Published:Updated:

`வாடிவாசல்' லைவ் மியூசிக், செல்வராகவனின் மெசேஜ், யுவன் இசையில் நடிப்பு; ஜி.வி.பிரகாஷ் ஷேரிங்ஸ்!

ஜி.வி.பிரகாஷ் குமார்

2022 - 2023க்கான விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வான மாணவ நிருபர்களின் கேள்விகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் அளித்த பதில்கள் இங்கே...

`வாடிவாசல்' லைவ் மியூசிக், செல்வராகவனின் மெசேஜ், யுவன் இசையில் நடிப்பு; ஜி.வி.பிரகாஷ் ஷேரிங்ஸ்!

2022 - 2023க்கான விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வான மாணவ நிருபர்களின் கேள்விகளுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் அளித்த பதில்கள் இங்கே...

Published:Updated:
ஜி.வி.பிரகாஷ் குமார்
2020ம் ஆண்டிற்கான தேசிய விருது அறிவித்தவுடன், ஜி.வி.பிரகாஷ் குமாரின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் திருப்தியடைந்தனர் என்றே சொல்லலாம். காரணம், பலமுறை ஜி.வி.பிரகாஷுக்குதான் தேசிய விருது என்ற நம்பிக்கை தகர்ந்திருக்கிறது.

அதனால், இந்த வெற்றி ஒரு கொண்டாட்டம்தான். 2022 - 2023க்கான விகடன் மாணவ பத்திரிகையாளர் திட்டத்தில் தேர்வான மாணவ நிருபர்களின் கேள்விகளுக்கு ஜி.வி. அளித்த பதில்கள் இங்கே...

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இசை, நடிப்பு... இந்த இரண்டில் உங்களுக்கு திருப்பதியளிக்ககூடியது எது?

''இசைத்துறையில நான் பதினேழு வருஷமா பயணிக்கிறேன். 90 படங்களுக்கு இசையமைச்சுருக்கேன். பல இயக்குநர்கள், மொழிகள் கடந்து வேலை செஞ்சிருக்கேன். ஆனா, நடிப்பு எனக்கு புதுசு. இதுவரை மொத்தமே 15 படங்கள் தான் நடிச்சிருக்கேன். இதுல பாலா சார், ராஜீவ் மேனன் சார், சசி சார் இயக்கத்துல நடிச்சிட்டேன். இதுக்கு முன்னாடி 15 வருஷத்துக்கு மேலாக ஸ்டூடியோக்கள்ல உள்ளே உட்கார்ந்து வொர்க் பண்ணினேன். ஆனா, இப்போ ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடங்கள், படங்கள்னு அமையும்போது மனதளவுல உற்சாகமா உணர்றேன். அதனால நடிப்பு புது அனுபவமா இருக்கு. அதைப் போல இசையிலும் பக்குவமாகியிருக்கேன். என் தவறுகளை திருத்திட்டு வர்றேன். நான் பண்ற வொர்க்கை திரும்பிப் பார்க்கறேன்.''

இயக்குநர் வெற்றிமாறனுக்கும் உங்களுக்குமான முதல் சந்திப்பு?

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

"அது ரொம்ப காமெடியா இருந்தது. அப்போ அவர் உதவி இயக்குநர். நான் ரெண்டு படங்கள் மியூசிக் பண்ணியிருந்தேன். ஒரு நாள் எனக்கு போன் பண்ணி, `Hi, This is Vetrimaaran. I want you to do a music for my film'னு இங்கிலீஷ்லயே பேசினார். நானும் ஓகேனு சொல்லி போனை வெச்சுட்டேன். அப்புறம் ஒரு ரெண்டு வாரம் கழிச்சு, போன் பண்ணி, `Hi, This is Vetrimaaran. Actually my producer wants to go with Harris for this film. I just wanted to let you know'னு இங்கிலீஷ்லயே சொன்னார். நானும் 'ஓகே சார். நோ ப்ராப்ளம். ஆல் தி பெஸ்ட்'னு சொல்லி வெச்சுட்டேன். இன்னொரு மியூசிக் டைரக்டர்கிட்ட போறேங்கிறதை போன் பண்ணி முறையா சொல்றாரேனு அவருடைய நேர்மை பிடிச்சிருந்தது. ஆனா, அந்தப் படம் நடக்கலை. மறுபடியும், ஒரு நாள் என்கிட்ட வந்தார். 'பொல்லாதவன்' நடந்தது"

`வாடிவாசல்' படத்துல எந்தளவுக்கு லைவ் மியூசிக்கை எதிர்பார்க்கலாம்?

" அது ஒரு பீரியட் படம், சுதா கொங்கரா இயக்குறதும் பீரியட் படம். நிச்சயமா லைவ் மியூசிக்குடைய தாக்கம் அதிகமாவே இருக்கும். மாடர்ன் டிஜிட்டல் சவுண்டை அதுக்கு பயன்படுத்த முடியாது. நானும் அந்தப் படங்களுக்கான வேலைகள் செய்யும்போது ஆர்வமா இருக்கேன்"

'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு தேசிய விருது கிடைக்கும் எல்லோரும் எதிர்ப்பார்த்தோம். ஆனா, இப்போ 'சூரரைப் போற்று'க்காக கிடைச்சிருக்கு. 'ஆயிரத்தில் ஒருவன்' டீம்ல இருந்து யாராவது பேசினாங்களா?

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

"செல்வராகவன் மெசேஜ் பண்ணி வாழ்த்துகள் சொன்னார். 'நன்றி ப்ரோ. 'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்கு எதிர்பார்த்தேன். அப்போ அவங்க கொடுக்கலை. இப்போ கொடுத்திருக்காங்க'னு ரிப்ளை பண்ணினேன். ''ஆயிரத்தில் ஒருவன் 2' படத்துக்கு மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும்'னு அனுப்பினார். ரொம்ப சந்தோஷமா இருந்தது"

உங்களுக்கு யாருடைய இசையில நடிக்கணும்னு ஆசை?

"இளையராஜா சார், ரஹ்மான் சார் இவங்க ரெண்டு பேருடைய இசையில நடிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது ரெண்டுமே நடந்திடுச்சு. சமீபமா யுவன் சாரை பார்த்தேன். 'உங்க மியூசிக்ல ஒரு நல்ல லவ் ஸ்டோரில நடிக்கணும். நீங்களே கதை கேட்டு சொல்லுங்க'னு சொன்னேன். அதனால, அவர் இசையில நடிக்கணும்"

உங்க குழந்தை அன்வியுடன் எப்படி நேரம் செலவழிக்கிறீங்க?

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

"லாக்டௌன் நேரத்தில் பிறந்தாங்க. அப்போ, வீட்ல இருந்தனால நிறைய நேரம் அவங்களோடுதான் இருந்தேன். ரொம்ப ஸ்பீட். எல்லாத்தையும் கப்புனு பிடிச்சுக்குவாங்க. நிறைய பேசுறாங்க. என்னுடைய எந்த தாக்கமும் இல்லாமல் ஒரு இண்டிபென்டன்டான பொண்ணா வளரணும்ன்னு ஆசைப்படுறேன்"

தேசிய விருது கிடைத்த தருணம் எப்படி இருந்தது?

உங்கள் இசையை, நடிப்பை உரிமையோடு விமர்சனம் செய்யும் திரைப்பிரபலங்கள் யாரெல்லாம்?

கங்கனாவின் 'எமர்ஜென்ஸி' படத்துக்கு இசையமைக்கிறீங்க. அந்தப் படத்திற்கான வேலைகள் எப்படி போகுது?

அடுத்த நீங்க இசையமைக்கிற 'கேப்டன் மில்லர்' ஒரு பீரியட் படம். எவ்வளவு சவாலா இருக்கு?

இசையமைப்பாளர், பாடகர், நடிகரைத் தாண்டி படம் இயக்கும் எண்ணமிருக்கா?

நீங்க வெற்றிமாறன் இயக்கத்துல நடிக்கணும்னு ஆசைப்பட்டிருக்கீங்களா?

பா.ரஞ்சித் இயக்குத்துல உங்க மியூசிக் வர்றப்போற படம் பற்றி?

நீங்க தமிழக அரசியலை கவனிக்கிறீங்களா? போன்ற கேள்விகளுக்கான பதில் ஆனந்த விகடன் இதழில் இடம்பெற்றிருக்கின்றன.