Published:Updated:

சீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும் கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்!

இந்தியன் 2

இந்தியன்-2 படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படம் ரிலீஸாகிவிட வேண்டும் என்பது கமல் கணக்கு. ஆனால்...

சீனாவில் கொரோனா... இத்தாலிக்குப் பறக்கும் கமல்... `இந்தியன் - 2' அப்டேட்ஸ்!

இந்தியன்-2 படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படம் ரிலீஸாகிவிட வேண்டும் என்பது கமல் கணக்கு. ஆனால்...

Published:Updated:
இந்தியன் 2

காலில் அறுவைசிகிச்சை காரணமாக பிரேக்கில் இருந்த கமல்ஹாசன், இப்போது மீண்டும் ஷூட்டிங்கைத் தொடங்கிவிட்டார். தற்போது பூந்தமல்லியில் உள்ள இவிபி-யில் நடைபெற்றுவரும் இந்தியன் -2 படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்துவருகிறார் கமல்.

24 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த ' இந்தியன்' படம், நடிகர் கமல்ஹாசனுக்கும் இயக்குநர் ஷங்கருக்கும் மிக முக்கியமான படம். 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க ஆரம்பித்த கமலுக்கு பெரிய வரவேற்பு கிடைக்க, அந்த மேடையிலேயே 'இந்தியன் -2' படத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். முதலில் தெலுங்கு தயாரிப்பாளர் 'தில்' ராஜுதான் படத்தைத் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் லைகா, இந்தியன் -2 புராஜெக்ட்டை கையில் எடுத்தது.

இந்தியன் 2
இந்தியன் 2

முதல் பாகத்தில்... கமலோடு கவுண்டமணி, செந்தில் நடித்த காமெடிக் காட்சிகள் பெரிதும் ரசித்துப் பார்க்கப்பட்டது. இதில், காமெடிக்கு முதல்முறையாக கமல்ஹாசனோடு இணைந்து நடித்திருக்கிறார் விவேக். முதலில் கமலுக்கு ஜோடியாக நயன்தாரா பெயரை அறிவித்தனர். நயன்தாராவும் தேதிகளை ஒதுக்கினார். ஆனால், நயன்தாரா ஒதுக்கிய தேதிகளில் இந்தியன் -2 ஷூட்டிங் நடக்கவில்லை. அதனால், நயன்தாரா அந்தப் படத்துக்குக் கொடுத்த தேதிகளை அப்படியே விஜய் நடித்த 'பிகில்' படத்துக்கு மாற்றினார். இந்தியன்-2-வில் இருந்து நயன்தாரா விலகியதால், காஜல் அகர்வால் ஹீரோயினானார். இவரும் கமலும் நடிக்கும் காட்சிகள் இனிமேல்தான் படமாக்கப்பட இருக்கின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

முன்னதாக டைரக்‌டர் ஷங்கர், தனது படக்குழுவோடு ஹாலந்து, போலந்து, உக்ரைன், சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று 'இந்தியன் -2' படப்பிடிப்பு நடத்துவதற்கான இடங்களைத் தேர்வு செய்துவிட்டு வந்தார். சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்தது. ஒரு பக்கம் ' இந்தியன் -2' ஷூட்டிங், இன்னொரு பக்கம் மக்கள் நீதி மையத்தின் மீட்டிங் என்று இரட்டைக் குதிரை சவாரி செய்துகொண்டிருந்தார் கமல். இதற்கிடையில், ராஜஸ்தான் சென்று படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்து, மீண்டும் சென்னையில் ஷூட்டிங் நடந்தது. ஒருநாள், கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது கமல்ஹாசனின் காலில் இருந்து அதிகப்படியான ரத்தம் வெளியாக, உடனடியாக அறுவைசிகிச்சைக்கான முடிவு எடுக்கப்பட்டது.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்
இந்தியன்

சிகிச்சை முடிந்து, மீண்டும் பழைய உற்சாகத்துடன் 'இந்தியன் -2' படப்பிடிப்பில் நடித்துவருகிறார் கமல். இதில், 300 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்குபெறும் பிரமாண்ட சண்டைக் காட்சியை ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் ஒருவர் அமைக்கிறார். தமிழ், மலையாளத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராகப் பணியாற்றிய தியாகராஜன், இதில் இணைந்து பணியாற்றுகிறார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, சென்னை தரமணியில் உள்ள எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் சண்டைக் காட்சிக்கான ரிகர்சல் 300 கலைஞர்களுடன் நடந்தது. இப்போது இதன் படப்பிடிப்பு, ஈவிபி ஃபிலிம் சிட்டியில் உள்ள பிரமாண்ட அரங்கில் படமாக்கப்பட்டு வருகிறது.

இந்தியன் முதல்பாகத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், இந்தியன் தாத்தா வெளிநாட்டில் இருக்கும் டெலிபோன் பூத்திலிருந்து போனில் பேசுவார். இந்தக் காட்சி சீனாவில் படமாக்கப்பட்டது. இப்போது, அதன் தொடர்ச்சிக்காக கடந்த 24 ஆண்டுகளாக இந்தியன் தாத்தா சீனாவில் என்ன செய்துகொண்டிருந்தார் என்கிற காட்சிகளைப் படமாக்க ஷங்கர் திட்டமிட்டிருந்தார். அதற்காக, ஏற்கெனவே ஷங்கர் சீனா சென்று, அங்கு ஷூட்டிங் நடத்தவேண்டிய பகுதிகளைப் பார்வையிட்டு, அனுமதியும் வாங்கிவைத்திருந்தார். ஆனால், சீனா இப்போது, கொரோனா வைரஸ் நோயால் நிலைகுலைந்து நிற்பதால், இந்தியன் 2-வின் திட்டங்களும் மாறிப்போயிருக்கிறது. சீனா, மலேசியா, தாய்லாந்து என கிழக்காசிய நாடுகள் அனைத்திலுமே இந்த வைரஸ் பிரச்னை இருப்பதால், இப்போது இத்தாலிக்கு பறக்க இருக்கிறது.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

இந்தியன்-2 படத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்பதில் கமல் தீவிரமாக இருக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்குள் படம் ரிலீஸாகிவிட வேண்டும் என்பது கமல் கணக்கு. ஆனால், படப்பிடிப்பு நீண்டுகொண்டுபோவதோடு, கிராபிக்ஸ் வேலைகளும் அதிகம் இருப்பதால், படம் எப்போது ரிலீஸ் என்பதில் தொடர்ந்து சர்ப்ரைஸ் நீடிக்கிறது.