Published:Updated:

சமூகப்பணி செய்பவரா நீங்கள் ! ஜி.வியின் புது முயற்சி

சனா

சமூகப் பணிகள் பலவற்றில் ஈடுபட்டு வரும் முகம் தெரியாதவர்களை யூ டியூப் நிகழ்ச்சியின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டு வரயிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தற்போது 'பூ' சசி இயக்கத்தில் 'சிவப்பு மஞ்சள் பச்சை' படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர எழில் எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தவிர தனுஷ் படமொன்றுக்கு இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சமூக பணிகள் பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறார் ஜி.வி. இந்நிலையில் 'மகத்தான மனிதர்கள்' என்ற பெயரில் யூ டியூப் சேனல் ஒன்றை தொடங்கயிருக்கிறார் இவர்.

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

சமூக பணிகள் பலவற்றில் ஈடுபட்டு வரும் முகம் தெரியாதவர்களை இந்த யூ டியூப் நிகழ்ச்சியின் மூலமாக வெளியுலகிற்கு கொண்டு வரயிருக்கிறார் ஜி.வி,. இந்த எண்ணம் கஜா புயலில் நிவாரண நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தப்போது இவருக்கு தோன்றியிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியின் வாயிலாக இந்த நிகழ்ச்சியை நடந்த நிறைய விதிமுறைகள் இருக்குமென்பதால் இவரது யூ டியூப் சேனலில் நிகழ்த்த முடிவு செய்திருக்கிறார் ஜி.வி. இவரது இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மாதத்திற்கு ஒருமுறை நிகழயிருக்கும் இந்த நிகழ்ச்சியின் முதல் நபராக ஜவ்வாதுமலையில் உள்ள ஆசிரியர் மகாலட்சமியை பேட்டி எடுக்கயிருக்கிறார் ஜி.வி. இந்த ஆசிரியரின் முயற்சியால் மலைவாழ் மாணவர்கள் பலரும் கல்வியறிவு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சனா

Make others happy by being happy ! “ Its my favorite quote. And I live towards it. I want to talk talk talk even if..