Published:Updated:

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு-மீண்டும் சந்தித்த இளையராஜா-எஸ்.பி.பி

அலாவுதின் ஹுசைன்

ஓர் ஆண்டுக்கும் மேலாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்த இளையராஜா-எஸ்.பி.பி மீண்டும் சந்திப்பு

ராஜா, எஸ்.பி.பி
ராஜா, எஸ்.பி.பி

போடா எல்லாம் விட்டுத்தள்ளு பழச எல்லாம் சுட்டுத்தள்ளு

"நட்புனான என்னான்னு தெரியுமா" இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ இளையராஜாவுக்கும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கும் நிச்சயம் பொருந்தும். நண்பர்களுக்குள் சண்டைகளும் சகஜம்தானே. ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் இருவரையும் முன்னர் போல் ஒன்றாக மேடைகளில் பார்க்க முடியவில்லை. தற்போது இருவரும் ஒரே மேடையில் இணைந்து இசைக் கச்சேரியில் பங்கேற்கவுள்ளனர்.

எஸ்.பி.பி, மனோபாலா, ராஜா
எஸ்.பி.பி, மனோபாலா, ராஜா
Vikatan

ஜூன் 2 ம் தேதி இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்திகளைத் தொடர்ந்து, அதற்கான ஒத்திகைகள் தற்போது தொடங்கியிருக்கின்றன. இளையராஜா, எஸ்.பி.பி ஒத்திகையில் இருக்கும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன. இது ரசிகர்களை மகிழ்ழிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எஸ்.பி.பி,ராஜா
எஸ்.பி.பி,ராஜா

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. என்றாலும், அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்த பல இசை ரசிகர்களுக்கு அதில், யேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்கவில்லையே என வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர்.

இந்த முறை எஸ்.பி.பி பாட இருப்பதால், கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் , இசை ரசிகர்கள்.