Published:Updated:

`அடுத்த நயன்தாரா'தான் விஜய் பட ஹீரோயின்... வெல்கம் ஆன் போர்டு ஸ்வீட்டி! #Vijay65

vijay
vijay ( விஜய் 65 )

விஜய் 65 ஹீரோயின் யார் என்ற சஸ்பென்ஸ் உடைந்திருக்கிறது.

சுதா கோங்ரா இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கான காஸ்ட்டிங் வேலைகள் செம பரபரப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. `மாஸ்டர்' படத்தில் மாளவிகா மோகனன் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் 65-வது படத்தில் `அடுத்த நயன்தாரா' என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா நடிக்கவிருக்கிறார்.

நயன்தாரா முதன்முதலில் சரத்குமார் நடித்த `ஐயா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அடுத்து ரஜினியுடன் `சந்திரமுகி', விஜய்யுடன் `வில்லு', அஜித்துடன் `ஏகன்', தனுஷுடன் `யாரடி நீ மோகினி', சிம்புவுடன் `வல்லவன்' எனத் தொடர்ந்து பெரிய ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். இதற்கிடையே சிம்புவுடன் காதல், பிரபுதேவாவுடன் காதல் என பர்சனலாகக் காதல், மோதல், கசப்பு, பிரிவு எனப் பலவற்றைக் கடந்துவந்தார்.

Nayanthara
Nayanthara

தமிழ் சினிமாவில் முதன்முதலாக 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை நயன்தாராதான். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் பரபரப்பாக நடித்துவந்த நயன்தாரா, பாலகிருஷ்ணாவுடன் நடித்த சீதை கதாபாத்திரத்தோடு தன்னுடைய கலைப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரபுதேவாவுடன் செட்டில் ஆகப்போகிறார் எனப் பேசப்பட்டது. ஆனால், திடீரென பிரபுதேவா - நயன்தாராவுக்கு இடையிலான ரிலேஷன்ஷிப்பில் சிக்கல்கள் எழ மீண்டும் `சிங்கிள்' ஆனார் நயன்.

காதலில் மட்டுமல்லாமல் நயன்தாராவின் சினிமா கரியரிலும் விரிசல் விழுந்தது. `பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் தமிழில் எந்தப் படமும் நயனுக்கு இல்லை. கரியர் முடிந்துவிட்டது என்று எல்லோரும் நினைத்த நிலையில்தான் மிகப்பெரிய ரீ-என்ட்ரி கொடுத்தார் நயன். `ராஜா ராணி' திரைப்படம் செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தது. அடுத்து அஜித்துடன் ஆரம்பம் படத்தில் நடித்தார். 2015-ல் வெளிவந்த `நானும் ரவுடிதான்' படம் நயன்தாராவை உச்சத்துக்குக் கொண்டுசென்றது. நயன்தாராவின் சம்பளம் உயர்ந்தது. இதற்கிடையே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க ஆரம்பித்தார் நயன். 'அறம்' அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கிக்கொடுத்தது. இப்போது நயன்தாராவின் சம்பளம் 5 கோடி ரூபாய். ரஜினியுடன் `தர்பார்', விஜய்யுடன் `பிகில்' அஜித்துடன் `விஸ்வாசம்' என இப்போதும் லைம்லைட்டிலேயே இருக்கிறார்.

Actress Rashmika Mandanna
Actress Rashmika Mandanna

ஆனால், இப்போது தமிழ் சினிமாவுக்கு அடுத்த நயன்தாரா தேவைப்படுகிறார். அந்த இடத்துக்கு ராஷ்மிகா மந்தனாவை கைகாட்டுகிறது சினிமா உலகம். கர்நாடகத்தில் பிறந்து தெலுங்கு சினிமாவில் செம ஹிட்ஸ் கொடுத்து இப்போது தமிழுக்குள் நுழைந்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. 23 வயதான ராஷ்மிகா `கீதா கோவிந்தம்' படத்தின்மூலம் பிரபலமானார். `அலைபாயுதே' மாதவன் போல், `கீதா கோவிந்தம்' ராஷ்மிகா இளைஞர்களின் இதயங்களில் நுழைந்தார்.

இந்நிலையில்தான் தமிழ் சினிமாவுக்குள் வந்தார் ராஷ்மிகா. பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் `சுல்தான்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் `மாஸ்டர்' படத்திலேயே முதலில் ராஷ்மிகாவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால், தேதிகள் இல்லாததால் விஜய் - ராஷ்மிகா இணைய முடியாமல்போனது. ஆனால், அடுத்த படத்தில் ராஷ்மிகா மிஸ் ஆகக்கூடாது என முதலிலேயே கால்ஷீட்களை கவனித்து புக் செய்திருக்கிறார்கள். விஷயம் என்னவென்றால் படங்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட அரைசதத்தை எட்டிய பிறகே 5 கோடி சம்பளத்துக்கு உயர்ந்தார் நயன்தாரா.

ஆனால், இப்போதே ராஷ்மிகாவின் சம்பளம் 4 கோடி ரூபாயாம்!

வெல்கம் ஆன் போர்டு ராஷ்மிகா!

அடுத்த கட்டுரைக்கு