Published:Updated:

காணக்கிடைக்காத படங்களுடன் கலந்துரையாடல்... சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் பங்கேற்க ஒரு வாய்ப்பு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020
சென்னை சுயாதீன திரைப்பட விழா 2020

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் கட்டணம் ஏதுமின்றி இலவசமாகப் பங்குகொள்ள விகடன் வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு!

தமிழ் ஸ்டூடியோவின் 'சென்னை சுயாதீன திரைப்பட விழா', பொதுமக்கள் நிதியில் நடத்தப்படும் ஒரு திரைப்பட விழா. தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் இது, இந்த வருடம் பிப்ரவரி 8, 9 தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவுக்கான முன்பதிவு ஏற்கெனவே தொடங்கி நடைபெற்றுவருகிறது. நிகழ்ச்சியின் தொடக்க விழா, பிப்ரவரி 8-ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறும். சென்ற வருடம் சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் இயக்குநர் மது.சி.நாராயணன் தான் இந்தத் திரைப்பட விழாவைத் தொடங்கிவைக்கிறார்.

இயக்குநர் மது.சி.நாராயணன்
இயக்குநர் மது.சி.நாராயணன்

இந்த ஆண்டும் பல சுயாதீன இயக்குநர்களின் படைப்புகளை இங்கு திரையிட இருக்கிறார்கள். திரைப்படம், குறும்படம், ஆவணப்படம் எனப் பல பிரிவுகளில் திரையிடல்கள் நடைபெறவிருக்கின்றன. கடந்த வருடம் பிஜுகுமார் தாமோதரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான 'வெயில் மரங்கள்' தான் இந்த விழாவின் முதல் திரையிடலாக அமைந்திருக்கிறது. இது, ஷாங்காய் திரைப்பட விழாவில் விருதுபெற்ற முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமைக்கு உடையது. இதைத் தவிர, இந்த வருடம் வங்கதேசம் சார்பாக ஆஸ்கருக்குப் பரிந்துரை செய்யப்பட்ட 'ஃபகுன் ஹாவே' , 'மேனிஃபெஸ்டோ' , 'இன்ஷா அல்லா' , 'விண்டோ சீட்' போன்ற திரைப்படங்களுடன் சுமார் 35-க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படவிருக்கின்றன.

திரையிடல்கள் மட்டுமின்றி, 'மாஸ்டர் கிளாஸ்' என அழைக்கப்படும் சினிமா சார்ந்த வகுப்புகள், சூழலியல், அரசியல் சார்ந்த முக்கியத் தலைப்புகளின் கீழ் குழு உரையாடல்கள், முக்கியமான படைப்பாளிகளுடன் விவாதங்கள் என மற்ற திரைப்பட விழாக்களிலிருந்து இந்த விழா தனித்து நிற்கிறது. ஒளிப்பதிவாளர் ஜி.பி.கிருஷ்ணா, இயக்குநர்கள் பிரசன்னா விதானகே, லெனின் பாரதி, மீரா கதிரவன், எழுத்தாளர்கள் ரா.முருகவேல், சுகுணா திவாகர், கோவை சதாசிவம் போன்ற முக்கியமான படைப்பாளிகள் பலரும் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.

லெனின் பாரதி
லெனின் பாரதி

சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைப்பெறவுள்ள இந்த விழாவிற்கு நுழைவுக் கட்டணமாக 200 ரூபாய் (இரண்டு நாள்களுக்கும் சேர்த்து) வசூலிக்கப்படுகிறது. ஆனால், கட்டணம் ஏதுமின்றி இதில் இலவசமாகப் பங்குகொள்ள, விகடன் வாசகர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து, கேட்கப்படும் விவரங்களுடன் 'சுயாதீன படங்கள்' குறித்த ஒரு 'நச்' ஸ்லோகனையும் பதிவு செய்பவர்களுக்கு, இந்நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட் பரிசாக அளிக்கப்படும். இந்த டிக்கெட்டைக்கொண்டு வெற்றியாளர்கள் இந்நிகழ்ச்சியின் இரண்டு நாள்களிலும் கலந்துகொள்ளலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

3-வது சென்னை சுயாதீன திரைப்பட விழா... காணக்கிடைக்காத படங்கள்! எப்படி கலந்துகொள்வது? #IFFC2020

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களின் விவரம், SMS மூலம் தெரிவிக்கப்படும். அதைக் காண்பித்து டிக்கெட்டுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

பியூர் சினிமா புத்தக அங்காடி,

எண்: 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு