
சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகிவரும் சூரரைப் போற்று
என்.ஜி.கே. படத்துக்கு பிறகு 'காப்பான்' படத்தின் ரிலீசை எதிர்பார்த்திருக்கிறார் சூர்யா. தற்போது, தனது 38-வது படமான 'சூரரைப் போற்று' படத்தில் நடித்து வருகிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தின் டைட்டிலும் ஃபர்ஸ்ட் லுக்கும் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பெறும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த பாடல்களைக்கேட்ட சூர்யா அவருக்கு பாராட்டுக்ளைத் தெரிவித்து வாழ்த்தியிருந்தார்.

படத்தில் , சூர்யாவுக்கு ஜோடியாக 'சர்வம் தாளமயம்' படத்தின் நாயகி அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தெலுங்கு நடிகர மோகன்பாபு தேர்வாகியுள்ளார். ஏற்கெனவே மணிரத்னம் இயக்கவிருக்கம் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடிப்பதற்காக இவரை அணுகியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படம், ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது. இந்தப் படத்தில் ஹாலிவுட் படங்களான ஸ்கைஃபால், பான் அல்டிமேட்டம் உள்ளிட்ட படங்களில் ஸ்டன்ட் வடிவமைப்பாளராக இருந்த கிரேக் போவெல், இப்படத்துக்கு ஸ்டன்ட் இயக்கம் செய்யவிருக்கிறார்.