Election bannerElection banner
Published:Updated:

அசுர உழைப்பு, இசை மயக்கம், அரிதான ஷேரிங்ஸ்... 80's இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals

இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals
இளையராஜாவின் இன்ஸ்பிரேஷனல் கதை #VikatanOriginals

பண்ணைபுரத்திலிருந்து கிளம்பிச் சென்று, பாவலர் பிரசாரங்களில் தொடர்ந்து பாடி, இசைமீதிருக்கும் காதலால் தேடித்தேடி சங்கீதம் கற்று, இறுதியில் யதேச்சையாக இசையமைப்பாளரான அந்த இளைய `இளையராஜா'வின் கதை பலரும் அறியாதது. அந்தக் கதையை தானே விவரிக்கிறார் இளையராஜா.

1000 படங்களைத் தாண்டியும், இத்தனை வருடங்கள் கடந்தும் இன்னும் அப்படியே தொடர்கிறது தமிழர்களுக்கும், இளையராஜாவிற்குமான அந்த `இசை பந்தம்'. `அன்னக்கிளி'யில் தொடங்கிய இந்த உறவின் பிணைப்பு, கடந்த வாரம் வெளியான `சைக்கோ' வரைக்கும் இன்னும் அப்படியே இருக்கிறது. இவரின் இசைக்காக ஒவ்வொரு முறையும் சிக்கெடுத்து, செவிகளில் மாட்டும் அந்த இயர்போன், இசைக்கும் இதயத்திற்குமான தொப்புள்கொடி; உள்ளே ஊடுருவும் அந்த இசை, பலருக்கு ஆறுதல் சொல்லும் தாயின்மடி. இசையோ, ஆன்மிகமோ... இன்று இரண்டிலும் இவர் ஞானி. இப்படி இன்றைக்கு இருக்கும் `இசைஞானி' இளையராஜா அனைவருக்கும் பரிச்சயம்.

ஆனால்... பண்ணைபுரத்திலிருந்து கிளம்பிச் சென்று, பாவலர் பிரசாரங்களில் தொடர்ந்து பாடி, இசை மீதிருக்கும் காதலால் தேடித்தேடி சங்கீதம் கற்று, இறுதியில் யதேச்சையாக இசையமைப்பாளரான அந்த இளைய `இளையராஜா'வின் கதை பலரும் அறியாதது.

"ஒரு சின்னஞ்சிறு கிராமத்திலிருந்து வந்த ஒரு இளைஞன் இன்றைக்கு மேற்குலக இசையையே விரல்நுனியில் வைத்திருக்கிறான் என்றால், அது எப்படி?" - இந்தக் கேள்வி எழுந்தது இப்போது அல்ல; 1984-ல். இதை அப்படியே இளையராஜாவிடமே கேட்டிருக்கிறார் எழுத்தாளர் சிவசங்கரி. இதற்கு பதிலளித்ததோடு மட்டுமன்றி, தன் இளமை வாழ்க்கை குறித்தும், இசை வாழ்க்கை குறித்தும்கூட விரிவாகப் பகிர்ந்திருக்கிறார் இளையராஜா. 1984-ம் ஆண்டு ஜுனியர் விகடன் இதழில் வெளியான அந்த உரையாடல் இங்கே...

#VikatanOriginals

ங்கோ ஓர் சின்ன கிராமத்தில் பிறந்து எந்தவித வசதியும் இல்லாத நிலையில் வளர்ந்திருந்தாலும் தன் திறமையினால் இன்றைக்கு சிறந்த இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறப்பதுடன், மேற்கத்திய இசைமேதைகளான `பாக்', `பீதோவன்' போன்றவர்களின் சங்கீதத்தையும் விரல்நுனியில் வைத்திருக்கும் அளவுக்குதன் இசைஞானத்தை வளர்த்துக் கொள்வது இவருக்கு எப்படி சாத்தியமாயிற்று என்ற விஷயம் என்னை சதா ஆச்சர்யிக்க வைக்கும் என்பதால், அவரை சந்தித்தபோது இந்த சந்தேகத்தையே என் முதல் கேள்வியாக கேட்க, இளையராஜா சிரித்தார்.

``அப்படி என்றால் பட்டணத்தில் பிறந்தவர்களுக்குதான் மேலைநாட்டு சங்கீதத்தைப் பற்றின அறிவு இருக்கும், கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு இருக்காது என்று சொல்கிறீர்களா?"

``அல்ல... வாய்ப்புகள் குறைவாக இருக்கும் சூழ்நிலையிலும் அயர்ந்து உட்காராமல் உழைத்து, அபாரமாய் நீங்கள் சாதித்திருப்பதைக் குறிக்கவே அப்படிக் கேட்டேன்."

``பிரமாதமாய் எதையோ நான் சாதித்துவிட்டதாக நான் நினைக்கவில்லையே."

``இதைத்தான் அடக்கமான பேச்சு என்பார்கள்."

#VikatanOriginals
#VikatanOriginals
#VikatanOriginals
#VikatanOriginals

``சென்னைக்கு வந்தது அந்த சமயத்தில்தானா?"

``ஒரு சில வருஷங்கள் கழித்து குடும்பத்தில் பணக்கஷ்டம் கூடிப்போனதும், வருமானம் போதாமல் சென்னைக்கு வந்தோம். சங்கீதத்தைப் பற்றி இன்னும், இன்னும் விரிவாக அறிந்துகொள்ளவேண்டும் என்கிற வேட்கையில், மாஸ்டர் தனராஜிடம் சேர்ந்தேன். "

``அப்போது வாழ்க்கை வசதியாக இருந்ததா?"

``எங்கே? சம்பளம் கட்டக்கூட பணம் இருக்காது. ஆனாலும் மாஸ்டர் வீட்டிலேயே பழி கிடப்பேன். அவர் சீனியர் மாணவர்களுக்கு பாடம் எடுப்பதைக் கவனித்துக் கொண்டிருந்து விட்டு ஜுனியர்களுக்கு நானே வகுப்பு எடுப்பேன்."

#VikatanOriginals
#VikatanOriginals
#VikatanOriginals
#VikatanOriginals

``சரியான அசுர பயிற்சிதான்..."

``அதற்குப் பிறகு திரு.ஸோஸபிடம் 5 வருஷங்கள் பாடம் படித்தேன். சங்கீதத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொண்டதும் இசைக்குழுக்களில் வாசிக்கத் துவங்கியதும் அப்போதுதான்... அந்த நாட்களில் பாடல்களை ஸ்வரப்படுத்துவதற்கு ரொம்ப திண்டாடி இருக்கிறேன். ஆனால் அதையும் விடாமல் பழகி சீக்கிரமே, நொட்டேஷன்களை சரளமாக எழுதும் திறனை அடைந்தேன்."

#VikatanOriginals
#VikatanOriginals

வாய்ப்புகள் மிக, மிக குறைவாக இருந்த நிலையிலும் ஆர்வம், உழைப்பை மூலதனமாகக் கொண்டு உயர்ந்திருக்கும் இளையராஜாவிடம் விடைபெறுகையில் முன்பு ஒருதரம் கேட்ட வேதாந்தி ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உரையில் கேட்டது ஞாபகத்துக்கு வந்தது.

``வாஸ்தவமான ஒருவன் ஒரு காரியத்தைச் செய்ய விரும்பினால் அதை எப்படியும் நிறைவேற்றிவிடுவான். அப்படி அவன் நிறைவேற்றவில்லை என்றால் அந்தக் காரியத்தை செய்யவேண்டும் என்கிற எண்ணம் உண்மையானதல்ல."
ஜே.கிருஷ்ணமூர்த்தி
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு