Published:Updated:

'தர்பார்' படத்தில் இணைந்த இந்திய கிரிக்கெட் வீரரின் அப்பா!

உ. சுதர்சன் காந்தி.

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் 'தர்பார்' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

யோக்ராஜ் சிங்
யோக்ராஜ் சிங்

ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் காம்போ முதன்முதலாகக் கூட்டணி அமைத்திருக்கும் படம் 'தர்பார்'. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 15-ம் தேதி முடிந்திருந்தது. போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். 27 ஆண்டுகளுக்குப் பின் ரஜினி படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் சிவன். 'பேட்ட' படத்தைத் தொடர்ந்து அனிருத் இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார். தவிர, நிவேதா தாமஸ், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மே 15-ம் தேதி முடிவு பெற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

யுவராஜ் சிங் - யோக்ராஜ் சிங்
யுவராஜ் சிங் - யோக்ராஜ் சிங்

இந்தப் படத்தின் இன்ட்ரோ பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற்ற பின், பஞ்சாபி சினிமாக்களில் கவனம் செலுத்தி வருகிறார். சில பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். 'தர்பார்' படத்தில் ரஜினி நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் இவர் நடித்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.