Published:Updated:

இன்பாக்ஸ்

அஜித்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அஜித்குமார்

அஜித்குமாரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார் வித்யாபாலன்.

இன்பாக்ஸ்

அஜித்குமாரைப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கிறார் வித்யாபாலன்.

Published:Updated:
அஜித்குமார்
பிரீமியம் ஸ்டோரி
அஜித்குமார்
  • நேர்கொண்ட பார்வையில் வித்யாதான் அஜித்குமாரோடு நாயகியாக நடிக்கிறார். ‘`அஜித்குமார் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவருடைய ரசிகர்களுக்கும் அவருக்குமான தொடர்பு பற்றியெல்லாம் பாலிவுட்டில் நிறைய பேசுவார்கள். ஆனால் அவரைச் சந்தித்ததில்லை. படசூட்டிங்கில்தான் முதலில் பார்த்தேன். அப்படிப்பட்ட புகழோடு இருக்கிற ஒருவர் அத்தனை எளிமையானவராக நட்பாகப் பழகியது ஆச்சர்யமாக இருந்தது’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார். #வித்யாவின் வியப்புகள்!

இன்பாக்ஸ்
  • அடுத்த ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரத்தில் 2020-ல் நடைபெறவுள்ளது. மிகச்சரியாக, போட்டி தொடங்க ஒருவருடம் இருக்கும் நிலையில், போட்டிக்கான மெடல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. ஒலிம்பிக் வரலாற்றில் முதன்முறையாக பழைய கேட்ஜெட் குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்ட மெட்டல்களால் இந்த மெடல்களைச் செய்திருக்கிறார்கள். இதற்காக 2017லேயே ஜப்பான் மக்களிடம் பழைய கேட்ஜெட்களை அளிக்கக் கேட்டிருந்தது அந்நாட்டு அரசு, இப்படி வந்து குவிந்த பழைய கேட்ஜெட்களின் அளவு 80,000 டன்! இதில் ஆறு டன் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் வந்திருக்கின்றன. இந்தக் குப்பைகளிலிருந்து 32கிலோ தங்கம், 3,500 கிலோ வெள்ளி, 2,200 கிலோ வெண்கலத்தையும் சேகரித்து, அதைக்கொண்டு இந்த ஒலிம்பிக் மெடல்களை உருவாக்கியுள்ளனர். #தங்கப்ப... தக்கம்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
  • நாடுமுழுக்கப் பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் நடந்துவரும் கும்பல் படுகொலைகள், தலித் மற்றும் இஸ்லாமியர்கள்மீதான தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி இந்தியாவின் முக்கியத் திரைக்கலைஞர்களும் எழுத்தாளர்களும் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி யுள்ளனர். ‘ஜெய் ஸ்ரீராம்’ என்கிற முழக்கமே இன்று சிறு பான்மையினருக்கு எதிரான போர்முழக்கமாக மாறிவிட்டது. இதை உடனடியாகத் தடுத்து நிறுத்த பிரதமர் முன்வர வேண்டும்’ என்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத் துள்ளனர்.இந்தக் கடிதத்தில் மணிரத்னம், அடூர் கோபால கிருஷ்ணன், அனுராக் காஷ்யப், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா, ஷ்யாம் பெனகல் எனப் பலரும் கையொப்பமிட்டுள்ளனர். கொலைகளை நிறுத்தக் குரல் கொடுப்போம்!

  • ‘இந்தியன்-2’ படத்தில் ரகுல் ப்ரீத் சிங்கும் நடிக்க விருக்கிறார். படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது தலைகாட்டி வந்தாலும் பெரிய பிரேக் கிடைக்காமல் இருந்த நிலையில், ‘இந்தியன் 2’ வாய்ப்பால் செம குஷியில் ரகுல். ஈ சாலா வெற்றி நமதே!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்பாக்ஸ்
  • தனுஷ் நடித்திருக்கும் ‘அசுரன்’ படவேலைகளைக் கிட்டத்தட்ட முடித்துவிட்டார் இயக்குநர் வெற்றிமாறன். அடுத்து வடசென்னை - 2 படத்தையும் தொடங்கவிருக்கிறார். கூடவே ‘ராஜன் வகையறா’ என்கிற வெப்சீரிஸ் வேலைகளிலும் இறங்கியிருக்கிறார். இத்தனைக்கும் நடுவில், ‘விசாரணை’ படம் போல ஒரு சிறிய படத்தை பரோட்டா சூரியை நாயகனாக நடிக்கவைத்து இயக்கப்போகிறார் என்று கிசுகிசுக்கிறது கோலிவுட். எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படமும் பிரபலமான நாவல் ஒன்றை அடிப்படையாகக் கொண்டதுதானாம். ஆசம்... ஆசம்...

  • அஜித் நடித்து சூப்பர்ஹிட்டான படம் வீரம். இந்தப்படத்தின் இந்தி ரீமேக்கில் அக்‌ஷய் கன்னா நடிப்பார் எனப் பேசப்பட்டு வந்த நிலையில், அவரில்லை, அக்‌ஷயே பரிந்துரைத்த விக்கி கௌசல் நடிப்பார் என்றார்கள். இப்போது இருவருமே இல்லை, ஜீரோ படத்தோல்விக்குப் பிறகு படங்கள் எதையுமே ஒப்புக்கொள்ளாமல் இருந்த ஷாருக் கான் `வீரம்’ ரீமேக்கில் நடிக்கும் முடிவில் இருக்கிறார் என்கிறார்கள். தல கான்!

  • `விஸ்வரூபம்’ வில்லன் ராகுல் போஸ்தான் சென்ற வார ட்விட்டர் ஹிட். ஷூட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள சண்டிகர் சென்றவர், தான் தங்கியிருந்த பிரபல ஹோட்டலில் இரவு சாப்பிட இரண்டு வாழைப்பழங்கள் ஆர்டர் செய்திருக்கிறார். இரண்டு வாழைப்பழங்களுக்கு 442 ரூபாய் பில் தந்திருக்கிறது ஹோட்டல் நிர்வாகம். அதிர்ச்சியடைந்த ராகுல்போஸ், அந்த ஹோட்டலைக் கலாய்த்து ட்விட்டரில் #bananagate என ட்வீட் செய்ய... மக்கள் அதை டிரெண்ட் ஆக்கிவிட்டனர். வடநாட்டு வாழைப்பழ காமெடி!

  • ‘ஜிகர்தண்டா’ படத்தை ஏற்கெனவே அதர்வா நடிப்பில் தெலுங்கில் ரீமேக் செய்துகொண்டிருக்கிறார்கள். அடுத்து இந்திக்கும் செல்கிறது ஜிகர்தண்டா. இந்தப் படத்தில் பாபிசிம்ஹா நடித்த பாத்திரத்தில் சஞ்சய்தத் நடிக்கவுள்ளார். நாயகியாக தமன்னாவை நடிக்கவைக்க முடிவெடுத்திருக்கிறார்கள். சித்தார்த் பாத்திரத்தில் கார்த்திக் ஆர்யன் அல்லது பர்ஹான் அக்தர் நடிப்பார் என்று பேசப்பட்டு வருகிறது! ரீமேக் காலம்!

இன்பாக்ஸ்
  • ஒவ்வோராண்டும் மியூசிக் அகாடமியின் சங்கீத கலாநிதி விருது யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எகிறும். இந்த ஆண்டு ‘சங்கீத கலாநிதி’ விருது பெறுகிறார் பாடகி எஸ்.சௌம்யா. ஐ.ஐ.டி.பட்டதாரி. இசையில் டாக்டரேட்; புகைப்படம் எடுப்பார், ஓவியம் வரைவார். இத்தனை திறமைகளுடன் கர்நாடக இசையிலும் கலக்குபவருக்குப் பொருத்தமான விருது. சங்கீத சௌம்யா!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism