அப்போ குட்டி த்ரிஷா ; இப்போ குட்டி சமந்தா! - '96'ல் மீண்டும் கௌரி!

தமிழில் வெளியான '96' படத்தின் தெலுங்கு வெர்ஷன் தற்போது ரெடியாகி வருகிறது. ஷர்வானந்த் - சமந்தா நடிக்கும் இப்படத்தில், தமிழில் ஸ்கூல் ஜானுவாக நடித்த கௌரி கிஷனே தெலுங்கிலும் நடிக்கிறார்.
பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - த்ரிஷா இணைந்து நடித்து வெளியான படம், '96'. தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தெலுங்கிலும் ரீ-மேக் ஆகிறது. தமிழில் இயக்கிய பிரேம் குமாரே தெலுங்கிலும் இயக்குகிறார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். தமிழில் ஸ்கூல் ஜானுவாக கௌரி கிஷன் நடித்திருந்தார். தெலுங்கு ரீ-மேக்கிலும் ஜானுவாக இவரே நடிக்கிறார்.
'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம் குமார் இயக்குநராக அறிமுகமான படம், '96'. ஹிட்டடித்த இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மேலும், எம்.எஸ்.பாஸ்கரின் மகனான ஆதித்யா பாஸ்கர் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். ஸ்கூலில் படிக்கும் த்ரிஷாவாக (ஜானுவாக) கௌரி கிஷன் நடித்திருந்தார்.
இதன் மூலம் இருவருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றிருந்தனர். இதைத் தொடர்ந்து 96 தெலுங்கு ரீமேக்கில் ஷர்வானந்த் - சமந்தா ஒப்பந்தமானதைத் தொடர்ந்து படப்பிடிப்பும் தொடங்கியது. தமிழ் '96'க்கு இசையமைத்த கோவிந்த வசந்தாவே இதற்கும் இசையமைக்கிறார். மேலும், தமிழில் ஸ்கூல் ஜானுவாக நடித்த கௌரி கிஷனே இதில் அதே கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் இவருக்கான போர்ஷன் இன்று ஆரம்பமானது.