Published:Updated:

தமிழைப்போல தெலுங்கில் ரீமேக்காகும் அந்தாதுன் - ஹீரோ யார் தெரியுமா?

`அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் இவர்தான் ஹீரோ.

`அந்தாதுன்'
`அந்தாதுன்'

சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த திரைக்கதை என இந்த வருடம் மூன்று தேசிய விருதுகளை வென்ற படம், `அந்தாதுன்'. ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே ஆகியோர் நடித்திருந்த இப்படத்துக்கு ஏகபோக வரவேற்பு. இதன் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் வாங்கியுள்ளார். இவர் இந்தப் படத்தை தயாரிக்க, பிரஷாந்த் கதாநாயகனாக நடிக்கிறார் என்ற அறிவுப்பு வந்தது.

நானி
நானி

ஏற்கெனவே, ஶ்ரீராம் ராகவன் பாலிவுட்டில் எடுத்த `ஜானி கட்டார்' படம்தான் தமிழில் பிரஷாந்த் நடிப்பில் `ஜானி' என்று வெளியானது. இதை யார் இயக்கப்போகிறார்கள், கதாநாயகி யார் என்பதை விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள். இந்த நிலையில், இதன் தெலுங்கு வெர்ஷனில் நானி நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. `கேங்க் லீடர்' என்ற படத்தை சமீபமாக முடித்த நானி, அவரது 25வது படமான 'V' படத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ், அதிதி ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை முடித்துவிட்டு `அந்தாதுன்' தெலுங்கு ரீமேக்கில் நானி இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.