Published:Updated:

"என் மியூசிக்ல யுவன் பாடினது, கமல் சாரை சந்திச்சது ரெண்டுமே பெரிய சந்தோஷம்!"- `அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி

`அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி

அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் 'அன்பறிவு' படத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவிருக்கும் படம் குறித்து ஆதியைச் சந்தித்தபோது...

"என் மியூசிக்ல யுவன் பாடினது, கமல் சாரை சந்திச்சது ரெண்டுமே பெரிய சந்தோஷம்!"- `அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி

அறிமுக இயக்குநர் அஸ்வின் ராம் இயக்கத்தில் 'அன்பறிவு' படத்தில் நடித்திருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி. விரைவில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் ரிலீஸாகவிருக்கும் படம் குறித்து ஆதியைச் சந்தித்தபோது...

Published:Updated:
`அன்பறிவு' ஹிப்ஹாப் ஆதி

''அன்பறிவு படம் பெரிய படம். படத்துல நடிச்சிருக்குற நட்சத்திரங்களும் அதிகம். படத்துக்கான பட்ஜெட்டும் அதிகம். 'நான் சிரித்தால்' படத்துக்குப் பிறகு வெளியாக வேண்டிய படம், கொஞ்சம் லேட்டாயிருச்சு. நெப்போலியன் யு.எஸ்ல இருந்து வந்து நடிச்சுக் கொடுத்தார். ஆஷா சரத் மேடம் நடிச்சிருக்காங்க. பெரிய நட்சத்திரங்கள் எல்லாரையும் சேர்த்து அவுட்டோர் ஷூட் பொள்ளாச்சி, பழனி ஏரியாவுல சுத்தி வளைச்சுப் படம் எடுத்தாச்சு. பேமிலி ஆடியன்ஸுக்கு ஏத்த மாதிரியான படமா இது இருக்கும். சத்யஜோதி பிலிம்ஸ் எப்போவும் பேமிலி ஆடியன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க. இந்தப் படத்தை எடுத்ததுல அவங்களும் ஹேப்பி.

அன்பறிவு
அன்பறிவு

படத்தோட இயக்குநர் அஸ்வின் ராம் 'நட்பே துணை' தெலுங்கு ரீமேக்ல க்ரியேட்டிவ் டைரக்டரா இருந்தவர். அப்போதிருந்தே எனக்குத் தெரியும். இவரும் மியூசிக்ல இருந்து வந்த டைரக்டர். எங்க ரெண்டு பேருக்கும் நல்ல கனெக்ட் எப்பவும் இருந்திருக்கு. என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கிட்ட டைரக்டர். என்னோட முழு வாழ்க்கையையும் பார்த்து ரசிச்சு வந்தவர் அஸ்வின். இதனால, அஸ்வின் எது சொன்னாலும் கேள்வி கேட்கமாப் பண்ணிருவேன். நல்லபடியா படமும் ரெடியாகிருச்சு. நல்ல எமோஷனல் படமா இருக்கும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தப் படத்தைப் பொறுத்த வரைக்கும் நம்ம ஊர் கல்ச்சர் லுக்ல இருக்கணும்னு வேட்டி சட்டை போட்டு நடிச்சேன். 'தேவர் மகன்' லுக்ல இருக்கணும்னு டைரக்டர் அஸ்வின் ஆசைப்பட்டு, பெருசா கெட்டப் சேஞ்ச் பண்ணினார். தலைகீழாக்கூட குதிக்க ரெடியானேன். இது முழுக்க முழுக்க டைரக்டர் படம்தான். அஸ்வின் சொன்னதை அப்படியே செஞ்சேன். ஒரு சீன்ல மாடு பிடிக்கச் சொல்லிட்டார். மாடுதானேன்னு பிடிக்க ரெடியாயிட்டேன். ரொம்ப கூல்லா நின்னுக்கிட்டிருந்தேன். அப்போ திடீர்னு மாடு கயிற்றை அறுத்துட்டு ஓடி வர ஆரம்பிச்சிருச்சு. என் பக்கத்துல வந்து நின்னதைப் பார்த்து பயந்துட்டேன். நல்லவேளை எதுவும் பண்ணாம அமைதியா நின்னுருச்சு.

இந்தப் படத்துல நடிச்ச ’ராஜா’ மாட்டோட கம்ஃபர்ட்டுக்கு ஏத்த மாதிரிதான் ஷூட்டிங் பண்ணினோம். பர்பினா ரொம்பப் பிடிக்கும்னு மூட்டை நிறைய வாங்கிக் கொடுத்து கம்பர்ட் ஜோன்ல வெச்சுதான் படமே எடுத்தோம். நைட் ஷூட்டிங்னா ஆர்ட்டிஸ்ட்கூட ரெடியாகிருவோம். ஆனா, மாடு ராஜா மட்டும் ரெடியாகவே ஆகாது.

நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி
நெப்போலியன், ஹிப்ஹாப் ஆதி

முக்கியமா, நானொரு யுவன் ஃபேன். என்னோட மியூசிக்ல யுவன் பாடுனது 'அன்பறிவு'ல நடந்தது. கிட்டதட்ட நிறைய பேசிட்டு இருந்தோம். ரொம்ப ஜாலியா பாடிக் கொடுத்துட்டுப் போனார். யுவன் சார் ஸ்டூடியோ வந்ததெல்லாம் மறக்கவே முடியாது.

இந்தப் படம் முழுக்க எமோஷனல் கனெக்ட் நிறைய கொடுத்திருக்கு. படத்தோட கடைசி ஷாட் முடிச்சிட்டுக்கூட யாரும் பேக்கப்புக்கு ரெடியாகல. ரொம்ப பேமிலியா எல்லாரும் படம் மூலமா வாழ்ந்துட்டு இருக்கோம்.

'அன்பறிவு' படத்தோட புரொமோஷனுக்காக பிக் பாஸ் செட்ல கமல் சாரைப் பார்த்ததும் நல்ல அனுபவமா இருந்தது. 2016-ல ஜல்லிக்கட்டுப் போராட்டம் முடிஞ்சி என்னோட படம் 'மீசையை முறுக்கு' ரிலீஸுக்கு ரெடியா இருந்த நேரத்துல கமல் சார் பார்க்கக் கூப்பிட்டிருந்தார். 'நம்மள எதுக்கு கூப்பிடுறாங்க’ன்னு டவுட்டோட போனேன். இருபது நிமிஷத்துக்கிட்ட என்கிட்ட பேசிட்டிருந்தார். 'ரொம்ப நல்லா பண்ணுறீங்க, கலை மூலமா நிறைய விஷயங்களைச் சொல்லுங்க'ன்னார். எனக்கு எதுவுமே அப்போ புரியல. ஆனா, ரொம்பப் பாராட்டினார். சின்ன வயசுல இருந்து கமல் சாரைப் பார்த்து வளர்ந்திருக்கோம். ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி

திரும்பவும் பல வருஷங்களுக்குப் பிறகு 'அன்பறிவு' படத்தோட புரொமோஷனுக்காக பிக் பாஸ்ல சந்திச்சப்போ என்னை நல்லாவே ஞாபகம் வெச்சிருந்தார். எப்போவும் படத்தோட புரொமோஷனுக்காக கமல் சார் பிக் பாஸ்ல பெருசா பேசினதில்ல. ஆனா, எங்க படத்தைப் பற்றி நிறைய பேசினார். எனக்கு ஒரு மாதிரி பயமே வந்திருச்சு. கண்டிப்பா இவர்கூட ஒரு போட்டோ எடுக்கணும்னு ரொம்பநாள் ஆசை. அதை நிறைவேத்திக்கிட்டேன். ரொம்ப என்கரேஜ் பண்ணினார்" என்று முடித்தார் ஆதி.