Published:Updated:

வீட்டுச் சிறைக்குள் வேறு வேறு மனிதர்கள்! |உலக சினிமா #MyVikatan

தெரியாத்தனமாக அந்த வீட்டுக்கு வருகிறவர்கள் அத்தனை பேருமே கைதிகள்தாம்!

வீட்டுச் சிறைக்குள் வேறு வேறு மனிதர்கள்! |உலக சினிமா #MyVikatan

தெரியாத்தனமாக அந்த வீட்டுக்கு வருகிறவர்கள் அத்தனை பேருமே கைதிகள்தாம்!

Published:Updated:

உறவினர் வீட்டுக்குச் செல்கிறீர்கள்... கதவைத் திறப்பது ஒரு புதிய நபர். உள்ளே நுழைந்தால் இன்னும் ஒரு புதியவர். என்ன இது என்று யோசிப்பதற்குள் கதவு அடைக்கப்படுகிறது.

வீட்டுப் பணிப்பெண் உள்ளே நுழைகிறார். புதிய நபர்களைப் பார்த்து அவளை அறிமுகப்படுத்தும்போதே கதவு பூட்டப்படுகிறது.

இப்படி அந்த வீட்டுக்குள் அறிந்தோ, அறியாமலோ யார் வந்தாலும் கதவு திறந்து உள்ளிழுத்துக் கொள்கிறது. திரும்பிச் செல்வது என்பது இனி உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எப்படி இருக்கும்?

அப்படித்தான் இருந்தது அந்த வீட்டில் இருந்தவர்களுக்கும். அது ஒரு சாதாரண குடும்பம்தான். அவர்கள்மீது என்னவோ ஒரு சந்தேகம் ரகசிய போலீசாருக்கு, ராஜ துரோகம் இழைப்பதாக. சந்தேகப்படும் நபரை கைது செய்வதற்குப் பதிலாக அந்தக் குடும்பத்தினரையே வீட்டுச் சிறையில் வைத்து காவல் காக்கிறார்கள். தெரியாத்தனமாக அந்த வீட்டுக்கு வருகிறவர்கள் அத்தனை பேருமே கைதிகள்தாம்!

சட்டென ஒரு நாளில் சம்பவங்கள் முடிந்துவிடவில்லை. நாள்கள் நகர்கின்றன. வீட்டில் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள் எனக் கலவையான கூட்டம். உண்கிறார்கள்; உறங்குகிறார்கள்; அன்பாகிறார்கள்; சண்டையிடுகிறார்கள்.பூட்டி வைத்தால் என்னென்ன ஆகுமோ அங்கும் அத்தனையும் நடக்கின்றன. மனக்குழப்பங்கள் அதிகமாகின்றன. பொய்களும் ரகசியங்களும் அரங்கேறுகின்றன; அம்பலமும் ஆகின்றன.

கடைசியில் என்னதான் ஆயிற்று? Captives (Foglyok) எனும் ஹங்கேரி திரைப்படத்துக்குள் நுழைந்தால், ஒருவேளை நாமும் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்படலாம்!

1951-ம் ஆண்டு ஹங்கேரியிலுள்ள புடாபெஸ்ட் நகரத்தில் நகரும் கதை இது. நம்பவே முடியாத உண்மைக் கதை! பத்து விருதுகளை வென்ற படமும்கூட. கோவா, சென்னை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டபோது சிறப்பான வரவேற்பைப் பெற்றது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
Kristóf Deák
Kristóf Deák

கேப்டிவ்ஸ் படத்தின் இயக்குநர் Kristóf Deák. வயது 38. 2017-ம் ஆண்டு இவர் இயக்கிய Sing (Mindenki) சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்றது. கேப்டிவ்ஸ் படத்துக்கு முன் இவர் இயக்கியவை அனைத்தும் குறும்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களே.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism