Published:Updated:

Lockdown Life: தனுஷ், சிவகார்த்திகேயன் `உள்ளே'... விஜய்சேதுபதி `வெளியே'!

நட்சத்திரங்கள்
நட்சத்திரங்கள்

அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்தி வந்ததிலிருந்தே கோலிவுட்டுக்குள்ளும் கலக்கம். தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என விசாரித்தோம்.

தனுஷ்:

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருகிறார் தனுஷ். 9-வது மாடியில் வீடு. இந்த ஃப்ளாட்டின் கீழேயே ஜிம். வீடு மற்றும் ஜிம்மைத்தவிர ஃப்ளாட்டை விட்டு வெளியே வருவதில்லை தனுஷ்.

தனுஷ்!
தனுஷ்!

மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரஜினி வீட்டுக்கு ஒன்றிரண்டு முறை போய்வந்தவர் அதன்பிறகு எங்கேயும் வெளியே வருவதில்லை. வீட்டுக்குள் இருந்தபடியே அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் எழுதுவது, பாடல்கள் எழுதுவது எனத் தொடர்ந்து பிஸியாகவே இருக்கிறாராம் தனுஷ்.

விஜய் சேதுபதி:

இந்த லாக்டெளன் நாள்களில் வீட்டைத் தாண்டி வெளியே வரும் ஒரே நடிகர் விஜய் சேதுபதிதான். தினமும் விருகம்பாக்கத்தில் இருக்கும் அவர் அலுவலகத்துக்கு வந்துவிடும் விஜய்சேதுபதி கதைகள் எழுதுவது, நண்பர்களுடன் கதை விவாதங்கள் நடத்துவது என நார்மல் வாழ்க்கையில்தான் இருக்கிறார்.

விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி

'ஷூட்டிங் நடத்தலாம்னு அரசாங்கம் அனுமதி கொடுத்தா முதல் ஆளா ஸ்பாட்டுக்குப் போய்டுவேன்' என்கிறார் மக்கள் செல்வன்.

சிவகார்த்திகேயன்:

மகள் ஆராதனாவுக்கு ஆன்லைன் க்ளாஸ் நடப்பதால் கூடவேயிருந்து ஹோம்வொர்க் சொல்லித்தருவது, வேலைகளில் உதவி செய்வது என சிவகார்த்திகேயனும் 24/7 வீட்டுக்குள்ளேயேதான்.

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்

'தியா', 'லவ் மாக்டெயில்', 'அய்யப்பனும் கோஷியும்', 'டிரைவிங் லைசென்ஸ்' என இவரது ரீசென்ட் ப்ளேலிஸ்ட் நீள்கிறது. படங்கள் தவிர வெப்சீரிஸ்களையும் மிஸ் பண்ணுவதில்லை. மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸும், அதில் இடம்பெறும் புரொஃபஸர் கதாபாத்திரமும் சிவாவின் ஃபேவரைட்டாம்.

- பாலிவுட்டின் 'பிக் பி' அமிதாப் பச்சனுக்குக் கொரோனா, அடுத்து அபிஷேக் பச்சன், '50 கே.ஜி தாஜ்மகால்' என்று தமிழகம் பட்டம் தந்த ஐஸ்வர்யா ராய்க்கும் அவர் மகளுக்கும் கொரோனா என அடுத்தடுத்து அதிர்ச்சிச் செய்தி வந்ததிலிருந்தே கோலிவுட்டுக்குள்ளும் கலக்கம். தமிழ்சினிமாவின் உச்சநட்சத்திரங்கள் என்ன செய்கிறார்கள், எப்படியிருக்கிறார்கள் என விசாரித்தோம்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா - கார்த்தி மற்றும் விக்ரம் ஆகியோர் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக அறிய > க்ளிக் செய்க.. https://bit.ly/3j8Yzgr

சிறப்புச் சலுகை: விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ஆனந்த விகடன் தொடங்கி அவள் கிச்சன் வரை அனைத்து இதழ்களையும் 30 நாள்களுக்கு கட்டணமின்றி வாசிக்கலாம். குறிப்பாக, கடந்த 2006-ல் இருந்து வெளியான அனைத்து ப்ரைம் கன்டென்ட்டுகள், பொக்கிஷக் கட்டுரைகளிலும் வலம்வர முடியும். விகடன் ஆப் டவுன்லோடு லிங்க் இதோ https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு