Published:Updated:

``நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய்

ஜெய்
ஜெய்

சினிமா விழாக்களில் கலந்துகிட்டு மேடைகளில் பேசுறது ஒரு கலை. அது எனக்குத் தெரியாது, வராது. எனக்கு முன்னாடி உள்ள சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலபேர் 'நாம நடிச்ச படத்தைப்பத்தி நாமே பேசக்கூடாது; மத்தவங்கதான் பேசணும்'னு சொல்லிருக்காங்க.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தான் நடிக்கும் படங்களின் புரமோஷனுக்கே வருவதில்லை, அஞ்சலியுடன் காதல் எனத் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் ஜெய்யுடன் ஒரு மனம் திறந்த உரையாடல்...

" 'சுப்ரமணியபுரம்' ஹிட். இருந்தும் ஷோலோ ஹீரோவாக உங்களால் ஜெயிக்க முடியவில்லையே? உங்களுக்குப் பின்னால் வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி எல்லாம் முன்னணி நடிகர்களாகி விட்டனரே?"

"நீங்கள் சொல்வது உண்மைதான் 'சுப்ரமணியபுரம்' படத்துக்குப் பிறகு மல்டி ஹீரோ சப்ஜெக்ட்டான 'கோவா' படத்தில் நடிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஏனென்றால் எனக்கு 'சென்னை 600028' படத்தில் முக்கியத்துவம் உள்ள கேரக்டர்ல நடிக்க வெச்சவர் வெங்கட்பிரபு. சிவகார்த்திகேயன், விஜயசேதுபதி ரெண்டு பேருக்கும் அமைந்த கதை, கிடைத்த டீம் எல்லாம் அவங்களை வேற லெவலுக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துடுச்சு. அதுக்காக எனக்குக் கிடைச்ச டீம் சரியில்லைன்னு நினைச் சுடாதீங்க. எனக்கு என்னமோ டைம் சரியில் லைன்னு நினைக்கிறேன். எல்லாப் படங்களையுமே நல்லா ஓடும்னு நம்பித்தான் நடிக்கிறேன். ஏதோ ஒரு இடத்துல தப்பு நடத்துட்டா அது மொத்தமாக அந்தப் படத்தையே பாதிக்குது. இனிமே அப்படி நடக்காமப் பார்த்துக்கணும்!" விரிவான பேட்டிக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2Z7WzM2

``நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய்

"நீங்கள் இஸ்லாம் மதத்துக்கு மாறிவிட்டதாகச் செய்திகள் வெளியானதே?"

"உண்மைதான். ஏழாண்டுகளாக நான் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன். எனக்கு இஸ்லாம்மீது இனம்புரியாத நம்பிக்கை ஏற்பட்டுச்சு. 'சாமியே கும்பிடாத பிள்ளை, ஏதோ ஒரு சாமியையாவது கும்பிடறானே'ன்னு வீட்டில சந்தோஷப்பட்டாங்க. மதம் மாறினாலும் இன்னும் பேர் மாத்தலை. அஜீஸ் ஜெய்னு பேரை மாத்திக்கலாமான்னு யோசிச்சிட்டிருக்கேன்!"

"நீங்கள் நடிக்கும் படங்களின் புரமோஷன்களில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பது ஏன்?"

"முதலில் ஒரு விஷயம். சினிமா விழாக்களில் கலந்துகிட்டு மேடைகளில் பேசுறது ஒரு கலை. அது எனக்குத் தெரியாது, வராது. எனக்கு முன்னாடி உள்ள சீனியர் ஆர்ட்டிஸ்டுகள் பலபேர் 'நாம நடிச்ச படத்தைப்பத்தி நாமே பேசக்கூடாது; மத்தவங்கதான் பேசணும்'னு சொல்லிருக்காங்க. அதைத்தான் நான் ஃபாலோ பண்ணணும்னு நினைக்கிறேன். படத்தோட புரமோஷனுக்கு டிரெய்லர் இருக்கு, போஸ்டர் இருக்கு. இது போதாதா? 'நான் இந்தப் படத்துல நல்லா நடிச்சிருக்கேன்'னு சுயதம்பட்டம் அடிக்கறது பிடிக்காது. நல்லா இருக்குன்னு நான் பப்ளிசிட்டி பண்ணிட்டு அப்புறமா படம் நல்லாயில்லைன்னா மக்கள் என்னைத் தப்பா நினைக்க மாட்டாங்களா?"

- ஆனந்த விகடன் இதழுக்கு ஜெய் அளித்த பேட்டியை முழுமையாக வாசிக்க > "அஞ்சலியுடன் காதலும் கிடையாது; கல்யாணமும் கிடையாது!" - ஜெய் சிறப்புப் பேட்டி https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actor-jai

"பிரிந்தபிறகும் பிரியத்துடன் இருங்கள்!"

'அதோ அந்தப் பறவைபோல' படத்துக்காகக் காடு, மலை சுற்றி வந்திருந்த அமலா பால் உடன் ஒரு பேட்டி...

"விவாகரத்துக்குப் பிறகுதான் அமலாபால் நிறைய துணிச்சலான படங்கள் நடிக்கிறாரே?"

``நான் ஏழு ஆண்டுகளாக இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுகிறேன்!" - மனம் திறக்கும் ஜெய்

"அப்படிச் சொல்ல முடியாது. விவாகரத்துல இருந்து நிறைய விஷயங்களும் கத்துக்க முடிஞ்சது. குழந்தைகள் இருக்குறவங்க தயவுசெஞ்சு விவாகரத்து பண்ணாதீங்கன்னுதான் சொல்லுவேன். ஒருவேளை சேர்ந்து வாழ முடியலைன்னாலும் பிரியும்போது பரஸ்பர சம்மதத்துடன், புரிதலுடன், அதே மரியாதை, அன்புடன் பிரிய முடிவெடுங்க. திருமண வாழ்க்கையில் நிறைய காதலுடன் வாழ்ந்திருப்பாங்க. பிரியும்போது நேரெதிரா எதிரியா மாறணும்னு அவசியமில்லை. பிரிவுக்குப் பிறகும் நட்பும் மரியாதையும் தொடரலாம்; தொடரணும்!"

- ஆனந்த விகடன் இதழில் முழுமையான பேட்டியை வாசிக்க > "பிரிந்தபிறகும் பிரியத்துடன் இருங்கள்!" - அமலா பால் சிறப்புப் பேட்டி https://cinema.vikatan.com/tamil-cinema/interview-with-actress-amala-paul

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ஆட்டோ-ரினீவல் ஆப்ஷனுடன் கூடிய 'மைக்ரோ - மாஸ்' மாதச் சந்தா பேக் ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய > http://bit.ly/2X6Z1Bo |

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு