார்ங்கிறது ரொம்பவே சந்தோஷம். விஜய் சார் `96'ல ரொம்ப நல்லா பண்ணியிருக்கீங்கனு பாராட்டினார். சந்தோஷமா இருந்தது."

கெளரி
கெளரி

பேட்டியின் முடிவில், ``உங்களை எப்போ ஹீரோயினா பார்க்கலாம்'' எனக் கேட்டால் சிரிக்கிறார். ``இப்போ என்னோட சினிமா கரியர் ரொம்பவே நல்லா இருக்கு. ஒண்ணும் அவசரம் இல்லை. மலையாளம்ல நான் லீடு ரோல்ல நடிச்ச ஒரு படம் இந்த வருஷம் ரிலீஸாகுது. சீக்கிரமே இது தமிழ்லேயும் நடக்கும்னு நம்புறேன்'' என்கிறார் நம்பிக்கையோடு.

அடுத்த கட்டுரைக்கு