Published:Updated:

ஆகஸ்ட் 15-ல் `இந்தியன் 2' ஷூட்டிங்; அடுத்து `தலைவன் இருக்கின்றான்' படப்பிடிப்பு!

எம்.குணா

கமல், ஷங்கர் கூட்டணியில் தயாராகும் `இந்தியன் 2' படத்தின் பிரச்னைகள் தீர்ந்துள்ளது.

இந்தியன் 2
இந்தியன் 2

இந்தியா முழுக்க மானாவாரியாக மழை கொட்டித்தீர்த்து வெள்ளக்காடாகக் காட்சி அளிக்கிறது. சென்னைக்கு எப்போ மழைவரும் என்று எதிர்பார்த்துக் கிடந்ததுபோல, தமிழ்சினிமாவில் `இந்தியன் 2' படத்தின் ஷூட்டிங் எப்போது நடக்கும் என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுவந்தனர் கமல் ரசிகர்கள். கமல், ஷங்கர், லைக்காவுக்குள் நடந்த முக்கோணச் சிக்கல் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்தர தின நாளில் இந்தியன் தாத்தா படப்பிடிப்புக்குச் செல்லவிருக்கிறார்.

கமல்
கமல்

ஷங்கர் இயக்கும் `இந்தியன் 2' படத்தை லைக்கா நிறுவனம் நேரடியாகத் தயாரிக்கிறது. தனது அரசியல் பயணத்துக்கு `இந்தியன் 2' திரைப்படம் பெரும் பலமாக அமையும் என்கிற நம்பிக்கையோடு இருக்கிறார், கமல்.

தவிர, கமல்ஹாசன் அடுத்து நடித்து இயக்கவிருக்கும் `தலைவன் இருக்கின்றான்' திரைப்படமும் அரசியல் நெடி அதிகமுள்ள படமாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இந்தப் படத்தை தயாரிக்கும் முழுப்பொறுப்பையும் கமலிடமே ஒப்படைத்தது, லைக்கா நிறுவனம்.

kamal
kamal

ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் `தலைவன் இருக்கின்றான்' படத்தைத் தயாரித்து, இயக்கி, நடித்துக்கொடுக்க லைக்கா நிறுவனத்திடம் கமல்ஹாசன் ஒப்பந்தம் போட்டிருக்கிறார்.