Published:Updated:

`கஜினி வெற்றி அடைந்ததில் எனக்குப் பெருமை!’ - ஏ.ஆர்.முருகதாஸ் சர்ச்சைக்கு நோலனின் பதில்

கிறிஸ்டோபர் நோலனின் படமான `மெமென்டோ'-வில் நாயகனுக்கு 'short term memory loss' என்ற ஞாபக மறதி பிரச்னை இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்துதான் ஏ.ஆர்.முருகதாஸ், 2005-ம் ஆண்டு தமிழில் சூர்யாவை வைத்து கஜினி படத்தை எடுத்தார் என்று கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹாலிவுட்டில் வித்தியாசமான படங்கள் எடுப்பதில் பெயர்போனவர் கிறிஸ்டோபர் நோலன். இயற்பியல் விதிகளில் ஆரம்பித்து விண்வெளியில் மறைந்திருக்கும் கருந்துளை வரை பல சிக்கலான அறிவியல் சார்ந்த விஷயங்களை திரையில் மாயாஜால சினிமாக்களாக மாற்றுவதுதான் நோலனின் சிறப்பம்சம். இவரின் இரண்டாவது படமான `மெமென்டோ'-வில் நாயகனுக்கு 'short term memory loss' என்ற ஞாபக மறதி பிரச்னை இருக்கும். இந்தப் படத்தைப் பார்த்துதான் ஏ.ஆர்.முருகதாஸ் 2005-ம் ஆண்டு தமிழில் சூர்யாவை வைத்து கஜினி படத்தை எடுத்தார் என்று கூறப்படுகிறது. பிறகு, அதே படத்தை இந்தியில் அமீர்கானை வைத்து ரீமேக் செய்தார். இரண்டு மொழிகளிலும் இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

கஜினி
கஜினி

நோலனின் அடுத்த படமான 'டெனெட்' இல் சில காட்சிகள் மும்பையில் படமாக்கப்பட்டது. அப்போது, நோலனிடம் கஜினி படத்தைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நோலன், ``நானும் அந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டேன். கஜினி மக்களுக்குப் பிடித்த படமாகவும் வணிக ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் இருப்பதில் எனக்குப் பெருமை. நானும் கூடிய விரைவில் அந்தப் படத்தை பார்க்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து இந்திய திரைப்படங்கள் குறித்து பேசிய அவர், "பொதுவாக விமானங்களில் பயணிக்கும்போது இந்தியப் படங்களைப் பார்ப்பேன். நான் இந்தியப் படங்களை மிகவும் ரசிக்கிறேன். சமீபத்தில் `பதேர் பாஞ்சாலி’ என்ற திரைப்படம் பார்த்தேன். நான் பார்த்த மிகச் சிறந்த படங்களில் பதேர் பாஞ்சாலியும் ஒன்று. 1955-ம் ஆண்டு வெளிவந்த குறிப்பிடத்தக்க படைப்பு இது. இன்னும் பல இந்திய சினிமாக்களைப் பார்க்கும் ஆர்வம் எனக்கு உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு