Published:Updated:

கொரோனாவை எதிர்கொள்ளும் கோலிவுட்!

ரஜினிகாந்த்,விஜய்,அஜித்,கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த்,விஜய்,அஜித்,கமல்ஹாசன்

லாக்டெளன் தொடக்கத்தில் போயஸ் கார்டன் வீட்டில்தான் இருந்தார் ரஜினி.

கொரோனாவை எதிர்கொள்ளும் கோலிவுட்!

லாக்டெளன் தொடக்கத்தில் போயஸ் கார்டன் வீட்டில்தான் இருந்தார் ரஜினி.

Published:Updated:
ரஜினிகாந்த்,விஜய்,அஜித்,கமல்ஹாசன்
பிரீமியம் ஸ்டோரி
ரஜினிகாந்த்,விஜய்,அஜித்,கமல்ஹாசன்

பாலிவுட்டின் ‘பிக் பி’ அமிதாப் பச்சனுக்குக் கொரோனா, அடுத்து அபிஷேக் பச்சன், ‘50 கே.ஜி தாஜ்மகால்’ என்று தமிழகம் பட்டம் தந்த ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் மகளுக்கும் கொரோனா என அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்தி வந்ததிலிருந்தே கோலிவுட்டுக்குள்ளும் கலக்கம். தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என விசாரித்தோம்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

லாக்டெளன் தொடக்கத்தில் போயஸ் கார்டன் வீட்டில்தான் இருந்தார் ரஜினி. பிரதமர் மோடி கைதட்டுவது, விளக்கேற்றுவது எனத் தொடர் டாஸ்க்குகள் கொடுத்தபோது போயஸ் இல்லத்தில் சின்சியராகச் செய்தார். ஆனால், ஜூன் ஆரம்பத்தில் கொரோனா சென்னையில் அதிகளவில் பரவ ஆரம்பித்ததும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்துக்கு லதா மற்றும் பேரன்கள் யாத்ரா, லிங்காவுடன் குடியேறிவிட்டார். கேளம்பாக்கம் பண்ணைவீடு கிட்டத்தட்ட 5 ஏக்கர் பரப்பளவு கொண்டது. உள்ளேயே விளையும் காய்கறிகளைக் கொண்டுதான் சமையல். சித்த மருத்துவர் வீரபாபுவைத் தொடர்புகொண்டு ஆலோசனைகள் கேட்டுப் பின்பற்றிவருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன்

`இந்தியன் -2’, ‘பிக்பாஸ் சீஸன் - 4’, ‘தலைவன் இருக்கிறான்’ எனப் பல புராஜெக்ட்டுகளுக்கும் தேதி கொடுக்கமுடியாமல் தவித்து வருகிறார்  கமல். லாக்டௌன் நாள்களில் `தலைவன் இருக்கிறான்’ படத்தின் ஃபைனல் வெர்சனை முடித்திருக்கிறார். இன்னொரு படத்தையும் சர்ப்பரைஸாக முடித்திருக்கிறாராம். இந்தக் கதை முழுக்க லாக்டெளனில் எழுதப்பட்ட தென்பதால் இனி நாம் வாழப்போகும் ‘நியூ நார்மல்’ வாழ்க்கைக்கு ஏற்றபடி கதை இருக்குமாம். நடிகர்கள், ஷூட் நாள்கள், யூனிட் என எல்லாவற்றிலும் மினிமலிஸ்ட்டாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறதாம். ஆனால், முதலில் எந்த புராஜெக்ட்டை கமல் கையில் எடுப்பார் என்பது சஸ்பென்ஸ். ‘பிக்பாஸ்’ வீக் எண்ட் எபிசோடுகளை ஜூம் மூலம் மக்கள் இணைய, ஹோட்டலில் இருந்தபடியே உலக நாயகன் பேசி ஷூட் செய்ய இருக்கிறார்கள். 

விஜய்
விஜய்

விஜய்!

லாக்டெளனுக்கு முன்பு பனையூர் வீட்டில் இருந்த விஜய் இப்போது மீண்டும் நீலாங்கரை வீட்டுக்கு வந்துவிட்டார். விஜய், மனைவி சங்கீதா மற்றும் மகள் சாஷா என வீட்டில் மூவர்தான். பல ஆண்டுகளாக வீட்டில் வேலை செய்பவர்கள் மட்டும் வீட்டுக்குள் இருக்கிறார்கள். வெளியிலிருந்து வரும் யாரும் அனுமதிக்கப்படு வதில்லை. ஆரம்பத்தில் மகன் சஞ்சய்க்குக் கொரோனா எனச் செய்திகள் பரவியதில் விஜய் அப்செட். கனடாவில் சங்கீதாவின் உறவினர்கள் வீட்டில் சஞ்சய் தங்கியிருக்கிறார். தினமும் மகனுடன் வீடியோ கால் பேசுவது, தன்னுடைய நண்பர்களுடன் பேசுவது என ரிலாக்ஸாகவே இருக்கிறார் தளபதி.

அஜித்
அஜித்

அஜித்!

லாக்டெளன் என இல்லை... பொதுவாகவே ஷூட்டிங் இல்லையென்றால் வெளியே வரமாட்டார் அஜித். இப்போதும் நீலாங்கரை வீட்டிலிருந்து வெளியே வருவதில்லை. ஏப்ரல் மாதம் அஜித் மற்றும் ஷாலினி ஒரு தனியார் மருத்துவமனைக்கு வந்த வீடியோ வைரலானது. தன்னுடைய வழக்கமான செக்கப்புக்காகத்தான் வெளியே வந்தார் அஜித். அதேபோல் அவரது வீட்டில் வேலைசெய்தவர்கள் அனைவருக்கும் தவறாமல் சம்பளம் தரப்படுகிறது, வேலைக்கு வரவேண்டாம் என்கிற கண்டிஷனுடன். அதனால் ஷாலினியுடன் சமையல் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்தையும் பகிர்ந்து செய்துவருகிறார் தல.

சூர்யா, ஜோதிகா, கார்த்தி
சூர்யா, ஜோதிகா, கார்த்தி

சூர்யா -கார்த்தி

நடிகர் சிவகுமார் குடும்பம் தி.நகரில் வசிக்கிறது. சூர்யா, கார்த்தி மட்டுமல்லாமல் சிவகுமாரின் மகள் பிருந்தாவும் தனது குடும்பத்தினருடன் இந்த வீட்டில்தான் இருக்கிறார். வீட்டில் எந்தப் பணியாளர்களும் கிடையாது. ஜோதிகா, கார்த்தி மனைவி, பிருந்தா என ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேளை சமையல், அந்தநேரத்தில் அவர்கள் கணவர்கள் உதவிகள் செய்யவேண்டும் என டைம்டேபிள் போட்டு வேலைகள் நடக்கிறதாம். ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸின்போது அதன் இயக்குநரை வீட்டுக்கு வரவழைத்து சூர்யாவும் - ஜோதிகாவும் கேக் வெட்டினர். ஆனால், அதன்பிறகு வெளியில் இருந்து யாரையும் வீட்டுக்கு வரவழைப்பதில்லை. இவர்களுமே யாரும் வெளியே செல்வதில்லை.

Dhruv Vikram ,விக்ரம்
Dhruv Vikram ,விக்ரம்

விக்ரம்!

சாதாரணக் காய்ச்சலுக்கே கொஞ்சம் ஜெர்க் ஆவாராம் விக்ரம். அதனால் ஐரோப்பாவில் தீவிரமாக கொரோனா பரவ ஆரம்பித்ததுமே டிராவல் செய்வதை நிறுத்திவிட்டார் . இப்போது வீட்டை விட்டு வெளியே வருவதே இல்லை. ‘கோப்ரா’, ‘துருவ நட்சத்திரம்’, மகன் த்ருவுடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் என விக்ரமுக்குப் பல கமிட்மென்ட்கள் இருக்கின்றன. ஆனால், தடுப்பூசியெல்லாம் கண்டுபிடித்து, கொரோனாவே உலகத்தில் இல்லை என்கிற சூழல் வந்தால்தான் படப்பிடிப்புக்கு வெளியே வருவேன் என ஸ்ட்ரிக்ட்டாகச் சொல்லி விட்டாராம் சீயான்.

தனுஷ்!
தனுஷ்!

தனுஷ்!

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார் தனுஷ். 9-வது மாடியில் வீடு. இந்த ஃப்ளாட்டின் கீழேயே ஜிம். வீடு மற்றும் ஜிம்மைத்தவிர ஃப்ளாட்டை விட்டு வெளியே வருவதில்லை தனுஷ். மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரஜினி வீட்டுக்கு ஒன்றிரண்டு முறை போய்வந்தவர் அதன்பிறகு எங்கேயும் வெளியே வருவதில்லை. வீட்டுக்குள் இருந்தபடியே அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுவது, பாடல்கள் எழுதுவது எனத் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறாராம் தனுஷ்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

 இந்த லாக்டெளன் நாள்களில் வீட்டைத் தாண்டி வெளியே வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தினமும் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவர் அலுவலகத்துக்கு வந்துவிடும் விஜய்சேதுபதி கதைகள் எழுதுவது, நண்பர்களுடன் கதை விவாதங்கள் நடத்துவது என நார்மல் வாழ்க்கையில்தான் இருக்கிறார். ‘ஷூட்டிங் நடத்தலாம்னு அரசாங்கம் அனுமதி கொடுத்தா முதல் ஆளா ஸ்பாட்டுக்குப் போய்டுவேன்’ என்கிறார் மக்கள் செல்வன்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

மகள் ஆராதனாவுக்கு ஆன்லைன் க்ளாஸ் நடப்பதால் கூடவேயிருந்து ஹோம்வொர்க் சொல்லித்தருவது, வேலைகளில் உதவி செய்வது என சிவகார்த்திகேயனும் 24/7 வீட்டுக்குள்ளேயேதான். ‘தியா’, `லவ் மாக்டெயில்’, `அய்யப்பனும் கோஷியும்’, `டிரைவிங் லைசென்ஸ்’ என இவரது ரீசென்ட் ப்ளேலிஸ்ட் நீள்கிறது. படங்கள் தவிர வெப்சீரிஸ்களையும் மிஸ் பண்ணுவதில்லை. மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸும், அதில் இடம்பெறும் புரொஃபஸர் கதாபாத்திரமும் சிவாவின் ஃபேவரைட்டாம்.