Published:Updated:

இன்பாக்ஸ்

சாரா அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
சாரா அலிகான்

இந்தக் காதலர் தினத்துக்கு வெளியான ‘லவ் ஆஜ் கல்’ பாலிவுட் பட ஹீரோயின் சாரா அலிகான், செம சேட்டைக்காரப் பொண்ணு.

இன்பாக்ஸ்

இந்தக் காதலர் தினத்துக்கு வெளியான ‘லவ் ஆஜ் கல்’ பாலிவுட் பட ஹீரோயின் சாரா அலிகான், செம சேட்டைக்காரப் பொண்ணு.

Published:Updated:
சாரா அலிகான்
பிரீமியம் ஸ்டோரி
சாரா அலிகான்

`சைக்கோ’ படத்தின் ரிலீஸுக்குப் பிறகு `துப்பறிவாளன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளை ஆரம்பித்த மிஷ்கின், அதன் ரிலீஸுக்குப் பிறகு `சைக்கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவிருக்கிறார்.

அதிதி ராவ்
அதிதி ராவ்

முதல் பாகத்தில் நடித்த உதயநிதி, நித்யா மேனன், அதிதி ராவ் ஆகியோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கவிருக்கிறார்கள். இதிலேயாவது சிசிடிவி இருக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்துவருகிறது. க்ளைமாக்ஸ் காட்சியை சமீபத்தில் படமாக்கியிருக்கும் நிலையில், இஷா கோபிகர் இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கிறாராம். மேலும், இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்களில் நடிப்பதாகவும் தகவல்கள் பரவி வந்த நிலையில், அப்படி எதுவும் இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். சீக்கிரம் கண்ணுல காட்டுங்க!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஜெர்மனியில் காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை ஆய்வு செய்யும் போட்ஸ்டாம் நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்டர்ஸ் லெவர்மேன் தலைமையிலான குழு அன்டார்ட்டிகாவில் உலக வெப்பமயமாதல், கரிம வாயு வெளியீடு ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிந்துகொள்ள 16 பனிப்பாறைகளை ஆய்வு செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய ஆய்வின் மூலம், உலகளவில் இதுவரை நடந்துள்ள கடல்மட்ட உயர்வில் 90 சதவிகிதம் அன்டார்ட்டிகாவில் உருகிய பனிப்பாறைகள்தான் பங்கு வகித்துள்ளன என்பதை உறுதிசெய்துள்ளனர். அன்டார்ட்டிகாவில் உருகும் பனிப்பாறைகள் மட்டுமே, கடந்த நூற்றாண்டில் 58 சென்டிமீட்டர் வரை கடல் மட்டம் உயரக் காரணமாக இருந்துள்ளது. கரிம வெளியீடு இதே வேகத்தில் சென்றால், பூமியின் வெப்பநிலை 2100-ம் ஆண்டுக்குள் 5 டிகிரியைத் தொட்டுவிடும் என்று காலநிலை மாற்ற ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். வான்டட் வார்னிங்!

பாலிவுட்டின் ஆக்‌ஷன் ஹீரோ ஷாருக்கானின் இளைய மகன் ஆப்ராம், நிஜ ஆக்‌ஷன் ஹீரோவாக உருவாகிவருகிறார். சமீபத்தில் நடந்த டேக்வாண்டோ தற்காப்புப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுத் தங்கப்பதக்கத்தை வென்றிருக்கிறார் ஆப்ராம். ‘நீ பயிற்சி செய், சண்டையிட்டு வெற்றிகொள். அதையே மீண்டும் செய். என் குழந்தைகள் என்னைவிட அதிக விருதுகள் பெறுகிறார்கள் என்று நினைக்கிறேன். இது எனக்குப் பெருமையாகவும் உத்வேகமாகவும் இருக்கிறது’ என்று நெகிழ்ந்திருக்கிறார் ஷாருக். சண்டை செய்வோம்!

ந்தக் காதலர் தினத்துக்கு வெளியான ‘லவ் ஆஜ் கல்’ பாலிவுட் பட ஹீரோயின் சாரா அலிகான், செம சேட்டைக்காரப் பொண்ணு. அவருடைய இன்ஸ்டா போஸ்ட் எல்லாம் ஒரே ஒரண்டைமயம்தான்.

சாரா அலிகான்
சாரா அலிகான்

‘நானும் என் அம்மாவும் சவுத் இண்டியன் உணவுகளைச் சாப்பிட ஆரம்பித்தால், பக்கத்தில் இருப்பவர்கள் சீட்டை எங்களுக்கு விட்டுக்கொடுத்துவிட்டு ஓடி விடுவார்கள்’ என்று, தன் அம்மாவும் நடிகையுமான அம்ரிதா சிங்கை வம்புக்கிழுப்பார். தன் சகோதரன் இப்ராஹிம் அலிகானை, ‘நீ என் சகோதரனாகப் பிறந்திருப்பதால் உன்னை ரசிக்கிறேன். ஆனால், இதற்காக நீ எதுவுமே செய்யவில்லை என்பதை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது’ என்று நக்கலடிப்பார். ‘பாலிவுட்டுக்கு ஹியூமர் டைரக்டர் ரெடி’ என்கின்றன கமென்ட்கள். சூப்பர் சிஸ்டர்!

2019-ன் இறுதியில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘The Witcher’ தொடருக்கு ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர் ரசிகர்கள். இந்தத் தொடருக்கான மையக்கரு போலிஷ் மொழி நாவல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டிருந்தாலும் விட்சரை உலக அளவில் பலருக்கும் கொண்டு சேர்த்தது விட்சர் கேம்ஸ்தான். இப்போது தொடர் வெளியான பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது இந்த கேம்களின் விற்பனை. முக்கியமாக ‘The Witcher 3’ கேமின் விற்பனை 554% அதிகரித்துள்ளதாம். அடுத்த சீசன் வெளியாக எப்படியும் அடுத்த வருடம் ஆகிவிடும் என்பதால் அதுவரை விட்சர் உலகத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள விரும்பும் ரசிகர்களின் பசிக்கு இந்தப் பழைய கேம்களே தீனிபோடப்போகிறது. முதல் நான்கு வாரத்தில் மட்டும் 7.6 கோடி பேர் இந்தத் தொடரை ஸ்ட்ரீம் செய்துள்ளதாக ஏற்கெனவே தெரிவித்திருந்தது நெட்ஃப்ளிக்ஸ். அடுத்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் ரெடி!

டோலிவுட்டின் முன்னணி நட்சத்திரமான ராம் சரணின் மனைவி, மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகள் உபாசனா. பறவைகள் மற்றும் பசுங்கன்றுடன் தான் இருக்கும் வித்தியாசமான கிராஃபிக்ஸ் புகைப்படங்களைத் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவுசெய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். கடவுள்களின் வாகனமாகப் போற்றப்படும் பறவைகளையும் கால்நடைகளையும் வீட்டிற்குள் அடைத்துவைத்து அவற்றின் சுதந்திரம் முடக்கப்படுவதைச் சுட்டிக்காட்டவே இந்த போட்டோக்களைப் பதிவேற்றம் செய்ததாகச் சொல்கிற உபாசனா, விலங்கு உரிமைகளுக்காகப் போராடும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றிவருகிறார். பொறுப்பாளி!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism