Published:Updated:

ஹரீஷ் கல்யாண் ஜோடியாகும் டிகங்கனா சூர்யவன்ஷி!

உ. சுதர்சன் காந்தி.

`தனுசு ராசி நேயர்களே' படத்திலிருந்து விலகினார், ரியா சக்ரபோர்த்தி

ஹரீஷ் கல்யாண்
ஹரீஷ் கல்யாண்

இயக்குநர் இரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் உருவான `இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்திற்குப் பிறகு, `தனுசு ராசி நேயர்களே' என்ற படத்தில் நடித்து வருகிறார் ஹரீஷ் கல்யாண். அந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரியா சக்ரபோர்த்தி மற்றும் ரெபா மோனிகா ஜான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இதை இயக்குநரும் நடிகருமான சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிகங்கனா சூர்யவன்ஷி
டிகங்கனா சூர்யவன்ஷி

இந்நிலையில், கதாநாயகி ரியா சக்ரபோர்த்தி படத்திலிருந்து விலகியுள்ளார். காரணம், கால்ஷீட் பிரச்னை எனச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, மற்றொரு பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க திட்டமிட்ட படக்குழு, டிகங்கனா சூர்யவன்ஷியை ஒப்பந்தம் செய்துள்ளனர். பல இந்தி சீரியல்கள், நான்கு இந்திப் படங்கள் என நடித்து பாப்புலரானவர், டிகங்கனா. தவிர, சல்மான் கான் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் பங்குபெற்றுள்ளார். ரைசாவைத் தொடர்ந்து, மற்றொரு பிக் பாஸ் நாயகியுடன் நடிக்க இருக்கிறார், ஹரீஷ் கல்யாண்.

ஹரீஷ் கல்யாண் ஜோடியாகும் டிகங்கனா சூர்யவன்ஷி!

இதைத் தொடர்ந்து, பாலிவுட்டில் வெளியான 'விக்கி டோனார்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'தாராள பிரபு' படத்தில் நடிக்கவிருக்கிறார், ஹரீஷ் கல்யாண். வெங்கட்பிரபு தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவான 'கசட தபற' படத்தில் நடித்து முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.