Published:Updated:

3-வது சென்னை சுயாதீன திரைப்பட விழா... காணக்கிடைக்காத படங்கள்! எப்படி கலந்துகொள்வது? #IFFC2020

சென்னை சுயாதீன திரைப்பட விழா
சென்னை சுயாதீன திரைப்பட விழா

வணிக சினிமாக்களைத் தாண்டி, முழுக்க முழுக்க கலை நோக்கத்துடன் சுயாதீனமாக எடுக்கப்படும் படங்களைக் காண ஆர்வமாக இருக்கிறீர்களா? இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

36+ திரைப்படங்கள் | 20+ சிறப்பு அழைப்பாளர்கள் | 12+ நாடுகள் | 3 மாஸ்டர் கிளாஸ் | 25+ தமிழ்நாட்டு முதல் திரையிடல்கள் | 9 இந்திய முதல் திரையிடல்கள் | 2 முதன்முதல் திரையிடல்கள்

தமிழ் ஸ்டூடியோவின் முன்னெடுப்பாகத் தொடர்ந்து 3-வது வருடமாக நடக்கவிருக்கும் சென்னை சுயாதீன திரைப்பட விழாவில், இவ்வகை படங்கள் தாண்டி, ஆளுமைகளின் 'மாஸ்டர் கிளாஸ்' நிகழ்வுகளும் அரங்கேறவிருக்கின்றன. பிப்ரவரி 8, 9 தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) சென்னையில் நடைபெறும் இந்தத் திரைப்பட விழாவில் இலவசமாகக் கலந்துகொள்ள உங்களுக்கு ஓர் அற்புதமான வாய்ப்பு.

வேறெங்கும் காணக்கிடைக்காத படங்களை IFFC-ல் பார்க்கலாம். திரையாக்கம் மற்றும் திரைப்பட ரசனை தொடர்பாகக் குழு விவாதங்கள் மற்றும் திரையிடலுக்குப் பின்னர் படக்குழுவினருடன் கலந்துரையாடல்கள் போன்றவை நடைபெறும்.

நடைபெறும் நாள்கள்: பிப்ரவரி 8, 9 | சனி & ஞாயிறு

விழா நடைபெறும் இடம்: பிரசாத் லேப், சாலிகிராமம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள ஃபார்மில் உங்கள் பெயர், இ-மெயில் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் 'சுயாதீனப் படங்கள் - Independent Movies' குறித்த உங்களின் பார்வையை ஓர் அசத்தல் ஸ்லோகனாகவும் பதிவுசெய்யுங்கள். சிறந்த ஸ்லோகனைப் பதிவு செய்பவர்களுக்கு, இத்திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்கான டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களின் விவரம், SMS மூலம் தெரிவிக்கப்படும். அதைக் காண்பித்து டிக்கெட்டுகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்குச் சென்று பெற்றுக்கொள்ளலாம்.

பியூர் சினிமா புத்தக அங்காடி,

எண்: 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி

அடுத்த கட்டுரைக்கு