Published:Updated:

அஜித் 61: `துணிவே துணை' மட்டுமா? பரிசீலனையில் இருக்கும் மூன்று டைட்டில்கள் - எப்போது அறிவிப்பு?

அஜித்

`அஜித்- 61' லேட்டஸ்ட் அப்டேட் என்ன, எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறது, டைட்டிலை எப்போது அறிவிக்கிறார்கள் என்பது குறித்து அஜித் வட்டாரங்களில் விசாரித்தோம்.

அஜித் 61: `துணிவே துணை' மட்டுமா? பரிசீலனையில் இருக்கும் மூன்று டைட்டில்கள் - எப்போது அறிவிப்பு?

`அஜித்- 61' லேட்டஸ்ட் அப்டேட் என்ன, எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறது, டைட்டிலை எப்போது அறிவிக்கிறார்கள் என்பது குறித்து அஜித் வட்டாரங்களில் விசாரித்தோம்.

Published:Updated:
அஜித்

சில நாள்களாக அஜித்-61 படத்தின் டைட்டில் இதுதான் என சமூக வலைதளங்களில் 'துணிவே துணை' என்ற பெயர் வைரலாகிக் கொண்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம், ஶ்ரீதேவியின் பிறந்த நாளன்று 'அஜித்-61' டைட்டில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், வெளியாகவில்லை.

`அஜித்- 61' லேட்டஸ்ட் அப்டேட் என்ன, எப்போது மீண்டும் படப்பிடிப்பு துவங்குகிறது, டைட்டிலை எப்போது அறிவிக்கிறார்கள் என்பது குறித்து அஜித் வட்டாரங்களில் விசாரித்தோம்.
அஜித்
அஜித்
ANANDKUMAR

'நேர்கொண்ட பார்வை', 'வலிமை'க்குப் பிறகு ஹெச்.வினோத்தின் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்திற்குத் தலைப்பு இன்னும் வைக்கவில்லை. மஞ்சு வாரியர், 'ராஜதந்திரம்' வீரா, மகாநதி சங்கர், பகவதி பெருமாள், வட இந்திய தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்கள் எனப் பலரும் அதில் நடித்து வருகின்றனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத், சென்னையைத் தொடர்ந்து தாய்லாந்து, பாங்காக் ஆகிய இடங்களிலும் நடக்க உள்ளது. பாங்காக்கில் தொடர்ந்து மூன்று வாரங்கள் படப்பிடிப்பு நடக்கும் என்றும் அத்தோடு மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தகவல்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாங்காக் படப்பிடிப்பிற்காக ஹெச்.வினோத், சென்ற வாரமே லொக்கேஷன் பார்க்கவும், படப்பிடிப்பு ஏற்பாடுகளைக் கவனிக்கவும் அங்கே சென்றுவிட்டார். அடுத்த வாரத்தில் அஜித் பாங்காக் ஷூட்டில் பங்கேற்கிறார் என்றும் தகவல். இதற்கிடையே அஜித்தின் வியாழக்கிழமை சென்டிமென்ட்படி, வரும் வியாழன் அன்று (நாளை) டைட்டிலை அறிவிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.

அஜித்தின் 'விஸ்வாசம்' படத்தில் அவர் ஜீப் ஓட்டிக்கொண்டு வரும் போது அதில் 'துணிவே துணை' என எழுதியிருக்கும். அதைப் போல 'வீரம்' படத்திலும் இந்த டைட்டில் வரும். அதில் தமன்னா வீட்டில் சண்டை முடிந்த பிறகு மீதமிருந்த ரவுடிகளை அவர் தேடிச் செல்லும் போது ஜீப்பில் 'துணிவே துணை' என எழுதி இருக்கும். இப்படி அவரது படங்களில் அடிக்கடி 'துணிவே துணை' கண்ணில் படுவதால் அதையே டைட்டிலாக வைக்க முடிவு செய்யலாம் அல்லது அது வெறும் 'துணிவு' ஆகவும் இருக்கலாம் என்கிறார்கள். 1976ல் ஜெய்சங்கர் நடிப்பில் ரிலீசான படத்தின் பெயரும் ‘துணிவே துணை’ என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்
அஜித்

ஆனால், மற்றொரு தரப்பினர், 'அஜித் 61'க்காக இதுவரை மூன்று டைட்டில்கள் இறுதி செய்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் ஒரு 'வி' சென்டிமென்ட் டைட்டிலும் உண்டாம். இன்னொரு ஆப்ஷனாக அஜித்தின் நெகட்டிவ் ஷேட் கேரக்டரின் பெயரையே டைட்டிலாக வைக்கவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.

ஆக, எது எப்படியோ நாளை வெளியாகிறது `அஜித் 61' டைட்டில்! அவரது லுக்கை ஆரம்பத்திலேயே வெளியிட்டது போல, அவரது கேரக்டர் பெயரையும் நாளை வெளியிடுவார்கள் என்கிறார்கள்.