Published:Updated:

நானி நடித்த `ஜெர்ஸி' படத்தின் ரீமேக்! - தமிழில் விஷ்ணு விஷால்; இந்தியில்?

உ. சுதர்சன் காந்தி.

தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான `ஜெர்ஸி' படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளில் ரீமேக் ஆகவிருக்கிறது.

 'ஜெர்ஸி'
'ஜெர்ஸி'

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நானி - ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடிப்பில் வெளியான `ஜெர்ஸி' திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இதில் ஹரீஷ் கல்யாண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இப்படம் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ரீமேக் ஆகவிருக்கிறது.

ஷாகித் கபூர் -ராஷ்மிகா மந்தனா
ஷாகித் கபூர் -ராஷ்மிகா மந்தனா

இதன் தமிழ் வெர்ஷனை இயக்குநர் நெல்சன் வெங்கடேஷ் இயக்க, விஷ்ணு விஷால் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு ஜோடியாக அமலா பால் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்தப் படம் மூலமாக கோலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார், நடிகர் ராணா டகுபதி.

இந்த நிலையில், இதன் பாலிவுட் ரீமேக்கில் ஷாகித் கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தெலுங்கில் ப்ளாக்பஸ்டரான `அர்ஜுன் ரெட்டி' படத்தின் இந்தி வெர்ஷனான `கபீர் சிங்' படத்திலும் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனாவை அணுகியுள்ளது, படக்குழு.

`கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' உள்ளிட்ட படங்கள் மூலம் மக்களுக்கு பரிட்சையமான இவர் தமிழில் கார்த்தியுடன் ஒரு படம், தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் ஒரு படம், மகேஷ்பாபுவுடன் ஒரு படம் என பிஸியாக இருக்கிறார். இந்தப் படத்தின் பாலிவுட்டிலும் அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் இந்தி வெர்ஷனை இயக்குவது யார் என்றும் பேச்சுவார்த்தைகள் போய்க்கொண்டிருக்கிறது.