சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

ஓ.டி.டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஓ.டி.டி

ஓடிடி அனுபவம்.

லாக்டௌனில் தியேட்டர்கள் இல்லாத குறையைப் போக்கியவை ஓ.டி.டி தளங்கள்தான். இப்போது வீடே திரையரங்கம் ஆகிவிட்டது. தமிழ்ப்படத்தைத் தாண்டிப் பார்க்காதவர்கள்கூட பிறமொழிப்படங்களை ரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஓ.டி.டி தளங்களில் வெளியான முக்கியமான பிறமொழிப் படங்களைப் பற்றி ஒரு ரவுண்டு பார்ப்போம்! (ஏற்கெனவே ஆனந்த விகடனில் அலசப்பட்ட படங்களைத் தவிர்த்துவிட்டோம்)

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

‘பிரெஞ்ச் பிரியாணி’ கன்னட சினிமாவில் அரிதாக நிகழும் ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருந்தாலும், ஒரு நிறைவான படமாக அமையாமல் ‘பிரியாணியில் லெக்பீஸ் மிஸ்ஸிங்’ ஃபீலைக் கொடுத்தது. இதே அமேசானில் வெளியான இந்திப்படமான ‘குலாபோ சிதாபோ’வில் அமிதாப் - ஆயுஷ்மானின் கெமிஸ்ட்ரி வொர்க் கவுட்டானாலும் படம் பெரிய அலையை ஏற்படுத்தவில்லை.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?
ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

அமேசானுக்கு அடுத்து, ஓ.டி.டி ஜாம்பவானான நெட்ஃப்ளிக்ஸ் தெலுங்கில் ‘கிருஷ்ணா அண்டு ஹிஸ் லீலா’, ‘உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா’ என இரண்டு படங்களை வெளியிட்டது. ‘க்ஷணம்’ (தமிழில் சிபிராஜ் நடித்த ‘சத்யா’) படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரவிகாந்த் ‘கிருஷ்ணா அண்டு ஹிஸ் லீலா’வில் பிரேக் அப், ஒரு முடிவெடுப்பதில் குழப்பம் எனப் பல்வேறு விஷயங்களை அலசி ஒரு கலர்ஃபுல் என்டர்டெயினராக படத்தைக் கொடுத்திருந்தார். மலையாள க்ளாசிக்கான ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தெலுங்கு வெர்ஷன்தான் ‘உமா மகேஸ்வர உக்ர ரூபஸ்யா’. ஹீரோ சத்யதேவ்வின் நடிப்பு பாராட்டப்பட்ட அதே வேளையில் படமும் ஒரிஜினல் வெர்ஷனுக்கு நியாயம் சேர்த்ததாகப் பாராட்டுகளைப் பெற்றது.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?
ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

‘சுப் மங்கள் ஜ்யாதா சாவ்தான்’, மற்றும் ‘பஞ்சாயத்’ வெப் சீரிஸ் மூலம் பாலிவுட்டைத் திரும்பிப் பார்க்கவைத்த ஜிதேந்திர குமாரின் முதல் படம் ‘சமன் பஹார்’ தாமதமாக நெட்ஃப்ளிக்ஸில் நேரடி ரிலீஸ் கண்டிருக்கிறது. ஆனால், திரைக்கதையின் சுவாரஸ் யத்தைத் தாண்டி, ஆணாதிக்கப் பாத்திரங்களைப் புனிதப் படுத்தி முன்னிறுத்தும் படம் என்ற விமர்சனத்தைச் சந்தித்தது. கார்கில் போரில் பங்கேற்ற இந்திய விமானப் படையின் ஒரே பெண் வீரரான குன்ஜன் சக்சேனாவின் வாழ்க்கை அவரின் பெயரிலேயே படமாக வெளியாகியிருக்கிறது. கரன் ஜோஹர் தயாரிப்பில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், குன்ஜன் சக்சேனாவாக நடித்திருக்கிறார். சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின் பாலிவுட்டில் நடக்கும் நெப்போட்டிஸ பஞ்சாயத்துகள் இந்தப் படத்துக்கு ஒரு நெகட்டிவ் வைப்ரேஷனைக் கொடுத்துள்ளன. ஜான்வியின் நடிப்பும் சுமார்தான்.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?
ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

Zee5 தளத்தில் ‘சிண்டு கா பர்த்டே’, ‘யாரா’ இந்திப் படங்கள் வெளியாகின. சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட 2004-ல் ஈராக்கில் ஒரு சிறுவன் கொண்டாடும் பர்த்டே பார்ட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள காமெடி டிராமா ‘சிண்டு கா பர்த்டே.’ படத்தைப் பார்த்த வர்கள் சிலாகித்தாலும் பலருக்கும் இப்படியொரு படம் வெளியானதே தெரியவில்லை. வித்யூத் ஜாம்வால், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான ‘யாரா’, ‘A Gang Story’ என்ற பிரெஞ்ச் படத்தின் ரீமேக். சுமார் ரக விமர்சனங்களையே பெற்றது.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

நேரடி ஓ.டி.டி ரிலீஸ் போட்டியில் கடைசியாக வந்து சேர்ந்திருக்கிறது ஹாட்ஸ்டார். அதன் மிக முக்கிய ரிலீஸ் சுஷாந்த் சிங்கின் கடைசி படமான ‘தில் பெச்சாரா.’ அடுத்து காமெடி டிராமாவான ‘லூட்கேஸ்’ என்ற படத்தை இறக்க அதற்கும் பாசிட்டிவ் வான விமர்சனங்களே கிடைத்தன.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

இவைதவிர ‘ஆஹா’ என்ற புதிய ஓ.டி.டி தளம் ‘பானுமதி ராமகிருஷ்ணா’ என்ற தெலுங்குப் படத்தை வெளியிட்டது. நடுத்தர வயது ஜோடியின் காதல் கதையைப் பேசிய இந்த ஃபீல்குட் படம், சமூக வலைதள வேர்டு ஆஃப் மவுத்திற்குப் பிறகே கவனம் பெற்றது.

ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?
ஓ.டி.டி - என்ன படம் எப்படி இருந்துச்சு?

தியேட்டர்களில் விசிலடித்துப் படம் பார்க்கும் உற்சாகமும், இன்டர்வெல்லில் பாப்கார்னுடன் படத்தையும் ரசிக்கும் சுவாரஸ்யத்தையோ ஓடிடி அனுபவம் தரப்போ வதில்லை என்றாலும், நிச்சயம் ஓ.டி.டிக்குப் பழகியவர்கள் அதைத் தொடரப் போகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம்.