
மு.நவீன் பாரத்
தமிழ் சினிமாவில் ‘லூஸுப் பெண்’ ஹீரோயின்களைத் தாண்டி யோசிக்கும் இயக்குநர்கள் அரிது. கதையில் பங்கெடுக்கும் ஹீரோயின், ரொமான்ஸ் மற்றும் பாடல் என சில சீன்களுக்கு மட்டுமே போதும் என்று நினைத்தே இங்கு பல ஸ்கிரிப்ட்களும் எழுதப்படுகின்றன. என்றாலும், பெண் கதாபாத்திரங்களை முதன்மையாகக் கொண்ட படங்கள் தமிழ் சினிமா, இந்திய சினிமா, உலக சினிமா என்று எல்லா தளங்களிலும் அவ்வப்போது வெளிவருவதுண்டு. உலகத் திரைப்படத் தொழிற்சாலையான ஹாலிவுட்டில் அப்படி வெளியான ஷீரோ (Shero) படங்களின் தொகுப்பு இங்கே. உடல் வலிமை, மனவலிமை, அறிவாற்றல் என அசத்திய இந்தக் கதாபாத்திரங்களும் படங்களும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டோ ஹிட்!

எரின் புரோகவிச்
2000-ம் ஆண்டு வெளிவந்த, செயற்பாட்டாளர் எரின் புரோகவிச்சின் பயோகிராஃபி திரைப்படம், எரின் புரோகவிச் (Erin Brockovich). எரின் புரோகவிச் கதாபாத்திரத்தில், நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் நடித்திருப்பார். எரின், மூன்று குழந்தைகளுக்குத் தாய். கணவர் இல்லை, வேலை இல்லை, வங்கிக் கணக்கில் பணமும் இல்லை. எரினின் மீது உலகம் இந்தக் கடுமையான சவால்களை வீசுகிறது. வழக்கறிஞரான எரின் தற்செயலாக ஒரு ஃபைலைப் படிக்கும்போது, ஒரு வழக்கில் குறிப்பிட்ட ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் இன்னலைக் கண்டு கொதித்தெழுகிறார். நகரத்தின் தண்ணீரை மாசுபடுத்தும் ஒரு நிறுவனத்தைத் தனி ஒருத்தியாக அவர் வீழ்த்துவதே கதை.
ரீல் அல்ல... ரியல் ஹீரோயின்!

கேட்னிஸ் எவர்டீன்
2003, 2004-ல் வெளிவந்த Kill Bill படத்தின் லீடு கேரக்டர், தி பிரைடு (The Bride).
தி பிரைடு நான்கு வருடங்கள் கோமாவில் இருந்து எழுகிறார். அதற்கு முன், அவரின் காதலர் தி பிரைடின் திருமண நாளில் அவரைக் கொலை செய்ய முயல்கிறார். அதில் அவரின் கரு கலைகிறது. அதற்குப் பழிவாங்க, அந்தக் கொலை முயற்சிக்குப் பங்களித்த ஒவ்வொருவரையும் தி பிரைடு பழிவாங்குவதே கதை. தற்காப்புக்கலை, ஜப்பானிய வாள் வித்தையில் கில்லாடியான தி பிரைடு தன் எதிரிகளைப் பந்தாடும் ஆக்ஷன் சீன்கள்தான், படத்தின் ப்ளஸ். சினிமா வரலாற்றில் முக்கியமான சண்டைக் காட்சியாகக் குறிப்பிடப்படும் இந்தப் படத்தின் ஆக்ஷன் சீன்களில், உமா தர்மன் அட்டகாசம் செய்திருப்பார்.
டிஷ்யூம்!

தி பிரைடு
2012-ல் வெளிவந்த ‘The Hunger Games’ திரைப்படம், தொடர்ந்து இதுவரை நான்கு தொகுதிகள் வெளிவந்துள்ளன. ஒவ்வொரு ரிலீஸின்போது பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டுகளை நிகழ்த்திய இந்தத் திரைப்படத்தின் கதைநாயகி கேட்னிஸ் எவர்டீன் (Katniss Everdeen). அந்த கேரக்டரில் நடிப்பு சாகசம் செய்திருப்பார், ஜெனிஃபர் லாரன்ஸ். பேனம் நாடு, 12 மாவட்டங்களைக் கொண்டது. சர்வாதிகாரிகளின் ஆட்சியில் சிக்கித் தவித்த அந்த நாட்டில், ஆண்டுக்கு ஒருமுறை அடிமை குடிமக்களை வைத்து ‘ஹங்கர் கேம்ஸ்’ நடத்தப்படும். அதில் பங்கேற்க 12 மாவட்டங்களில் இருந்தும் 12 - 18 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் அனுப்பி வைக்கப்பட வேண்டும். இருவர் மோதும் அந்த விளையாட்டு, இருவரில் ஒருவர் இறக்கும்வரை தொடர வேண்டும். இந்தத் துன்புறுத்தல் விளையாட்டில் பங்கேற்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட தன் தங்கைக்குப் பதிலாக, தான் கலந்துகொள்கிறார் கேட்னிஸ் எவர்டீன். அடிமைப்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கேட்னிஸ் தனது வீரத்தாலும் விவேகத்தாலும் பேனம் நாட்டுக் குடிமக்களைக் கவர்கிறார். இந்தப் போட்டியில் பங்கேற்று, மக்களின் மனதில் விடுதலை உணர்வை விதைக்கிறார். ஒரு திடீர் எழுச்சியில் சர்வாதிகாரிகளை கேட்னிஸ் வீழ்த்தும் திரைக்கதை, மாஸ் சினிமாவுக்கெல்லாம் பாஸ்!
பார்ட் 5-க்கு வெயிட்டிங் கேட்னிஸ்!

க்ளரீஸ் ஸ்டார்லிங்
சைக்காலஜிக்கல் ஹாரர் வகைத் திரைப்படமான The Silence of the Lambs, 1991-ம் வருடம் வெளிவந்தது. ஆணாதிக்கம் நிறைந்த காவல்துறை விசாரணை ஆணையமான எஃப்.பி.ஐ (FBI - The Federal Bureau of Investigation)-ல் பயிற்சியில் இருக்கும் பெண் க்ளரீஸ் ஸ்டார்லிங் (Clarice Starling). பெண்களைக் கடத்திக் கொல்லும் ஒரு சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்க வேட்டைக் களத்தில் இருக்கும் க்ளரீஸ், தனக்கு இதில் உதவ சிறப்பான மனநல மருத்துவரும், மனிதர்களை உண்ணும் சீரியல் கில்லருமான ஒரு கைதியை அணுகுகிறார். அந்த சைக்கோவிடம் தனக்குத் தேவையான தகவல்களைத் தன்னைப் பாதுகாத்தபடி சேகரித்துக்கொண்டு, தடதட திரைக்கதையில் குற்றவாளியைக் கண்டுபிடித்து, ஆபத்திலிருக்கும் பெண்களைக் காப்பாற்றுகிறார் க்ளரீஸ். பொதுவாக, இதுபோன்ற புலனாய்வுக் கதைகளில் ஆண்களே முதன்மை கதாபாத்திரமாக இருப்பர். ‘ஏன் பெண்கள் துப்பறியக் கூடாதா?’ என்று கேட்கும் க்ளரீஸ் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஜோடி ஃபாஸ்டர், இந்த கேரக்டருக்காக ஆஸ்கர் அவார்டு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜோடி ஃபாஸ்டருக்கு இயக்குநர், தயாரிப்பாளர் முகங்களும் உண்டு.
உமன் பவர்!