Published:Updated:

"ஶ்ரீகாந்த் பத்தி வர்ற கிசுகிசுவை நான் நம்ப மாட்டேன்!'' - வந்தனா ஶ்ரீகாந்த்

Srikanth
Srikanth

சினிமாவில் ஶ்ரீ அடிவாங்குனா என் பொண்ணு வீட்டில் உட்கார்ந்து அழுதுட்டு இருப்பா. என் பையன்தான் தங்கச்சியைச் சமாதானம் செய்வான்.

ரோஜாக் கூட்டம் படத்தில் ஸ்மார்ட் ஹீரோவாகவும், நண்பன் படத்தில் காமெடி ரோலிலும் கைத்தட்டல்கள் அள்ளியவர் நடிகர் ஶ்ரீகாந்த். அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர் வந்தனா. வந்தனாவின் இன்ஸ்டாகிராம் பக்கம் ரொம்ப ரெஃப்ரெஷ்ஷாக இருக்கும். இரண்டு குழந்தைகளின் அம்மாவா இவர் என்று தோன்ற வைப்பவர். குழந்தை வளர்ப்பு, டயட், ஃபேஷன் என எல்லாவற்றிலும் அப்டேட்டாக இருக்கும் வந்தனா ஶ்ரீகாந்துடன் ஒரு பர்ஷனல் சாட்!

``வாழ்க்கையில் திருமண ஆல்பம் எவ்வளவு ஸ்பெஷலோ அது மாதிரி ஶ்ரீ கூட நான் இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு ஸ்பெஷலானது. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்க்கக் கூடிய நிறைய அழகான நிமிஷங்கள் எங்களோட வாழ்கையில் கொட்டிக் கிடக்கு. உண்மையைச் சொல்லணும்னா நானும் ஶ்ரீகாந்தும் நல்ல ஃப்ரெண்ட்ஸ். வாழ்க்கையில் எல்லா நிமிஷத்திலும் ரெண்டு பேரும் சேர்ந்து பயணிக்கிறோம். எங்களுக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருந்தது இல்லை. சாப்பாடு, டிரஸ்ஸிங், லைஃப் ஸ்டைல்னு ரெண்டு பேருக்கும் பொதுவான தேடல்கள் நிறைய இருக்கு.

Srikanth & Vandana
Srikanth & Vandana

பர்சனல் லைஃப் தாண்டி ஒரு மனைவியாக ஶ்ரீயின் டயட், டிரஸ்ஸிங், கரியரிலும் என்னோட பங்கு இருக்கு. எல்லா விஷயத்திலும் என்னோட கருத்தைச் சொல்றதுக்கு முழு உரிமை கொடுத்திருக்கிறார் ஶ்ரீ. எந்த முக்கியமான முடிவு எடுக்கிறதுக்கு முன்பும் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து டிஸ்கஸ் பண்ணிதான் எடுப்போம். அதனால் தேவையில்லாத சண்டைகள் எங்களுக்குள்ள வந்ததில்ல. இன்னொரு சீக்ரெட் சொல்லட்டுமா..."என்றவர் சிரித்துக்கொண்டே ஶ்ரீ பற்றி வரும் எந்தக் கிசுகிசுவையும் நான் நம்ப மாட்டேன். ஏன்னா ஐ பிலீவ் மை மேன் " என்கிறவரின் குரலில் அவ்வளவு கம்பீரம்.

``எங்களோட காதல் இன்னும் இன்னும் அதிகரிச்சுட்டே இருக்குதுனா அதுக்கு எங்க குழந்தைங்களும் ஒரு காரணம். பையன் ஆஹில் ஆறாம் வகுப்பு படிக்கிறார். பொண்ணு அஹானா மூன்றாம் வகுப்பு படிக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் அவங்க அப்பாதான் உலகம். பையனுக்கு ஸ்போர்ட்ஸில் பயங்கர கிரேஸ். பரிசுகளால் வீட்டை நிறைச்சுருக்கார்.

ஆஹில் - அஹானா
ஆஹில் - அஹானா

பொண்ணு கரத்தே மற்றும் டான்ஸ் கத்துக்கிறாங்க. ரெண்டு பேருக்கும் சினிமானா ரொம்ப இஷ்டம். அவங்க அப்பாவோட படம் ரீலிஸ் ஆகுதுனா ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்துருவாங்க. அப்பா சினிமாவில் இருப்பதால் பசங்களும் சினிமாவுக்கு வரணும்னு எந்த நிர்பந்தத்தையும் அவங்க மேல நான் திணிக்கலை. அவங்களோட கரியரை அவங்க தேர்வு செய்ய முழுச் சுதந்திரம் கொடுத்திருக்கோம்.

என் பையனுக்கு சினிமானா என்னனு ஓரளவுக்கு விவரம் தெரியும். ஆனா, பொண்ணுக்குத் தெரியாது. சினிமாவில் ஶ்ரீ அடிவாங்குனா வீட்டில் உட்கார்ந்து அழுதுட்டு இருப்பா. என் பையன்தான் தங்கச்சியைச் சமாதானம் செய்வான். எங்க குழந்தைகளுக்கு அவங்க ஒரு செலிபிரெட்டியோட குழந்தை என்கிற எண்ணம் இல்லாமல் வளர்க்க முயல்றோம்.

அவங்களுக்கான அடையாளத்தை அவங்களே உருவாக்கணும் என்பதுதான் ஶ்ரீயோட ஆசை. அதனால் அவங்க செய்யும் சின்னச் சின்ன விஷயத்தையும் பாராட்டுவோம். எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குழந்தைகளுக்குச் செலவிடும் நேரத்தில் எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்கிட்டது கிடையாது.

ஐஸ்வர்யா தனுஷ், ப்ரீத்தா ஹரி, ஆர்யா, ஷ்யாம்னு எனக்கும் ஶ்ரீக்கும் பொதுவான ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்காங்க. அவங்க கூட அடிக்கடி அவுட்டிங் போவோம். அப்போதெல்லாம் பசங்களையும் கூட்டிட்டுதான் போவேன். ஒரு செலிபிரிட்டியோட மனைவினு சொல்றதைவிட, என் பசங்களுக்கு அம்மானு சொல்லும்போது இன்னும் ஹேப்பியா இருக்கு.

aishwarya Dhanush, Preetha Hari
aishwarya Dhanush, Preetha Hari

என் பசங்களுக்கான சின்னச் சின்ன விஷயங்களைக் கூட பார்த்துப் பார்த்துச் செய்வேன். குழந்தைகளுக்குச் சாப்பாடு ரெடி பண்றதிலிருந்து, ஹோம் வொர்க் சொல்லிக் கொடுக்கிறது வரை குழந்தைகள் சார்ந்த விஷயங்களில் என்னைத் தவிர யாரையும் செய்ய அனுமதிச்சது கிடையாது. என் பசங்களோட ஸ்கூலில் ``பேரன்ட்ஸ் டீச்சர்ஸ் அசோசியேஷன்"க்குத் தலைவர் நான். அதனால் குழந்தைகள் சார்ந்த எல்லா விஷயத்திலும் எப்போதும் அப்டேட்டாகவே இருப்பேன்.

நான் பெஸ்ட் மாம்னு சந்தோஷப்பட்டா... குழந்தைகள் விஷயத்தில் ஶ்ரீ எனக்கு டஃப் கொடுப்பார். அவங்களுடைய ஸ்கூல் ஃபங்ஷனை அவர் இதுவரைக்கும் தவறவிட்டதே இல்லை. முதல் வரிசையில் உட்கார்ந்து ஒரு அப்பாவா குழந்தைகள் பர்ஃபாமென்ஸை ரசிப்பார். குழந்தைகள் பரிசு வாங்கிட்டா போதும், அவங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து அவங்க வெற்றியைக் கொண்டாடித் தீர்த்துருவார். எங்களோட பசங்களுக்கு அவங்க அப்பாதான் பெஸ்ட் ஃப்ரெண்ட்".என்றவரிடம் டயட் மற்றும் அவருடைய ஃபேஷன் பற்றிக்கேட்டோம்.

என்னுடைய ரெண்டு குழந்தைகளுமே சிசேரியன் மூலமாதான் பிறந்தாங்க. ஒவ்வொரு முறை கருவுற்ற போதும் 25 கிலோ வெயிட் அதிகரிச்சேன். கருவுற்று இருக்கும் சமயத்தில் நம்ளோட அழகை மெயின்டெயின் பண்றதைவிட குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம். அதனால் எந்த டயட்டும் பின்பற்றாமல் இருந்தேன். ஆனால், குழந்தை பெற்ற ஒரு வருஷத்திற்குப் பிறகு தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சி செய்து வெயிட்டைக் குறைச்சேன்.

Vandan
Vandan

எவ்வளவு வேலை இருந்தாலும் மாலை நேர நடைப்பயிற்சி, சரும பராமரிப்பு சார்ந்த விஷயங்களைத் தவறவிட்டதே இல்லை. என்னோட சின்ன வயசிலிருந்தே எப்போதும் ஃபேஷனில் அப்டேட்டாகவே இருப்பேன். மூன்று மாசத்துக்கு ஒரு முறை துபாய் அல்லது அமெரிக்காவில் ஷாப்பிங் பண்ணுவேன். எனக்கு மட்டுமல்ல ஶ்ரீக்கும் கூட நான்தான் டிரஸ் செலெக்ட் பண்ணுவேன்".என்றவரிடம் ஃபியூச்சர் பிளான் பற்றிக் கேட்டோம்.

இப்போதைக்கு குழந்தைகளை அவங்க இயல்பு மாறாமல் குழந்தைகளாக வளர்க்கணும் என்பதில்தான் முழுக் கவனமும் இருக்கு. குழந்தைகள் வளர்ந்த பிறகு பிசினஸ் ஆரம்பிக்கிற ஐடியா வெச்சுருக்கேன்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு