Published:Updated:

`இந்தியன் 2’-விலிருந்து விலகிய ரவிவர்மன்! - புதிய ஒளிப்பதிவாளர் யார்?

ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் பல்வேறு தடைகளைக் கடந்து நடக்க இருக்கிறது. இதன் ஒளிப்பதிவாளராக கமிட்டாகியிருந்த ரவி வர்மன், கால் ஷீட் பிரச்னையால் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார்.

இந்தியன் 2
இந்தியன் 2 ( கமல் ஹாசன் )

ஷங்கர் இயக்கத்தில் கமல், மனீஷா கொய்ராலா, சுகன்யா, நெடுமுடி வேணு நடிப்பில் மெகா ஹிட்டடித்த படம் 'இந்தியன்'. இந்தப் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகள் கடந்த நிலையில், தற்போது 'இந்தியன் 2' பல்வேறு தடைகளைக் கடந்து உருவாகி வருகிறது.

ரத்னவேலு
ரத்னவேலு

கமல் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்சிங், ப்ரியா பவானிசங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பல நட்சத்திர பட்டாளங்கள் இதில் நடிக்க இருக்கின்றனர். படத்தின் பூஜை ஆரம்பித்த பிறகு, பல்வேறு சிக்கல்களால் படம் பாதியிலேயே நின்றது.

ஒரு வழியாக பல தடைகளைக் கடந்து படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறார்கள். படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமாகியிருந்த நிலையில், ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் கமிட்டாகியிருந்தார். பின், கால்ஷீட் பிரச்னைகளால் அப்படத்திலிருந்து அவர் விலகிக்கொண்டார்.

இந்தியன் ஸ்டில்ஸ்
இந்தியன் ஸ்டில்ஸ்

'இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனதற்கு இதுவும் ஒரு காரணம். தவிர, மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் ரவி வர்மன் ஒளிப்பதிவாளராகக் கமிட்டாகியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் புது ஒளிப்பதிவாளராக ரத்னவேலு ஒப்பந்தமாகியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'எந்திரன்' படத்தில் இவர் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் 15-ல் `இந்தியன் 2' ஷூட்டிங்; அடுத்து `தலைவன் இருக்கின்றான்' படப்பிடிப்பு!