சினிமா
தொடர்கள்
Published:Updated:

பக்கா மாஸ்! - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்!

கோலிவுட் நாயகிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
கோலிவுட் நாயகிகள்

சினிமாவுக்கான வர்த்தகம் நெடுங்காலமாகக் கதாநாயகர்களை மையப்படுத்தியே இருந்து வந்திருக்கிறது.

டம் வெற்றியடைகிறதோ, தோல்வியைத் தழுவுகிறதோ; மக்களுக்குப் பிடித்திருக்கிறதோ, பிடிக்கவில்லையோ... ஹீரோக்கள் நடிக்கும் படத்திற்குத்தான் மரியாதையும், ரசிகர் கூட்டமும் என்ற நிலை இன்று கொஞ்சம் மாறியிருக்கிறது. கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் சினிமாக்களின் எண்ணிக்கை வளர்ந்துகொண்டி ருக்கிறது; கதாநாயகிகளுக்கான சினிமாவும் புதிய உச்சங்களை எட்டத்தொடங்கியிருக்கிறது.

பக்கா மாஸ்! - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்!

தமிழில் மட்டுமல்ல, கடந்த சில ஆண்டுகளாக நாயகிகளை மையமாகக்கொண்ட சினிமா எல்லா மொழிகளிலும் அதிகமாகவே வரத் தொடங்கியிருக்கின்றன. தெலுங்கில் விஜய சாந்திக்குப் பிறகு அனுஷ்கா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் எனப் பலரும் கதாநாயகியை மட்டுமே மையப்படுத்திய கதைகளில் நடித்து வெற்றிபெறத் தொடங்கியிருக்கிறார்கள். பாலிவுட்டில் வித்யா பாலன், தீபிகா படுகோன், கங்கனா ரணாவத் தொடங்கி, டாப்ஸி வரை பெண்களை மையப்படுத்திய சினிமாக்களில் தொடர்ந்து வெற்றியாளர்களாகவே வலம் வருகிறார்கள். அதே டிரெண்ட் இங்கேயும் உருவாகத்தொடங்கியி ருக்கிறது.

தமிழ்சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் நயன்தாரா பெற்ற அடுத்தடுத்த வெற்றி, ‘ஹீரோயின் சினிமா’க்கள் பரவலாக உருவாக அடிப்படைக் காரணமாக அமைந்தது. இன்று தமிழ் சினிமாவில் பல முன்னணி நாயகர்களைவிட அதிக ஊதியம் பெறும் நடிகையாகவும் திகழ்கிறார். அவரைத் தொடர்ந்து, சினிமாவை விட்டு விலகியிருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கி, ‘மகளிர் மட்டும்’, ‘காற்றின் மொழி’, ‘ராட்சசி’, ‘ஜாக்பாட்’ என ஹீரோக்களுக்கு நிகராக வெரைட்டியான கதைகளில் சிக்ஸர் அடிக்க ஆரம்பித்திருக்கிறார். த்ரிஷா ‘நாயகி’, ‘மோகினி’யில் தடுமாறினாலும், தொடர்ந்து ‘கர்ஜனை’, ‘பரமபத விளையாட்டு’ என நாயகர்கள் இல்லாத கதைகளில் தீவிரமாகக் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார்.

பக்கா மாஸ்! - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்!

தமன்னா, ஹன்சிகா, அஞ்சலி, ஆண்ட்ரியா, அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பலரும் ஹீரோக்களுக்கு நிகரான உழைப்பை மட்டுமல்ல; ஹீரோக்களுக்கு நிகரான வெற்றியையும் தர முடியும் என்று நிரூபிக்கவும் தொடங்கியுள்ளனர். கிரிக்கெட் வீராங்கனையாக தீவிரப் பயிற்சி பெற்று எடை குறைத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘கனா’, யாருமே செய்யத்தயங்கும் பாத்திரத்தில் அமலாபால் நடித்த ‘ஆடை’ எனச் சில படங்கள் அதற்கு சாட்சி.

‘டர்ட்டி பிக்சர்’, ‘துமாரி சுலு’, ‘பிக்கு’, ‘பிங்க்’, ‘உயரே’ என இந்தி, மலையாள சினிமாக்களில் வருவதுபோன்ற யதார்த்த அல்லது அனைவருக்கு மான கமர்ஷியல் சினிமாக்களாக இல்லாமல் தமிழில் பேய், திகிலை மையப்படுத்திய ஹை-கான்செஃப்ட் (High Concept) கதைகள்தான் அதிகம் வருகின்றன. இதற்கான காரணமும் இல்லாமலில்லை.

த்ரிஷா - சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய படத்தைத் தயாரித்துக்கொண்டிருக்கும் தயாரிப்பாளர் விஜய ராகவேந்திரா பேசும்போது, “பொதுவாகவே, ஹை-கான்செஃப்ட் படங் களுக்குப் பெரிய அளவில் மார்க்கெட் இருக்கிறது. சாட்டிலைட் உரிமம் தொடங்கி, டிஜிட்டல் உரிமம் வரை கதாநாயகிகளை மையப்படுத்தி உருவாகும் படங்களுக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது. நயன்தாரா தவிர கதாநாயகியை மையப்படுத்தி வெளிவரும் படங்களுக்கு திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் நிர்ண யிக்கும் விலை குறைவுதான்.

பக்கா மாஸ்! - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்!

ஆனாலும், பெண்களை மையப்படுத்திய படங்களில் தீவிரமாக நடித்துக்கொண்டி ருக்கும் பல ஹீரோயின்கள் இந்திய சினிமாவுக்கே அறிமுகம் ஆனவர்களாக இருப்பதால், பிற மொழிகளில் டப்பிங் மற்றும் ரீமேக் உரிமங்கள் நல்ல விலைக்குப் போகும் நிலை உருவாகியிருக்கிறது. தவிர, திகில் - ஹாரர் படங்களை ஒரு ஹீரோவை வைத்து எடுத்தால், அதற்கான செலவு அதிகமாகும்” என்கிறார்.

கதாநாயகிகளுக்கான மார்க்கெட் நிலவரம் எப்படியிருக்கிறது என்பது குறித்து விநியோகஸ்தர் சக்திவேலனிடம் பேசினேன். “திரையரங்க உரிமையாளர்கள் ஹீரோ - ஹீரோயின் படம் என வகை பிரிப்பதில்லை. ஒரு படம் நல்ல வசூலைப் பெறுமா, பெறாதா என்பதைப் பொறுத்தே படங்கள் திரையிடப்படுகின்றன. ஆனால், ஒரு ஹீரோவின் படமென்றால் அவருடைய முந்தைய படத்தின் வசூல், கிடைத்த ரெஸ்பான்ஸ், அடுத்த படத்திற்கு இருக்கும் எதிர் பார்ப்பு எனப் பல காரணங் களால் ஒரு ஃபார்முலாவிற்குள் அடங்கிவிடும். ஹீரோயின்கள் நடிக்கும் படம் அப்படி இல்லை, புதுப்புதுக் கதைக் களத்துடன் வரும். எனவே, படத்தின் ஓப்பனிங் என்பது கதைக்களத்தை வைத்தே முடிவு செய்யப்படுகிறது.

தவிர, ஹீரோயின் படங்கள் என்றாலே பேய்ப் படமாகத்தான் இருக்கும் என்ற கருத்தை ஜோதிகா மாற்றிக் கொண்டிருக்கிறார். ‘மொழி’ தொடங்கி, ‘ஜாக்பாட்’ வரை... எல்லாவிதமான கதைகளிலும் கவனம் செலுத்துவதால், அவருடைய அத்தனை படங்களுக்கும் வரவேற்பு கிடைக்கிறது. ஹீரோயின்கள் ‘ஜாக்பாட்’ போன்ற கமர்ஷியல் கதைகளிலும் நடிக்க வேண்டும். நயன்தாரா பேய்ப் படங்களை அதிகமாகத் தேர்ந்தெடுத்து நடித்திருந்தாலும், அவர் நடித்த ‘கோலமாவு கோகிலா’ படத்துக்குக் கிடைத்த ஓப்பனிங் முக்கியமானது. ஒரு விநியோகஸ்தராக இதை ஒரு நல்ல மாற்றமாகப் பார்க்கிறேன். இரண்டாம்கட்ட நடிகர்கள் நடிக்கும் படங்களைத் தயாரிப் பதைவிட, ஹீரோயினை முன்னிலைப்படுத்திப் படங்களைத் தயாரிப்பது இப்போதைய சூழலில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராத வழிகளில் முக்கிய மானது” என்கிறார்.

‘ஆரோகணம்’, ‘அம்மணி’, ‘ஹவுஸ் ஓனர்’ படங்களை இயக்கிய லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் வேறொரு விஷயம் சொல்கிறார். “தமிழ்ல ஜோதிகா, நயன்தாரா இவங்க ரெண்டுபேரும் நடிக்கிற படங்கள் ஒரு ஃபார்முலா படங்களாகத்தான் இருக்கு. தமிழ் சினிமாவில் கதை களுக்கோ, படைப்பாளி களுக்கோ பஞ்சம் கிடையாது. அப்படியான கதைகளையும், படைப்பாளிகளையும் தேர்தெடுத்து நடிக்கும் போதுதான், மலையாளம், இந்தியில் உருவாகிக்கொண்டி ருக்கும் ரசனையுள்ள, யதார்த்தமான படைப்புகளை இங்கேயும் பார்க்க முடியும். ஏனெனில், ஒரு சினிமாவில் ஹீரோ இல்லை என்றாலே அது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற படம் எனச் சொல்லிவிட முடியாது” என்கிறார், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.

பக்கா மாஸ்! - தனித்துக் கலக்கும் கோலிவுட் நாயகிகள்!

“ஆணாதிக்கம் அதிகம் இருக்கும் சினிமாத் துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் சம்பந்தமான படங்கள் அதிக அளவில் வரவேண்டும். முன்னணிக் கதாநாயகிகள் படமாக இருந்தாலும், அவை கருத்துகளை வலிந்து திணிக்கக் கூடாது. பெண் முதன்மைக் கதாபாத்திரங்கள் ஆண்கள் போலக் கட்டமைக்கப்படக் கூடாது. பெண்கள் ஆண்களை விட வலிமையானவர்கள். தவிர, கதாநாயகிகளுக்கு தினசரி அரசியல் களம் தெரியாதது, ஒரே ஃபார்முலாவில் படங்கள் வரக் காரணமாக இருக்கிறது” என்கிறார், இயக்குநர் கோபி நயினார்.

“ஒருகாலத்தில் கதா நாயகிகளை மட்டுமே வைத்துப் படமெடுத்தால் ரசிகர்கள் பார்க்கமாட்டார்கள்; அது 100% ரிஸ்க் என்றும் கூறப் பட்டது. தற்போது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமங்களின் வியாபாரம் விரிந்துள்ளதால், ஹீரோயினை மையப்படுத்திய படங்களை எடுப்பதில் இருக்கும் ரிஸ்க் 40 சதவிகித மாகக் குறைந்திருக்கிறது. ரசிகர்கள் தற்போது ஹீரோயின் களின் படத்திற்கும் அதிகமாக வரத் தொடங்கியுள்ளதால், இந்த ரிஸ்க் இன்னும் குறையும்!” என்கிறார், தயாரிப்பாளர் தனஞ்செயன்.

முதன்மைக் கதாபாத்தி ரத்தில் பெண்கள் நடிக்கிறார்கள் என்பதைத் தாண்டி, இவை யெல்லாம் பெண்களின் உணர்வைப் பேசும் படங்களாக இருக்கின்றனவா என்ற விவாதமும் எழுகிறது. ஆனால், அவையெல்லாம் மீறி, இனி தமிழ்ப் படங்களைக் கதா நாயகர்கள்தான் அரியணை யேற்ற வேண்டும் என்ற பிம்பத்தை உடைத்திருக்கின்றன ஹீரோயின்களின் சினிமாக்கள். இவை, கதாநாயகிகளை மட்டுமல்ல; தமிழ் சினிமாவை யும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச்செல்ல வேண்டும்!