சினிமா
Published:Updated:

இன்பாக்ஸ்

பூஜா ஹெக்டே
பிரீமியம் ஸ்டோரி
News
பூஜா ஹெக்டே

சிம்பு வந்தால் மட்டும் போதும்

‘ஹாலிவுட் படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். வில்லன் யாரெனத் தெரியவில்லையா? கண்டுபிடிக்க எளிய வழி இருக்கிறது. ஒரு கதாபாத்திரம் ஐபோன் பயன்படுத்தினால் நிச்சயம் அது வில்லன் கதாபாத்திரமாக இருக்காது. இந்த ரகசியத்தை வெளியே சொல்லியிருப்பவர் ‘Knives Out’ திரைப்படத்தின் இயக்குநர் ரியன் ஜான்சன். அந்த அளவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் இமேஜ் கெட்டுப்போகாமல் பார்த்துக் கொள்ளுமாம். தங்கள் தயாரிப்புகளைத் திரையில் காட்டப் பல கட்டுப்பாடுகள் விதிக்கிறது ஆப்பிள். ஆனால், ‘உண்மையில் கெட்டவர்கள் யாரும் ஐபோன் வச்சிருக்க மாட்டாங்களா, என்ன பாஸ் உங்க லாஜிக்?’ என இதற்காக ஆப்பிள் நிறுவனத்தை வறுத்தெடுத்துவருகின்றனர் நெட்டிசன்கள். என்ன ஆப்பிள் இதெல்லாம்!

Knives Out
Knives Out
கரிஷ்மா கபூர்
கரிஷ்மா கபூர்

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூர், சல்மான்கான், கோவிந்தா, அஜய் தேவ்கன் என்று ஸ்டார் ஹீரோக்களுடன் சேர்ந்து செம ஹிட் கொடுத்தார். அபிஷேக் பச்சனுடன் நிச்சயதார்த்தம், பிரேக் அப், பிறகு தொழிலதிபர் சஞ்சய் கபூருடன் திருமணம், இரண்டு குழந்தைகள், தன் தாய்மை அனுபவத்தை ‘மை யம்மி மம்மி கைடு’ புத்தகமாக எழுதியது, மணமுறிவு, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு என்று லைம்லைட்டிலேயே இருந்தவர், சின்ன பிரேக்கிற்குப் பிறகு தற்போது ‘மென்டல்ஹூட் (Mentalhood)’ ஹிந்தி வெப் சீரிஸில் அடியெடுத்து வைத்திருக்கிறார். சிங்கிள் அண்ட் வொர்க்கிங் மதர்ஸ் பிள்ளைகளை வளர்க்க எப்படியெல்லாம் கஷ்டப் படுகிறார்கள் என்பதுதான் இதன் கரு. ‘என் கரியரைவிட, விருதுகளைவிட என் குழந்தைகளுக்கு அம்மாவாக இருப்பதையே முக்கியமாகக் கருதுகிறேன்’ என்கிறார் கரிஷ்மா, அம்மான்னா சும்மா இல்லைடா!

கஜோல், அஜய் தேவ்கன்
கஜோல், அஜய் தேவ்கன்

பாலிவுட்டின் க்யூட் தம்பதி கஜோல், அஜய் தேவ்கனுக்கு இடையேயான காதலையும் புரிந்துணர்வையும் பல ரியாலிட்டி ஷோக்களிலும், இவர்களின் சமூகவலைதளப் பக்கங்களிலும் பார்த்திருப்போம். சமீபத்தில் கஜோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான தன் புகைப்படத்தையும், அதைவிட அழகான ஒரு கமென்ட்டையும் பதிவிட்டி ருந்தார். அதில், கஜோல் அஜய்யிடம் ‘ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா பேபி’ என்று கேட்டதற்கு, அஜய், ‘நீ அங்க போய் உட்கார், நான் எடுக்குறேன்’ என்று சொல்லி யிருக்கிறார். அதற்கு கஜோல், ‘செல்ஃபினா ரெண்டுபேரும் சேர்ந்து நின்னு அவங்கள அவங்களே போட்டோ எடுத்துக்கிறது’ என்று, செல்ஃபி பற்றித் தன் கணவருக்குப் பாடம் எடுத்ததை நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ளார். மேடு ஃபார் ஈச் அதர்!

சிம்பு
சிம்பு

சென்னையில் ஆரம்பிக் கப்பட்ட `மாநாடு’ படத்தின் ஷூட்டிங், ஒரு வாரத்திற்குப் பிறகு ஹைதராபாத்திற்கு மாற்றப்பட இருந்தது. ஆனால் சிம்பு, `ஹைதராபாத்திற்கு வர மாட்டேன். சென்னையிலேயே படப்பிடிப்பை நடத்தலாம்’ எனச் சொல்லியிருக்கிறார். `சிம்பு வந்தால் மட்டும் போதும்’ என நினைத்த தயாரிப்பாளரும், முழுப் படப்பிடிப்பையும் சென்னையிலேயே நடத்துவதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டாராம். வந்தா மட்டும் போதும்!.

பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே

`மாஸ்டர்’ படவேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், தனது அடுத்த படத்தின் இயக்குநராக சுதா கொங்கராவை டிக் செய்திருக் கிறாராம் விஜய். `சூரரைப் போற்று’ படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கும் சுதா, அந்த வேலைகளை முடித்த பிறகே விஜய் படக்கதைக்கு கவனம் செலுத்தவிருக்கிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்காக தெலுங்கு சினிமாவில் தற்போது பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டேவிடம் பேசியிருக்கிறார்களாம். `முகமூடி’ படத்திற்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா, விஜய் படம் மூலம் கோலிவுட்டில் ரீ-என்ட்ரி கொடுக்கவிருக்கிறார். வெல்கம் பேக்!

ஜான் ஆலிவர்
ஜான் ஆலிவர்

கைச்சுவையின் வழியே நறுக்கென்று விமர்சனங்களை முன்வைப்பதில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கி உலகப்புகழ்பெற்றவர் ஜான் ஆலிவர். இவர் தொகுத்து வழங்கும் ‘லாஸ்ட் வீக் டுநைட் வித் ஜான் ஆலிவர்’ எனும் நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஜான் ஆலிவர் கூறிய கருத்துகள் சர்ச்சைக்குரிய வகையில் இருப்பதாகக் கூறி ஹாட்ஸ்டாரில் அவரது அன்றைய தொகுப்பு தடை செய்யப்பட்டுள்ளது. அப்படி என்னதான் சொன்னார் ஜான் ஆலிவர், ‘`பியர் கிரில்ஸை... உலகத்தை... தற்போதைய அமெரிக்க ஜனாதிபதியை மோடி கவர்ந்திருக்கலாம், ஆனால், இந்தியாவில் அவர் சர்ச்சைக்குரிய நபராகவே இருக்கிறார். மதச் சிறுபான்மை யினருக்கு எதிராக அவரின் அரசாங்கம் மேற்கொள்ளும் துன்புறுத்தல் நடவடிக் கைகளைப் படிப்படியாக அதிகரித்து வருவதே அதற்குக் காரணம்” எனப் பேசியிருந்தார். உண்மை சுடும்!

பிரியங்கா சோப்ரா
பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ராவுக்கும் அவர் கணவர் நிக் ஜோனஸுக்கும் இருக்கிற வயது வித்தியாசம் அடிக்கடி சமூக வலைதளங்களில் பேசப்படும். அவர்களுடைய காதல் வெளிப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே தொடர்ந்துவருகிற இந்த ட்ரோல்களுக்கு முதன்முறையாகப் பதிலளித்திருக்கிறார் நிக் ஜோனஸ். சிறந்த பாடகர்களைத் தேர்ந்தெடுக்கும் ரியாலிட்டி ஷோவின் நடுவர்களில் ஒருவராகக் கலந்துகொண்ட நிக் ஜோனஸிடம், சக நடுவரான கெல்லி, ‘எனக்கு 37 வயது. உங்களுக்கு 27 இருக்குமா?’ என்று ஜாடையாகக் கேட்க, ‘என் மனைவிக்கு 37 வயதுதான். அதனாலென்ன’ என்றிருக்கிறார். இதுகுறித்த கேள்விக்கும், ‘அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு ட்ரோல் செய்யட்டும். அதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படுவதேயில்லை’ என்றிருக்கிறார் பிரியங்கா நிக்! வெல் செட்! லவ்வுக்கு ஏது சார் வயசு?

1970களில் கம்போடியா ‘க்மெய்ர் ரூஷ்’ சர்வாதிகார ஆட்சியின் கீழ் வந்தது. அந்த ஆட்சி 1979-ம் ஆண்டு தூக்கி எறியப்பட்டது. க்மெய்ர் ரூஷ் ஆட்சிக்காலத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப் பட்டனர். பலர் உள்நாட்டுக்குள்ளே இடம்பெயர்ந்தனர். அவ்வாறு குடும்பத்தை இழந்த புன் சென் கம்போடியத் தலைநகரில் என்.ஜி.ஓ-க்களின் உதவியுடன் வசித்துவந்தார். நீண்ட நாள்களுக்குப் பிறகு தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்று வரலாம் என முடிவெடுத்தபோது, இறந்து விட்டதாக நினைத்த தன் சகோதரர்களும் சகோதரிகளும் உயிருடன் இருப்பதை அறிந்து இன்ப அதிர்ச்சி அடைந்தார். 98 வயதான புன் சென் 102 வயதான தன் சகோதரி புன் சியாவையும். 92 வயதான தன் சகோதரரையும் 47 ஆண்டுகள் கழித்து சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. மகிழ்ச்சி!

போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் `வலிமை’ படத்தில் நடித்துவரும் அஜித், தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துள்ளார். தீபாவளிக்கு ரிலீஸ் என்கிற பிளானில் `வலிமை’ படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார் எனத் தகவல்கள் வந்தன. ஆனால், சன் பிக்சர்ஸ் நிறுவனம் அஜித்திடம் கால்ஷீட் கேட்டிருக்கிறதாம். அஜித்தின் 61வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார்கள். அப்டேட்டுக்கே அப்டேட்.