Published:Updated:

``ஜி.வி.பிரகாஷுக்கு இந்த பிறந்தநாள் ரொம்பவே ஸ்பெஷல்... ஏன்னா?!'' #HBDGVPrakash

GV Prakash
GV Prakash

இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இன்று பிறந்தநாள்.

இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்ட ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இன்று பிறந்தநாள். அவருடன் பல வருடங்களாக பயணிக்கும் சவுண்ட் இன்ஜீனியர் ஜெஹவொசன் அல்கர், ஜி.வி.பிரகாஷுடனான தனது நட்பைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார்.

தனுஷ் இயக்கத்தில் நாகார்ஜுனா, சுதீப் நடிக்கும் படம் மீண்டும் தொடங்குகிறதா... உண்மை என்ன?!

உங்களுக்கும் ஜி.வி.பிரகாஷுக்குமான அறிமுகம் எப்போது நடந்தது..?

ஜெஹவொசன் அல்கர்
ஜெஹவொசன் அல்கர்

"2004-ல ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ்னு சில மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட ஜி.வி கீபோர்ட் வாசிச்சிட்டு இருந்தப்போ அவரை மீட் பண்ணுவேன். அப்போ அவர் சில விளம்பர படங்களுக்கும் மியூசிக் பண்ணிட்டு இருந்தார். அப்போ இருந்து இப்போ வரைக்கும் அவர்கிட்ட நான் சவுண்ட் இன்ஜீனியரா இருக்கேன். நாங்க அறிமுகமான கொஞ்ச நாள்லயே நண்பர்களாகிட்டோம். வேலைன்னா வேலையை மட்டும் பார்த்துட்டு கிளம்பிடாமல், நாங்க அதிகமா நேரம் செலவழிப்போம். அப்படி பழக ஆரம்பிச்ச எங்க நட்பு இப்போ 16 வருஷங்களைத் தாண்டியிருக்கு. எங்களோட இந்த 16 வருஷ நட்புக்கு அடித்தளமா இருந்ததே அவரோட இசைதான். அவர் விளம்பரப் படங்களுக்கு மியூசிக் பண்ணிட்டு இருந்த சமயத்தில், அவரோட ட்யூன்ஸை கேட்கும்போது ஒரு புது அனுபவத்தைக் கொடுத்துச்சு. அதே சமயம் நான் மற்ற சில இளம் இசையமைப்பாளர்கள்கிட்டேயும் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆனால், ஜிவியோட ட்யூன்ஸ் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தனால, அவரோடு தொடர்ந்து வேலை பார்க்கலாம்னு தோணுச்சு. அதுதான், இப்போ எங்களை நல்ல நண்பர்களாகவும் மாற்றியிருக்கு.’’

ஜி.வி.பிரகாஷோட ப்ளஸ்னு நீங்க நினைக்கிற விஷயங்கள் என்ன..?

ஜி.வி.பிரகாஷ் குமார்
ஜி.வி.பிரகாஷ் குமார்

"அவர் வெற்றியையும் தோல்வியையும் ஒரே மாதிரி பார்ப்பார். இது அவர்கிட்ட இருக்கிற மிகப்பெரிய ப்ளஸ். இத்தனை வருஷத்துல எந்த ஒரு வெற்றிக்கும் அவர் குதிச்சது இல்லை; தோல்விக்கும் சோர்ந்தது இல்லை. அடுத்து, அடுத்துனு போகக்கூடிய ஆள். இன்னொரு ப்ளஸ் என்னன்னா, அவுட் ஆஃப் த பாக்ஸ்ல இருந்து யோசிப்பார். ரொம்ப சின்ன வயசுல மியூசிக் டைரக்டர் ஆகணும்னு அவர் முடிவு பண்ணினப்போ, பல பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால், அந்த முடிவுல அவர் உறுதியா இருந்து, இசையமைப்பாளராகி `வெயில்’ மாதிரி ஹிட் ஆல்பத்தைக் கொடுத்தார். அதே மாதிரி, நடிக்கலாம்னு அவர் முடிவு பண்ணும்போதும் நிறைய பேர் வேண்டாம்னு சொன்னாங்க. ஆனால், இப்போ நடிகராகவும் வித்தியாசமான சப்ஜெக்ட்டா எடுத்து நடிக்கிறார். இதெல்லாம்தான் அவரோட ப்ளஸ்.’’

இசையமைப்பாளர், நடிகர்னு பிஸியாக இருக்கிறதை எப்படி சமாளிக்கிறார்..?

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

"ஜிவி எப்போதுமே பிஸியா இருந்தால்தான் எனர்ஜியா இருப்பார். அதுமட்டுமல்லாமல், அவரோட பெரும்பாலான ட்யூன்கள் அரை மணி நேரத்துக்குள் உருவாகியிருக்கு. அந்தளவுக்கு வேகமா ஒரு பாட்டுக்கு ட்யூன் போடுவார். ஒரு பாட்டுக்கு ட்யூன் போடுறதுக்காக வெளியூருக்கு போகணும்கிற பழக்கம் ஜிவிக்கு கிடையாது. எல்லா வேலைகளையும் ஸ்டூடியோவுலேயே முடிச்சிடுவார். பாடல்கள் மாதிரியே பின்னணி இசையும் அதே வேகம்தான். நாங்க எல்லாரும் சேர்ந்து வேகமா வேலை பார்த்தால், 20 நாள்களுக்குள் ஒரு படத்தோட மொத்த ரீ ரெக்கார்ட்டிங்கையும் முடிச்சிடுவோம். `மயக்கம் என்ன’ படத்தோட மொத்த பின்னணி இசையையும் ஒரே ஆளா உட்கார்ந்து 6 நாளில் வாசிச்சு முடிச்சார். `ஆயிரத்தில் ஒருவன்’ மாதிரியான படங்களையும் அசால்ட்டா முடிச்சார். அவரோட கரியர்லேயே பின்னணி இசைக்கு அதிக நாள்கள் எடுத்துக்கிட்டது, `மதராசபட்டினம்’ படத்தோட பின்னணி இசைக்குதான். படத்தோட ஒவ்வொரு முக்கியமான போர்ஷனுக்கும் 5 வெர்ஷன் பண்ணினார். மத்தப்படி, பிஸியா இருக்கிறது அவருக்கு பிரச்னையே கிடையாது.’’

அவரோட பிறந்தநாளை எப்படி செலிபிரேட் பண்ணுவார்?

சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்
சைந்தவி, ஜி.வி.பிரகாஷ்

"ஆரம்பத்தில் இருந்தே ஜிவிக்கு பர்த்டே செலிபிரேஷனை பெருசா பண்றது பிடிக்காது. 12 மணிக்கு கேக் கட் பண்றதுக்காக அவர் வீட்டுக்கு நாங்க போகும்போதெல்லாம் தூங்கிட்டுத்தான் இருப்பார். அவரை எழுப்பிவிட்டு, கேக் கட் பண்ணிட்டு, கொஞ்ச நேரம் பேசிட்டு வருவோம். ஆனால், இந்த வருஷ பர்த்டே அவருக்கு ரொம்பவே ஸ்பெஷலா இருக்கும். ஏன்னா, முதல்முறையா அவரோட பொண்ணுக்கூட இந்த பர்த்டேவை செலிபிரேட் பண்ணப்போறார். இதுவரைக்கும் நாங்க ஜிவியை ஒரு ஃப்ரெண்ட்டா, மியூசிக் டைரக்டரா, ஆக்டரா பார்த்ததுக்கும், இப்போ அப்பாவா பார்க்கிறதுக்கும் நிறைய வித்தியாசங்கள் தெரியுது. ரொம்பவே சாஃப்ட்டா மாறிட்டார். எங்களுக்கே அதைப் பார்க்கும்போது புதுசா இருக்கு. ஜிவிக்கு இந்த பிறந்தநாள் ரொம்ப மகிழ்ச்சியானதா இருக்கணும்னு நான் வேண்டிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பா.’’

அடுத்த கட்டுரைக்கு