Published:Updated:

"படம் பார்த்துட்டு பொண்டாட்டி ஒரு வாரம் என்கூட பேசவே இல்ல!" - 'சுப்ரமணியபுரம்' முருகன்!

மதுர மக்கள்: சுப்ரமணியபுரம் முருகன்

"படம் வெளிவந்த டைம்ல நாம நடிச்ச சீன்லாம் படத்துல இருக்குமான்ற யோசனையிலயேதான் படம் பார்த்தேன். ஆனா, மனுசன் சசிகுமார் பிரிச்சுவிட்டாப்ள... என் வாழ்க்கைல விளக்கை ஏத்தி வச்சதே அவர்தான்!" - சுப்ரமணியபுரம் முருகன்

"படம் பார்த்துட்டு பொண்டாட்டி ஒரு வாரம் என்கூட பேசவே இல்ல!" - 'சுப்ரமணியபுரம்' முருகன்!

"படம் வெளிவந்த டைம்ல நாம நடிச்ச சீன்லாம் படத்துல இருக்குமான்ற யோசனையிலயேதான் படம் பார்த்தேன். ஆனா, மனுசன் சசிகுமார் பிரிச்சுவிட்டாப்ள... என் வாழ்க்கைல விளக்கை ஏத்தி வச்சதே அவர்தான்!" - சுப்ரமணியபுரம் முருகன்

Published:Updated:
மதுர மக்கள்: சுப்ரமணியபுரம் முருகன்
"படம் வந்து 13 வருஷமாச்சு... ஆனாலும் இன்னமும் ரோட்டுல எங்க பார்த்தாலும் என்னய சீக்கிரமா அடையாளம் கண்டுபிடிச்சுட்டு, 'ஏய் மொக்கச்சாமி என்னாயா இன்னும் சுத்தபத்தமாதானே இருக்க'ன்னு கேக்குறாங்க. எல்லாத்துக்குமே டைரக்டர் சசிகுமார்தான் காரணம்" - இன்னமும் முதல் படத்துக்கு கிடைத்த வரவேற்பிலிருந்து மீளாமல் வெள்ளந்தியாக சிரிக்கிறார் இலைக்கடை முருகன். 'சுப்ரமணியபுரம்' படத்தில் மொக்கச்சாமியாக நடித்தவர்தான் முருகன்.

மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து இலைக்கடை முருகன் எனக் கேட்டாலோ அல்லது '' 'சுப்ரமணியபுரம்' படத்துல நடிச்சுருப்பாரே அவரு கடை எது'' எனக்கேட்டாலோ, கைப்பிடித்து கடைக்குக் கூட்டிப்போகிறார்கள் மார்க்கெட்வாசிகள். அவரிடம் பேசினோம்.

சுப்ரமணியபுரம் முருகன்
சுப்ரமணியபுரம் முருகன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எப்படிக் கிடைச்சது 'சுப்ரமணியபுரம்' வாய்ப்பு?

"அதை ஏன் தம்பி கேட்குறீங்க. இன்னைக்கு நினைச்சுப்பார்த்தா கூட ஒரு கனவு மாதிரி இருக்கு. டைரக்டர் சசிகுமாரும் நடிகர் ஜெய்யும் மதுரைல பழைய சென்ட்ரல் மார்க்கெட் ஏரியாவுக்கு லொகேஷன் பார்க்க வந்திருந்தாங்க. அவுங்க கேமரா எல்லாம் எடுத்து டெஸ்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. என்கூட இருந்த ஆளு சும்மா இல்லாம இவரை எல்லாம் நடிக்க வைக்கலாம்லனு சொல்ல டைரக்டர் சசிகுமார் நடிக்கிறீங்களான்னு கேட்டாரு. அதெல்லாம் எனக்கு தெரியாதேன்னு சொல்ல, நடிப்பு ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல... நீங்க கிளம்பி வாங்க, நான் பார்த்துக்குறேன்னு சசிகுமார் தம்பி சொல்லிட்டாரு!"

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

எப்படி இருந்துச்சு ஷூட்டிங் அனுபவம்?

"திண்டுக்கல்லதான் ஷூட்டிங் நடந்துச்சு. ஒரு டயலாக் ஒரே லென்த்துல பேசணும். பேசணும், பேசணும், பேசிக்கிட்டே இருக்கேன். டைரக்டருக்கு திருப்தியே ஆகல. நைட் பத்து மணி வரைக்கும் போயிருச்சு. அண்ணே ரிலாக்ஸாகுங்க. இஞ்சி டீ தர சொல்லட்டான்னு ஒரு குழந்தை மாதிரி என்னய பார்த்துக்கிட்டாரு. அந்த டயலாக் முடிச்சதுமே மனுஷன் வானத்துக்கும் பூமிக்கும் கிடந்து குதிச்சாரு. நம்மள நடிக்கவைக்க ஒரு மனுஷனை இப்படி கஷ்டப்படுத்திருக்கோமேனு இப்ப நினைச்சாலும் வருத்தமாதான் இருக்கும்."

சுப்ரமணியபுரம் படத்தில்...
சுப்ரமணியபுரம் படத்தில்...

நீங்க நடிச்ச காட்சியை படத்துல பார்த்தப்போ எப்படி இருந்துச்சு?!

"படம் வெளிவந்த டைம்ல நாம நடிச்ச சீன்லாம் படத்துல இருக்குமான்ற யோசனையிலயேதான் படம் பார்த்தேன். ஆனா மனுசன் சசிகுமார் பிரிச்சுவிட்டாப்ள! என் வாழ்க்கைல விளக்க ஏத்தி வச்சதே அவர்தான். இன்னமுமே டவுனுக்குள்ள யாராச்சும் புதுசா பார்த்தா, 'ஏய் அந்த ஆளு தாண்டி சுப்ரமணியபுரத்துல தொடுப்பு வீட்டுக்கு போயிட்டு சாக்கடைல விழுந்து எந்திருச்சு வருவாருல்ல'ன்னு கையை காட்டி பேசுவாங்க. ஆரம்பத்துல இப்படி யாராச்சும் சொன்னா கோபம் வந்துரும். அப்பறம் நம்ம நடிப்பதான் அப்படிப் பேசுறாங்கன்னு ஜாலியா எடுத்துக்கிட்டேன். கல்ல கூட நடிக்கவச்சுருவாப்ள டைரக்டர்னு மனசுக்குள்ள நினைச்சுப்பேன். என்ன ஒரு வருத்தம்னா படம் பார்த்துட்டு என் பொண்டாட்டிதான் ஒரு வாரம் என் கூட பேசவே இல்ல. எல்லாம் நடிப்புதாம்மானு சமாதானம் பண்றதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு."

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போ என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

"இப்பவும் இதே மாட்டுத்தாவணில இலைக்கடைதான் பார்த்துட்டு இருக்கேன். 'சுப்ரமணியபுரம்' படத்துக்கு அப்புறம் சில படங்கள் நடிச்சேன். அப்பறம் போதும்னு விட்டுட்டேன். திரும்பவும் சசிகுமார் கூப்பிட்டார்னா எல்லாத்தையும் விட்டுட்டு கெளம்பி போகத் தயாரா இருக்கேன்!"

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism