டாப்ஸிதான் தற்போது பாலிவுட்டின் மோஸ்ட் வான்டட் நடிகை. `முல்க்’, `பிங்க்’, `காஸி அட்டாக்’ என இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் அனைத்தும் மிரட்டல். கதாநாயகியாக மட்டுமே இல்லாமல் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்துவருகிறார். `சூர்மா’, `சாந்த் கி ஆங்க்’ என டாப்ஸி நடிக்கும் பயோபிக்குகளின் லிஸ்ட்டில், அம்ரிதா ப்ரீத்தம் எனும் பஞ்சாபிக் கவிஞரின் படமும் தற்போது இணைந்துள்ளது. பலே... பலே!

‘நேற்று இன்று நாளை’ படம் மூலம் தமிழ் சினிமாவில் சயின்ஸ் ஃபிக்ஷன் டிரெண்டைத் திரும்பவும் தொடங்கிவைத்தவர் இயக்குநர் ரவிக்குமார். இவரது இரண்டாவது படம் சிவகார்த்திகேயன் நாயகன், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என டாப் கியரில் கிக் ஆஃப் ஆனது. 70 சதவிகிதப் படப்பிடிப்பு முடிந்திருந்த நிலையில் பணப்பிரச்னையில் படம் சிக்க ஆறு மாதம் எந்த வேலையும் நடக்கவில்லை. இப்போது மீண்டும் நவம்பரில் ஷூட்டிங்கைத் தொடங்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். வீ ஆர் வெயிட்டிங் ப்ரோ!

காமன்மேன்களைப் போலத்தான் கான்களும் சோஷியல் மீடியாக்களில் உலவுகிறார்கள். இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவாக இருக்கும் பாலிவுட் பாட்ஷா ஷாரூக்கான் தன் மகன் ஆப்ராமின் போட்டோக்களைத் தொடர்ந்து பகிர்ந்து லைக்ஸ் அள்ளுகிறார். கராத்தே க்ளாஸுக்குப் போகும் ஆப்ராம், சாமி கும்பிடும் ஆப்ராம் என போட்டோக்கள் வரிசைகட்டுகின்றன! அப்பா என்றால் அப்டேட்!

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதல் இன்று வரை 55 வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பணியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்கள், அதில் லேட்டஸ்ட், அமெரிக்க அதிபரின் தேசப் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன். ஈரான், வட கொரியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு அமெரிக்காவின் உறவைத் தகவமைத்துக் கொள்வது குறித்த கருத்துவேறுபாட்டின் காரணமாக, டிரம்ப் - போல்டன் இடையேயான முரண்பாடு வளர்ந்துவந்த நிலையில் அவரைப் பணியிலிருந்து நீக்கியதாக டிரம்ப் ட்விட்டரில் அறிவிக்க, `அவர் ஒன்றும் நீக்கவில்லை, நானாகத்தான் ராஜினாமா செய்வதாகச் சொன்னேன்’ என்று தனது ட்விட்டர் அக்கவுன்டில் பதிலடி கொடுத்தார் ஜான் போல்டன். வாழு... வாழவிடு!

மல்யுத்த வீரரும் ஹாலிவுட் நடிகருமான தி ராக் - அவரின் காதலியான லாரென் ஹெஷ்யன் திருமணம் ஹவாய் தீவில் நடந்திருக்கிறது. கிட்டத்தட்ட பத்து வருடக் காதல் இது! லாரென் பயங்கர இசைப்பிரியை. பாடகி, பாடலாசிரியர், இசையமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். தங்களுடைய திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, ‘ராக்’கே திருமணத்தை உறுதி செய்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களில் சிலவற்றில் ‘ராக்’கின் முதல் திருமணத்தில் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளும் வெள்ளை கவுனில் தேவதைகள்போல மின்ன, ‘வாவ்’, ‘க்யூட்’ என கமென்ட்கள் குவிகின்றன. ஹேப்பி கல்யாணவாழ்க்கை ப்ரோ!

சூரிய மண்டலத்திற்கு வெளியே 110 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிற நட்சத்திரம் கே2-18 பி. பூமியைப்போலவே அதிக குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் சமநிலைகொண்ட தட்பவெப்பம் நிலவுவதால் இந்த கிரகத்துக்கு சூப்பர் எர்த் என்ற செல்லப்பெயரும் உண்டு. இந்தக் கோளைப் பல ஆண்டுகளாகவே ஹப்பிள் டெலஸ்கோப் உதவியோடு ஆராய்ச்சி செய்துவந்த நாசா, இப்போது இந்த கிரகத்தில் நீர் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. நீர் இருந்தால் அங்கே உயிர்கள் வாழவும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். வணக்கம் பங்காளிகளா!

முன்னணி மாதாந்தர ஃபேஷன் மற்றும் லைஃப் ஸ்டைல் பத்திரிகையான ‘வோக்’, தன் செப்டம்பர் மாத இந்தியப் பதிப்பிற்காக ஆடை வடிவமைப்பாளர் சபியா சாச்சி முகர்ஜியை ‘கெஸ்ட் எடிட்டராக’ இணைத்திருக்கிறது. மீட்டிங், டிசைனிங், ட்ரையல் என இந்த ஸ்பெஷல் எடிஷனுக்காக சபியாவின் குழு மொத்தம் 180 நாள்கள் பயணித்திருக்கிறது. இந்திய ஃபேஷன் சம்பந்தப்பட்ட சுவாரஸ்யத் தகவல்களைக் கொண்டிருக்கும் இந்த இதழின் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் அதன் ‘கவர் ஸ்டோரிதான்.’ சபியாவின் கைவண்ணத்தில் உருவான இண்டோ-வெஸ்டர்ன் ஆடைகளை உடுத்தி கேமராவுக்கு பக்காவாக போஸ் கொடுத்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. சென்சேஷனல் சூப்பர்மாடல்!

ஜான் டிராவால்டோவும் நிகோலஸ் கேஜும் 1997-ல் நடித்த ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘ஃபேஸ்/ஆஃப்’. ஜான்வூ இயக்கிய அந்தப் படத்தை இப்போது ரீபூட் செய்யப்போகிறது ஹாலிவுட். `அடப்பாவிகளா! அந்தப்படம் ஒரு கிளாஸிக், அந்த பர்னிச்சரை மட்டுமாச்சும் விட்டுவைங்கய்யா’ என்று நெட்டிசன்கள் எல்லாம் ட்விட்டர் ஃபேஸ்புக்கில் புரட்சிப் போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், பாராமவுன்ட் நிறுவனம் வேலையைத் தொடங்கிவிட்டது. நாயகர்களாக நடிக்கப்போவது யார் யார் என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ஆக்ஷன் தூள் பறக்குமே!