சினிமா
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

அனிமேஷன் திரைப்படம்
பிரீமியம் ஸ்டோரி
News
அனிமேஷன் திரைப்படம்

சீனத் திரையுலகைக் கலக்கிவருகிறது ‘நே ஸா’(Ne Zha) என்ற அனிமேஷன் திரைப்படம்.

  • டிஸ்னியின் ‘ஜூட்டோப்பியா’ திரைப்படம்தான் சீனாவின் அதிக வசூலீட்டிய அனிமேஷன் படமாக இருந்தது. நே ஸா அந்தச் சாதனையை உடைத்து மெகா ஹிட் அடித்திருக்கிறது.

இன்பாக்ஸ்

சீனப் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்ட இந்தப் படத்தை ஆங்கிலத்தில் டப் பண்ணி உலகெங்கும் ரிலீஸ் பண்ணத் திட்டமிட்டிருக்கிறார்களாம். நேசமணிபோல ஹிட்டடிக்குமா?

இன்பாக்ஸ்
  • பிரபல பெண் எழுத்தாளர் டோனி மாரிசன், சென்றவாரம் காலமானார். அவருக்கு வயது 88. ‘பிலவ்ட்’, ‘சாங் ஆஃப் சாலமன்’ உள்ளிட்ட பல பிரபலமான நாவல்களை எழுதியவர் டோனி மாரிசன். 1988-ல் புலிட்சர் விருதையும், 1993-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் வென்றவர். தன் எழுத்துகளில் தொடர்ந்து ஆப்பிரிக்க-அமெரிக்க மக்களின் வாழ்வையும் அமெரிக்காவில் அந்த மக்கள் எதிர்கொண்ட அன்றாட சவால்கள், வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் எனத் தொடர்ந்து எழுதி வந்தவர் டோனி மாரிசன். எப்போதும் தன்னைச் சிறுபான்மையினரின் எழுத்தாளராகவே அடையாளப்படுத்திக்கொண்டவர். சிறார் இலக்கியத்துக்கும் நிறையவே பங்களிப்புகள் செய்தவர் டோனி. எழுத்துக்கு மரணமில்லை.

இன்பாக்ஸ்
  • லக அளவில் ஹிட் அடித்த டிவி தொடர் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்.’ இதன் படைப்பாளர்கள் டேவிட் பெனியோஃப் மற்றும் டி.பி.வைஸ். கேம் ஆஃப் த்ரோன்ஸ் தொடர் முடிந்துவிட்ட நிலையில் இருவரும் அடுத்து என்ன புராஜெக்ட் பண்ணப் போகிறார்கள் என்று GOT ­ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, அடுத்து நெட்ஃப்ளிக்ஸில் திரைப்படங்கள் மற்றும் டிவி தொடர்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். கேம் ஆஃப் த்ரோன்ஸைவிடப் பெரிய பிரமாண்டங்களை நெட்ஃப்ளிக்ஸில் எதிர்பார்க்கலாம் என்று சொல்லியிருக்கிறது இந்த எழுத்தாளர் கூட்டணி. பெரிசா ரவுசா வாங்க பாய்ஸ்!

  • திரைப்படங்களிலிருந்து குட்டி பிரேக் எடுத்துக்கொண்டு ஆயுர்வேத டீடாக்ஸ், யோகா என இறங்கிவிட்டார் ஆண்ட்ரியா. ‘`என்னுடைய அழுத்தங்கள் நிறைந்த வாழ்க்கை முறையால் உடல்நிலையும் மனநிலையும் சுத்தமாக வலுவிழந்துவிட்டது. அதனால் கொஞ்சம் ரெகுலர் வாழ்க்கையிலிருந்து விலகி என்னை மீட்டெடுக்கப் போகிறேன்’’ என அறிவித்துவிட்டு சமூகவலைதளங்களிலிருந்தும் விடைபெற்றுள்ளார் ஆண்ட்ரியா. ஓய்வு முக்கியம் பாஸ்!

  • `பிகில்’ அப்டேட்டுகளுக்கு நடுவில் `தளபதி 64’ அப்டேட்டுகளும் வரத்தொடங்கிவிட்டன. `மாநகரம்’ லோகேஷ் இயக்கவுள்ள இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக `தோனி-அன்டோல்டு ஸ்டோரி’, `கபீர் சிங்’ படங்களில் நடித்த பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க இருக்கிறாராம். படத்திற்கு இசை அனிருத். தீபாவளிக்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்க விருக்கிறது. தோனிபேபி!

  • காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து ‘`காஷ்மீரில் ஷூட்டிங் பண்ண வாங்க’’ என பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இப்போது காஷ்மீர் அரசியல் விஷயங்களை வைத்துப் படமெடுக்க பாலிவுட்டும் தயாராகிவிட்டது. ‘ஆர்ட்டிகிள் 370’, ‘காஷ்மீர் ஹமாரா ஹை’, `புல்வாமா’, ‘சர்ஜிகல் ஸ்ட்ரைக்’ எனக் காஷ்மீர் தொடர்பான 50க்கும் மேலான டைட்டில்களை, சென்ற வாரம் ரெஜிஸ்டர் பண்ணியிருக்கிறது பாலிவுட். அநேகமாக அடுத்த சில வாரங்களில் பிரபல நடிகர்களின் காஷ்மீர்ப் பின்னணிப் படங்கள் குறித்த அறிவிப்புகளும் வரக்கூடும். இங்கே எல்லாமே சினிமாதான்!

இன்பாக்ஸ்
  • யக்குநர் விஜய் அடுத்து எடுக்க இருக்கும் ஜெயலலிதா பயோபிக்கில் எம்ஜிஆர் வேடத்தில் அரவிந்த் சுவாமி நடிக்கப்போகிறார் என்கிறது கோலிவுட் வட்டாரம். ஏற்கெனவே, ஜெயலலிதா வேடத்துக்கு கங்கனா ரனாவத் என்று முடிவாகிவிட்டது. படத்தின் ஷூட்டிங் அநேகமாக அக்டோபரில் தொடங்கும் என்கிறார்கள். படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாராகவுள்ளது. எடப்பாடி-பன்னீர்செல்வம் வேடங்களில் யார் யார் நடிக்கிறாங்க?

  • டாப்ஸி தெலுங்கில் நடித்த `அனந்தோ பிரமா’ படம் தமிழில் தமன்னா நடிக்க ‘பெட்ரோமாக்ஸ்’ என ரீமேக் ஆகிறது. படத்தை ‘அதே கண்கள்’ படத்தை இயக்கிய ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காகக் காத்திருக்கிறார் தம்மு. முதன்முறையாக சோலோவாக நடிப்பதால் தமன்னா ஃபிங்கர்ஸ் கிராஸ் மோடில் இருக்கிறாராம். சிங்கிளா ஜெயிக்கிறோம்!

இன்பாக்ஸ்
  • வேலன்டினா இலங்பம் என்கிற 9 வயது மணிப்பூர்ச் சிறுமிதான் சென்றவார வைரல். மணிப்பூர் அரசு தங்களுடை சாலைகளை அகலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் வேலன்டினா வீட்டுக்குப் பக்கத்தில் சாலை அகலப்படுத்த அங்கிருக்கிற மரம் ஒன்றை அதிகாரிகள் வெட்டிவிட, வேலன்டினா அந்த மரத்தை வெட்டியதால் வேதனைப்பட்டு அழுது கதறி கண்ணீர் வடித்திருக்கிறார். அது வீடியோப் பதிவாக ஆன்லைனில் வெளியாக, அடுத்த சில மணிநேரத்தில் உலக வைரல் ஆகிவிட்டது. இந்த வீடியோவைப் பார்த்த மணிப்பூர் முதல்வர் பைரன் சிங், பாப்பாவைப் பாராட்டி, மணிப்பூர் முழுக்க மரங்கள் வளர்க்கும் ‘`முதலமைச்சரின் பசுமைத் திட்டம்’’ என்கிற சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கத்துக்கு பிராண்ட் அம்பாசிடர் ஆக்கிவிட்டார். பசுமைப் பாப்பா