Published:Updated:

"ஏன் ராஜா அப்படிப் பேசினீர்கள்?!" - '96' படம் குறித்து இளையராஜாவின் சர்ச்சை பேச்சு

இளையராஜா

90-களின் இசைக்கு ஒட்டுமொத்த முகமாக '96' படத்தில் இளையராஜாவைக் குறியீடாகக் காட்டியிருப்பார்கள். இப்படி, தன்னைப் பெருமைப்படுத்தும் ஒரு படத்தையே ஏன் ஒரு இசை மேதை வஞ்சிக்க வேண்டும்?!

"ஏன் ராஜா அப்படிப் பேசினீர்கள்?!" - '96' படம் குறித்து இளையராஜாவின் சர்ச்சை பேச்சு

90-களின் இசைக்கு ஒட்டுமொத்த முகமாக '96' படத்தில் இளையராஜாவைக் குறியீடாகக் காட்டியிருப்பார்கள். இப்படி, தன்னைப் பெருமைப்படுத்தும் ஒரு படத்தையே ஏன் ஒரு இசை மேதை வஞ்சிக்க வேண்டும்?!

Published:Updated:
இளையராஜா

இப்போதெல்லாம், இசையமைப்பாளர் இளையராஜா ஒரு பேட்டியளிக்கிறார் என்றாலே அதில் சர்ச்சையான பதில் இருப்பது இயல்பாகிவிட்டது. அதிலும், அவர் பாடல்களை மற்ற இசையமைப்பாளர்கள் தங்கள் படங்களில் பயன்படுத்தியுள்ளனர் எனத் தெரிந்தால், கண்டிப்பாக காட்டமான பேச்சைத்தான் அவர் வெளிப்படுத்துகிறார். பாடல்களின் காப்புரிமைப் பிரச்னை, மேடை நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களைக் கடிந்துகொள்வது, இளம் தலைமுறை இசையமைப்பாளர்கள் குறித்த அவர் பார்வை என அவர் பேசுவதில் சில விஷயங்கள் சர்ச்சையாகிவிடுகின்றன. கல்லூரி மேடைகளில் அவர் சொல்லும் நாஸ்டால்ஜியா விஷயங்கள் பலமுறை பார்க்கவைப்பவை.

இளையராஜா
இளையராஜா

அந்த வரிசையில், ஒரு பிரபல ஆங்கில நாளிதழின் யூ-டியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியொன்றில், கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படத்தில், அவர் இசையில் ஜானகி பாடிய பாடல்கள் பயன்படுத்தப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறிய பதில், மீண்டும் இளையராஜாவை சர்ச்சையில் இழுத்துவிட்டுள்ளது. "ஒரு பீரியட் படம் எடுக்கிறார்கள் என்றால், அந்தக் காலகட்டத்துக்கு ஏற்றவாறு நீங்களே ஒரு பாடலை இசையமைக்க வேண்டும். அந்தக் காலத்தில் வந்த இன்னொரு இசையமைப்பாளரின் பாடலைப் பயன்படுத்துவது அவசியமில்லாத ஒன்று" என்பதுபோல் கூறிவிட்டு, "இது அவர்களிடம் ஸ்டஃப் இல்லை என்பதைக் குறிக்கிறது. இது ஒரு வீக்னஸ். ஆண்மையில்லாத தனமாக இருக்கிறது" என்று மிகக் கடுமையான வார்த்தைகளால் '96' படக்குழுவை விமர்சித்துவிட்டார், இளையராஜா.

'96' திரைப்படத்தில், 90-களில் இருந்த பள்ளி வாழ்க்கையைக் குறிக்க பல குறியீடுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். ஹெர்குலஸ் சைக்கிள், லேடிபேர்ட் சைக்கிள், ஹீரோ பேனா, மேங்கோ பைட் மிட்டாய், இங்க் தெளித்த சட்டை, சாக்பீஸ், நோட்டுக்கு பிரவுன் கவர், மர ஸ்கேல், பாதாம் பழம், FLAMES... எனப் பல நாஸ்டால்ஜியா ஞாபகங்கங்களை நினைவுபடுத்தியிருப்பார்கள். அந்த வரிசையில், இளையராஜாவின் இசையில் ஜானகி பாடிய பாடல்களையும் பயன்படுத்தியிருப்பார்கள். இளையராஜா கூறுவதைப்போல படத்தின் சூழல்களுக்கென பாட்டை கம்போஸ் செய்து பயன்படுத்துவதற்குப் பதிலாக, அவர் பாட்டை பயன்படுத்தவில்லை.

இளையராஜா
இளையராஜா

அந்தக் காலகட்டத்தின் அடையாளமாக இருந்த இளையாராஜா இசையைப் பெருமைப்படுத்தும் விதத்திலேயே அதைப் பயன்படுத்தியிருப்பார்கள். 80-களின் பிற்பகுதியிலும், 90-களின் முற்பகுதியிலும் ஹிட்டான இளையராஜா - ஜானகி பாடல்களை மட்டும், பின்னணி இசைக்கருவிகள் இல்லாமல் பயன்படுத்தியிருப்பார்கள். அதுமட்டுமில்லாமல், '96'ல் அந்தப் படத்துக்குச் சொந்தமான, கோவிந்த் வசந்தா இசையமைத்த பாடல்களும் இடம்பெற்றிக்கும். அவற்றில் 'அந்தாதி', 'காதலே காதலே', 'கரை வந்த பிறகே' போன்ற பாடல்கள், கோவிந்த்துக்கு பல விருதுகளையும் தேடித்தந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், '96' படக்குழுவினர் மீதும் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மீதும் இப்படியொரு விமர்சனம் வைக்கவேண்டிய அவசியம் என்ன என்பதே பல இளம் தலைமுறை சினிமா ரசிகர்கள், இசை ரசிகர்கள் கேட்கும் கேள்வியாக இருக்கிறது. பொதுவாக, இளையராஜா என்ன விதமான சர்ச்சையான கருத்து தெரிவித்தாலும், அதை நியாயப்படுத்தும் இளையராஜாவின் ரசிகர்களே அவரது இந்தக் கருத்தைக் கேட்டு அதிருப்தியாகியிருக்கிறார்கள். இளையராஜாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் சிலர், 'பிதாமகன்' படத்தில் இடம்பெற்ற 'பொன்மகள் வந்தாள்', 'குங்குமப் பூவே', 'மாமா மாமா' எனப் பல ரெட்ரோ பாடல்களைக் கோத்து சூர்யா, சிம்ரன் ஆடும் பாடலைக் குறிபிட்டு, இளையராஜா மீது விமர்சனம் வைக்கிறார்கள். 

A still from '96'
A still from '96'

இன்னொரு வேடிக்கை, '96' பாடல்களின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ள ஆடியோ நிறுவனமான 'திங்க் மியூசிக்'தான், இளையராஜா தரப்பிடமிருந்து அவர் பாடல்களை இந்தப் படத்தில் பயன்படுத்த அனுமதி பெற்றுத்தந்துள்ளது என்கிறார்கள். அப்படியென்றால், '96'ல் அவர் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது இளையராஜாவுக்கு முன்பே தெரிந்திருக்கும். குறைந்தபட்சம், அவருடைய சட்ட ஆலோசனைக் குழுவுக்காவது தெரிந்திருக்கும். கூடுதல் தகவலாக, 'தளபதி' படத்தின் 'யமுனை ஆற்றிலே' பாடலை '96' படத்தில் ஜானகி கதாபாத்திரம் பாடும் ஒரு காட்சிக்காக, 'தளபதி' ஆல்பத்தின் டிஜிட்டல் உரிமையை வைத்துள்ள 'லஹரி மியூசிக்' நிறுவனத்திடம் முறையான உரிமையும் கோரப்பட்டுள்ளது. இதனால், அந்தக் காட்சியைக்கூட 'லஹரி'யின் அதிகாரபூர்வ யூ-டியூப் சேனலில்தான் வெளியிட்டிருந்தனர். படத்தின் பிற காட்சிகளும் பாடல்களும், 'திங்க் மியூசிக்'கில் வெளியாகின. 

நேற்று வெளியான இன்னுமொரு பேட்டியில் இளையராஜா அளித்திருக்கும் பதில்கள். அவர் அறிந்தும் அறியாமலும் இத்தகைய கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கிறார்.

நீங்க எல்லோரும் என்னோட டார்ச்சர் எல்லாம் சகிச்சுக்கிட்டு இருக்கீங்க பார்த்தீங்களா. நான் பேசறது, திட்றது, கோபப்படுறது, அதுதான் என்னைய define பண்ணுது. எனக்கு இது தெரிஞ்சாலும், என்னால Stop பண்ண முடியல பார்த்தீங்களா. எனக்கு இது தெரியுது. உங்கள டார்ச்சர் பண்றேன், உங்கள கோபப்படறேன், எல்லாத்தையும் ஒரு மாதிரியா நடத்துறேன் எல்லாமே எனக்குத் தெரியுது. Stop பண்ண முடியல. இது என்னுடைய நேச்சுரா இருக்கு. என்னையே என்னால Tolerate பண்ண முடியல, அப்படிங்கறது தான இதோட அர்த்தம்.
இளையராஜா