Published:Updated:

"மன்னிப்பு கேட்கிறதுக்கு நான் தயங்கமாட்டேன்!" - விஜய்சேதுபதி தரும் உறுதி

vijay sethupathi
vijay sethupathi

"என் மேல அன்பு வைக்கிறவங்க யாரையும் நான் இழக்க மாட்டேன். அப்படி இழக்கிற மாதிரியான ஒரு காட்சிகூட இந்தப் படத்துல இருக்காது. என் மேல அன்பு செலுத்தறவங்களைக் காயப்படுத்துற வேலையை நான் எப்படிச் செய்வேன்?

நீட் பிரச்னை தொடங்கி காஷ்மீர்ப் பிரச்னை வரை தன் கருத்துகளையும் தயங்காமல் பதிவு செய்ய விஜய்சேதுபதி தவறுவதில்லை. அவரை 'சங்கத் தமிழன்' படப்பிடிப்புத் தளத்தில் சந்தித்தேன். https://bit.ly/2ZktRFU

"எல்லா இடங்களிலும் உங்களுடைய வாழ்க்கை அனுபவத்தைப் பகிர்ந்துக்கிறதுக்கான காரணம் என்ன?"

"வாழ்க்கையில எல்லாமே அனுபவம்தானே பிரதர். நான் ஏன் திரும்பத் திரும்பச் சொல்றேன்னா, எனக்கு சமூகத்துல இருந்துதான் இந்த அனுபவம் கிடைச்சது. அதனால, அடுத்த தலைமுறைக்கு இதைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இருக்கு. சொல்லப்போனா மரணம்கூட ஒரு அனுபவம்தான். அது கண்டிப்பா ஒரு நாள் புரியும். நானும் அதுக்குத்தான் வெயிட் பண்றேன். வாழ்க்கையில பணம் சம்பாதிக்கிறது, அதை இழந்து நிற்பது, உணர்ந்து நிற்பது, அதிலிருந்து மீண்டு எழுந்து வருவதுன்னு எல்லாமே அனுபவம்தான். இது அறிவுரையா இருந்தா மன்னிச்சிடுங்க."

vijay sethupathi
vijay sethupathi

"முத்தையா முரளிதரன் பயோபிக் எப்படித் தொடங்குச்சு?"

"சின்ன வயசுல இருந்து நான் கிரிக்கெட்டே பார்த்தது இல்லை. முரளி சாரைப் பார்க்கும்போது இதை நான் அவர்கிட்ட சொன்னேன். என் ஃபிரெண்ட்ஸ் பந்து பொறுக்கத்தான் என்னை விளையாடவே கூட்டிப்போவாங்க. கிரிக்கெட்டுடைய அடிப்படைகூட எனக்கு முழுசா தெரியாது. கற்பனையான ஒரு கதைன்னா அதுக்கான கதாபாத்திரத்தை ஓரளவு ஜஸ்டிஃபை பண்ணிடலாம். ஆனா, இது ஏற்கெனவே இருக்கிற ஒருத்தரைப் பத்தின கதை. இதை நான் எப்படிப் பண்ணப்போறேன்னு தெரியலை. படம் முழுக்கவே கிரிக்கெட்டைப் பத்தினது மட்டுமல்ல, அவருடைய வாழ்க்கையும் முக்கியமான அங்கமா இருக்கும்."

"இந்தப் படம் தொடர்பாக ஈழத்தமிழர்கள் உங்க மேல சில விமர்சனங்களும், நடிக்கக் கூடாதுங்கிற கோரிக்கையையும் முன் வைத்தார்களே?"

"என் மேல அன்பு வைக்கிறவங்க யாரையும் நான் இழக்க மாட்டேன். அப்படி இழக்கிற மாதிரியான ஒரு காட்சிகூட இந்தப் படத்துல இருக்காது. என் மேல அன்பு செலுத்தறவங்களைக் காயப்படுத்துற வேலையை நான் எப்படிச் செய்வேன்? நான் அவ்வளவு சுயநலமான ஆள் கிடையாது. படம் வந்தா இது மக்களுக்குப் புரியும்னு நம்புறேன். இதையும் மீறி, காயப்படுத்துற மாதிரி நான் நடந்துகிட்டா, சின்ன குழந்தையா இருந்தாகூட மன்னிப்பு கேட்கிறதுக்கு நான் தயங்க மாட்டேன்."

"மற்ற மொழிப் படங்களில் நடிக்கிறீங்க. இங்கேயும் அங்கேயும் என்ன வித்தியாசம்?"

"மொழிதான் வித்தியாசம். தவிர, எல்லாமே கலைதான். எல்லா மொழிகளிலேயும் மனிதனைச் சுற்றி உறவுகள், அரசியல், ஜாதி, மதம், வன்மம்னு நல்லது கெட்டது எல்லாமே இருக்கும். இது அந்தந்தப் பகுதி மக்களுக்கு வேறுபடும், அவ்வளவுதான். ஆனா, கலையைப் பொறுத்தவரை இனம், மொழி மதம்னு எதுவும் இல்லை."

vijay sethupathi
vijay sethupathi

"சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் கலவரங்களை எப்படிப் பார்க்கிறீங்க?"

"தேர்தல் சமயத்துலகூட ஒரு சாதிக்கலவரம் நடந்தது. அதுல யாராவது ஒருத்தர் பாதிக்கப்படுறாங்க. ஆனா, அந்த யாரோ ஒருத்தர் நம்மைப்போல குடிமக்கள்தானே. இது நாளைக்கு நம்ம வீட்டுலேயும் நடக்கலாம். எத்தனை முறை சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்களைப் பிரிக்க நினைச்சாலும், அவங்களை ஒண்ணுசேர்க்கறதுக்கான முயற்சியை என்னால முடிஞ்ச வரைக்கும் பண்ணிட்டேதான் இருப்பேன். சாதி, மதத்தைக் கடந்து மனிதம் பேசணும்னுதான் என்னுடைய ரசிகர்களுக்கும் மன்றத்துக்கும் சொல்றேன்.''

- ஆஸ்திரேலிய அனுபவம், 'சங்கத் தமிழன்' பின்புலம், காஷ்மீர் விவகாரத்தில் விவாதத்துக்குள்ளான கருத்துகள், பர்சனல் என பல கேள்விகளுக்கும் விஜய்சேதுபதி அளித்துள்ள முழுமையான பேட்டியை ஆனந்த விகடன் இதழில் வாசிக்க > "ரஜினிக்கு ஒரு கருத்து இருக்கும்போது எனக்கு ஒரு கருத்து இருக்கக்கூடாதா?" - விஜய்சேதுபதி https://cinema.vikatan.com/tamil-cinema/exclusive-interview-with-vijay-sethupathi

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு