தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடிகராக இருப்பவர் நடிகர் ஆதி. இவரது நடிப்பில் தமிழில் 'யு டர்ன்' திரைப்படம் கடைசியாக வெளியானது. சமந்தா முன்னணி ரோலில் இந்தப் படத்தில் நடித்திருந்தார். குறிப்பாக ஆதி இரண்டு மொழிகளில் உருவாகும் படத்துக்கு அதிகம் முக்கியவத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் திரைப்படம் ' க்ளாப் - தி சவுண்ட் ஆஃப் சக்சஸ்'. விளையாட்டை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக இருக்கிறது. இதில் தடகள வீரனாக படத்தில் ஆதி நடிக்கயிருக்கிறார்.
படத்தின் ஹீரோயினாக ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி மூலமாக பிரபலமான அகான்ஷா சிங் மற்றும் 'கோலி சோடா 2' படத்தின் ஹீரோயின் கிரிஷா நடிக்கின்றனர். மேலும் இளையாராஜா இசையமைக்கும் இந்தப் படத்தில் முனீஷ்காந்த் காமெடி ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார். பிரகாஷ் ராஜ் முக்கிய ரோலில் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் படத்தின் வில்லனாக சிலகால இடைவெளிகளுக்கு பிறகு நாசர் நடிக்க, மைம் கோபி முக்கிய கதாபாத்திரத்துக்காக கமிட்டாகி உள்ளார். படத்துக்கான பூஜையின் போது தெலுங்கு நடிகர் நானி மற்றும் இளையராஜா உடனிருந்தனர்.