Published:Updated:

ஒரே கதை இரண்டு படம் ; 'டைகர் நாகேஷ்வர ராவ்' பயோபிக் அப்டேட் !

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ரவிதேஜா - பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்
ரவிதேஜா - பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ்

1970களில் வாழ்ந்த 'டைகர் நாகேஷ்வர ராவ்' என்பவரின் பயோபிக்கை எடுக்க இரண்டு டீம் போட்டிபோட்டு வருகின்றனர்.

ஒரு ஹாரர் படம் வந்தால் அதனைத் தொடர்ந்து, நிறைய ஹாரர் படங்கள் வரிசைக்கட்டும். போலீஸ் படங்கள் வந்தால், அடுத்தடுத்து நிறைய போலீஸ் படங்கள் வரும். சமீப காலமாக, ஆந்தாலஜி என்பது நம்ம ஊர் சினிமாவுக்கு அறிமுகமாகி நிறைய ஆந்தாலஜி படங்களாக வெளியாகின. அதுபோல, இப்போதைய ட்ரெண்ட் என்னவென்றால், உண்மை சம்பவத்தைத் தழுவிய கதைகள் மற்றும் பயோபிக்தான். அந்தப் படத்தை பல மொழிகளில் ரிலீஸ் செய்து வியாபார ரீதியாகவும் அடுத்தக்கட்டத்துக்குச் செல்கிறார்கள். சூர்யாவின் 'ஜெய் பீம்', துல்கர் சல்மானின் 'குரூப்' ஆகியவை சமீபத்திய உதாரணங்கள் !

தெலுங்கில் அப்படியொரு கதையை பிடித்திருக்கிறார்கள். 1970-களில் ஸ்டூவர்ட்புரம் என்ற இடத்தில் ராபின் ஹுட்டாக வாழ்ந்த டைகர் நாகேஷ்வர ராவ் என்பவரின் வாழ்க்கை வரலாறுதான் அது. இந்தக் கதையை வம்சி கிருஷ்ணா எனும் இயக்குநர் சில வருடங்களுக்கு முன்னதாக, பெல்லம்கொண்டா சுரேஷிடம் சொல்லி, அவரது மகன் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பல காரணங்களால் அந்தப் படம் ஆரம்பமாக தாமதமானது. அதனால், அந்த தயாரிப்பாளரிடமிருந்து வெளியே வந்து, ரவி தேஜாவிடம் சொல்லி ஓகே செய்துவிட்டார். தற்போது கையிலிருக்கும் இரண்டு படங்களை முடித்துவிட்டு, இந்தப் படத்திற்கு வரவிருக்கிறார், நடிகர் ரவி தேஜா. இப்படம் 'டைகர் நாகேஷ்வர ராவ்' என்ற பெயரில் பேன் இந்தியா படமாக பல மொழிகளில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு இசை ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு மதி என ஸ்ட்ராங்கான டெக்னிக்கல் டீமோடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.

'டைகர் நாகேஷ்வர ராவ்'
'டைகர் நாகேஷ்வர ராவ்'

இன்னொரு புறம், அறிமுக இயக்குநர் கே.எஸ் என்றவரை வைத்துக்கொண்டு டைகர் நாகேஷ்வர ராவின் பயோபிக்கை பெல்லம்கொண்டா சுரேஷ் தயாரிக்கிறார். 'ஸ்டூவர்ட்புரம் தொங்கா' என பெயரிடப்பட்டிருக்கும் இதில் பெல்லம்கொண்டா சாய் ஶ்ரீநிவாஸ் நாயகனாக நடிக்கிறார். ஒரே சமயத்தில் ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றை இரண்டு படக்குழு போட்டிப்போட்டு தயாரித்து வருகிறது. அதில் ரவி தேஜாவை இயக்கும் படக்குழு அந்தப் படத்திற்கு நாகஷ்வர ராவ் குடும்பத்திடம் பேசி அதற்கான ஒப்புதலும் தடையில்லா சான்றிதழும் பெற்றுவிட்டார்கள் என்கிறார்கள். ஏற்கெனவே, 'ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன்' என்ற பெயரில் சிரஞ்சீவி படமொன்று இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொருபுறம், பிர்ஸா முண்டாவின் பயோபிக். 'காலா' படத்திற்குப் பிறகு, இந்தியில் பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்குநர் பா.ரஞ்சித் இயக்க ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்றன. அந்த வேலைகள் கொஞ்சம் தாமதமானதால் 'சார்பட்டா' படத்தை இயக்கினார், ரஞ்சித். ஆனால், இன்னும் அவருடைய லைன் அப்பில் பிர்ஸா முண்டா பயோபிக் இருக்கிறது என்கிறார்கள். இன்னொரு பக்கம் இயக்குநர் கோபி நயினாரும் பிர்ஸா முண்டா பயோபிக்கை எடுக்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால், எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

'ஸ்டூவர்ட்புரம் தொங்கா'
'ஸ்டூவர்ட்புரம் தொங்கா'

இந்நிலையில், கெளஷிக் ரெட்டி எனும் டோலிவுட் இயக்குநர் பிர்ஸா முண்டாவின் பயோபிக்கை தெலுங்கு - இந்தி பைலிங்குவலாக எடுக்கவிருப்பதாகவும் அதனை 2022 ஆகஸ்ட் மாதம் வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உண்மை சம்பவத்தின் தழுவலோ ஒருவருடைய பயோபிக்கோ இப்போதிருக்கும் சூழலில் கவனம் என்பது மிக மிக மிக முக்கியம் இயக்குநர்களே !

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு